Samsung Galaxy Round – சாம்சங் கேலக்ஸி ரவுண்ட். ஒரு பார்வை - Sri Lanka Muslim

Samsung Galaxy Round – சாம்சங் கேலக்ஸி ரவுண்ட். ஒரு பார்வை

Contributors

மொபைல் தொழில்நுட்ப துறையில் ஒரு புதிய புரட்சியை இந்த நூற்றாண்டில் ஏற்படுத்தி வருகிறது சாம்சங் நிறுவனம். ஐபோன் துறையில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருந்த ஆப்பிளை முந்திக்கொண்டு தொட முடியாத உயரத்திற்கு சென்று கொண்டிருக்கும் இதன் அசுர வளர்ச்சியை கண்டு, தொழில்நுட்பத்துறை ஆச்சர்யம் அடைகிறது.
தற்போது சாம்சங் அறிவித்துள்ள வளைந்த தன்மையுள்ள ஸ்மார்ட்போன் குறித்துதான் ஊரெங்கும் பேச்சு. கேலக்ஸி ரவுண்ட் என அழைக்கப்படும் இந்த நெகிழும் தன்மை கொண்ட ஐபோன், கீழே போட்டாலும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் உறுதியாக இருக்கும்.
கொரிய இணையதளம் ஒன்று இந்த புதிய மாடல் ஐபோன் மிக விரைவில் வெளியாவதை உறுதி செய்துள்ளது ஆனால் எந்த நாளில் வெளியாகும் என்பது அறிவிக்கப்படவில்லை.  இதன் உறுதித்தன்மைக்கு காரணம், இதன் டிஸ்ப்ளே கண்ணாடிக்கு பதிலாக நுண்ணிய பிளாஸ்டிக்கினால் ஆனதுதான். எனவேதான் நெகிழும் தன்மை இதற்கு இருக்கிறது. அதாவது வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது. இன்னும் உங்களுக்கு விளங்கும்படி சொல்லவேண்டும் என்றால் உங்கள் காதலியின் இடுப்பு போல இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்களேன்….
தென்கொரியாவில் இம்மாதம் உறுதியாக சாம்சங் கேலக்ஸி ரவுண்ட் வெளியாகும் என சாம்சிங் நிறுவனத்தின் பிஸினஸ் தலைவர் டி.ஜே. லீ என்பவர் கொரிய தொலைக்காட்சி ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் கேலக்ஸி நோட் மாடலை தாங்கள் குறிப்பிட்ட அதே காலத்திற்குள் அறிமுகப்படுத்தியதுபோல இம்முறையும் தங்கள் வாக்கு தவறாது என்பதை நினைவுபடுத்தினார்.
சாம்சங் ரவுண்ட் என்ற பெயரை உலகம் முழுவதும் டிரேட்மார்க் செய்துள்ளது இந்த நிறுவனம். இனி வேறு எந்த நிறுவனமும் ரவுண்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தி தங்களது படைப்பை வெளியிட முடியாது என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.
எல்.ஜி. நிறுவனமும் வளைந்து கொடுக்கும் தன்மையுடைய ஐபோன் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் கூறுகின்றன.(thed)

samsung round new1

Web Design by Srilanka Muslims Web Team