(Photo) கல்முனை, சம்மாந்துறை பிரதேசங்களில் களவு, கொள்ளை, போலி நாணயத்தாள் பாவணை தடுப்பதற்கான உயர்மட்டக் கூட்டம் - Sri Lanka Muslim

(Photo) கல்முனை, சம்மாந்துறை பிரதேசங்களில் களவு, கொள்ளை, போலி நாணயத்தாள் பாவணை தடுப்பதற்கான உயர்மட்டக் கூட்டம்

Contributors
author image

ஹாசிப் யாஸீன்

கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இடம்பெறுகின்ற களவு, கொள்ளை, போலி நாணயத்தாள் பாவணை ஆகியவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராயும் அரச, தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடான உயர்மட்டக் கூட்டம் நேற்று (25) சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டவுள்யு.ஏ.கபார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட் மற்றும் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச, தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
தொழில்நுட்பத்துடன் கூடிய களவு, கொள்ளை நிகழ்வுகள் தற்போது நாட்டில இடம்பெறுகின்றன. இதில் அதிகமாக பாடசாலை மாணவர்கள் பொழுதுபோக்கிக்காக ஈடுபடுவதோடு ஏனையவர்களும் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம் மாணவர்கள் மத்தியில் இன்று கணணி தொழில்நுட்ப அறிவு அதிகரித்துக் காணப்படுவதாகும்.
 
எனவே எமது பிரதேசத்திலுள்ள வங்கிகள் தங்களது பாதுகாப்பினை உயர்தொழில்நுட்பம் கொண்ட சீ.சீ.டி கெமறாகள் மூலம் மேற்கொள்ளுமாறும், போலி நாணயத்தாள் விடயத்திலும் எச்சரிக்கையாக இருக்குமாறும் இதன்போது கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டவுள்யு.ஏ.கபார் கேட்டுக் கொண்டார்.

 

13

 

14

 

15

 

16

Web Design by Srilanka Muslims Web Team