SLMC அமைச்சர் போதையில் கலாட்டா; புல்மோட்டையில் சம்பவம் - Sri Lanka Muslim

SLMC அமைச்சர் போதையில் கலாட்டா; புல்மோட்டையில் சம்பவம்

Contributors
author image

Editorial Team

திருகோணமலை -புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு இரண்டு மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (02) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு  நடைபெற இருந்தது.

 

ஆனாலும் புல்மோட்டை பகுதியிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களினால் குதூகலமாக கொண்டாடப்படவிருந்த இந்நிகழ்வு இடை நிறுத்தப்பட்டுள்ளது.

 

முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான புல்மோட்டை பகுதிக்கு கிழக்கு மாகாண  அமைச்சர் ஒருவர் நேற்றிரவு மது போதையில் வருகை தந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் முரண்பட்ட காரணத்தினால் இந்நிகழ்வு ரத்து செய்யப்படுவதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுவதுடன் அப்பகுதியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.

 

முஸ்லிம் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் மது போதையில் வருகை தந்து மக்கள் மனதை துன்புறுத்தியதினால் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புல்மோட்டை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வருகையை எதிர் பார்த்துக் கொண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியிலும் கசப்பு தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

 

அத்துடன் கிண்ணியா -மூதூர் பகுதிகளில் நாளை இடம்பெற உள்ள நிகழ்வுகளுக்கு ரவூப் ஹக்கீம் கலந்து கொள்ளலாம் எனவும் முக்கிய பிரதி நிதியொருவர் குறிப்பிட்டார். (ஜேவிபி)

Web Design by Srilanka Muslims Web Team