அமைச்சர் ஹக்கீம் சுகயீனம் ; SLMC - TNA பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு - Sri Lanka Muslim

அமைச்சர் ஹக்கீம் சுகயீனம் ; SLMC – TNA பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

Contributors
author image

Editorial Team

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் இடையே இன்று கல்முனையில் இடம் பெறவிருந்த கலந்துரையாடல் திகதி அறிவிப்பு இன்றி பிற்போடப்பட்டுள்ளது.

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு ஏற்பட்ட திடீர் சுகவீனமே இதற்கான காரணம் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

 

இந்தநிலையில், எதிர்வரும் புதன் கிழமையின் பின்னர், கலந்துரையாடல் தொடர்பான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னதாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான கலந்துரையாடல் இன்று கல்முனையில் இடம் பெறவிருந்தமை குறிப்பிடதக்கது.(sm)

Web Design by Srilanka Muslims Web Team