SLTJக்குத் தெரிந்த ஒன்று இந்த ஆர்ப்பாட்டம் மட்டுமே: ஒரு சகோதரரின் அதிர்ச்சிப் பதிவு! » Sri Lanka Muslim

SLTJக்குத் தெரிந்த ஒன்று இந்த ஆர்ப்பாட்டம் மட்டுமே: ஒரு சகோதரரின் அதிர்ச்சிப் பதிவு!

sari

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Rasmy Galle , நன்றி முகநூல்


முகநூலுக்குள் நான் பிரவேசித்ததே எஸ்.எல்.டீ.ஜே. என்ற பெயரில் உலாவித் திரிந்த பல எருமைகளை வேட்டையாடத்தான். முழுக்க முழுக்க பிற முகாம் சார்ந்தவர்களைக் கழுவியூற்றுதல், அவதூறு பரப்பல், குறைகளைக் கிளறுதல், அதனை வைத்து ஆத்தல் எடுத்தல் என்று முகநூலை நாரடித்துக் கொண்டிருந்த வேளை அவர்களுடைய லெவலுக்கே இறங்கி அவர்களுக்கு அடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

2013 – 2014 களுல் Fast Raider என்ற பெயரில் ஒரு பீ.ஜே. விசிறி தனிநபர்களின் மானங்களைக் கப்பலேற்றிக் கொண்டிருக்கும் போதுதான் நான் முகநூலுக்குள் சரியாகப் பிரவேசித்தேன். பல கட்டங்களில் இவர்களுடைய போலிகளைத் தோலுறித்ததனால் தான் இன்று வரை இந்த எஸ்.எல்.டீ.ஜே. என்ற பன்போய்ஸ் என்னோடு எப்போதும் வைராக்கியத்தோடு செயல்படுவதும், என்னைக் கலாய்த்து வரும் பதிவுகளில் உடனடியாக ஆஜராகி ஸ்மைல் ரியக்‌ஷன் கொடுத்து தமது அரிப்புக்களைத் தீர்த்துக் கொள்வதும்.

எங்காவது ஒரு பிரச்சினை, முரண்பாடு வருமா என்று ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள். ஒரு இயற்கை அனர்த்தம் வந்ததென்றால் எல்லோருக்கும் முன் நாம் களத்திற்கு வந்து ஏதோ ரெண்டு வேலையைச் செய்து விட்டு தாம் மட்டுமே பணி செய்தது போல் பெரிய விளம்பரப் பலகைகளோடு முகநூலை நிரப்புவார்கள். இதனைக் காணும் அவ்வமைப்பின் வாசிப்புக் கலாச்சாரமே இல்லாத, பொது அறிவே இல்லாத அடிமட்ட தொண்டர்கள் சிலர் உடனடடியாக, எங்கே அந்த அமைப்பு? எங்கே இந்த அமைப்பு ? எங்கே அந்தக் கோழைகள் என்று எழுதத் தொடங்கி விடுவானுகள்.

இதனைக் கண்ட மற்ற அமைப்பு தொண்டனொருவன் அவசரப்பட்டு ஏதாவது இவர்களுக்ெகதிராகக் கிருக்கி விட்டால் உடனே அதனை வைத்து அவர்களுடைய வழமையான கலாய்த்தல், பீத்தல் வேலைகளைத் தொடங்கிவிடுவானுகள். ஒரு இயற்கை அனர்தத்ம், இனக்கலவரம் வந்தால் நாட்டிலுள்ள எல்லா அமைப்புக்களும் ஏதோ ஒரு வகையில் பங்காற்றும். தரீக்காக்கள் அவர்களால் முடிந்ததனை பள்ளிவாயல் தோறும் சேகரித்து விநியோகிப்பார்கள். தப்லீக் ஜமாஅத் பொதுவான அமைப்பில் பெனர்கள் எதுவுமின்றி அவர்களுடைய பங்களிப்பினை வழங்குவார்கள்.

ஜமாஅதே இஸ்லாமி அதனுடைய சமூக சேவைப் பிரிவான Serendif Foundation for Relief and Development (SFRD) நிறுவனத்தினூடாகவும், அதன் மாணவர் பிரிவான ஜம்இய்யதுத் தலபா ஊடாகவும் நிறைய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பார்கள். நான் அறிந்தவரை இயக்கங்களில் அதிகமான சமூகப் பணிகளை நிறைவேற்றுவது SFRD யும், தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜம்இயயது ஷபாபும், ஜமாஅதுஸ் ஸலாமாவின் எம்.எப்.ஸீ.டீ.யும் தான். இவ்வனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து தேசிய சூறா கவுன்ஸில் மற்றும் ஜம்இய்யதுல் உலமா ஆகியவை பணியாற்றும். இவற்றை அறியாத இந்த எஸ்.எல்.டீ.ஜே. என்ற  அமைப்பின் அடிமட்டத் தொண்டர்கள் அந்த நாள் கொஞ்சமும் மற்றஅமைப்புக்களைக் கழுவியூற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

அழுத்கம பிரச்சினையின் போதும் இப்படித்தான். எல்லோரும் களத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது இவர்களுக்கு வேறு யோசனை வந்து விட்டது. நாம வேற வித்தியாசமாகக் காட்டனுமே. என்ன பண்ணலாம். உடனடியாக அறிவித்து விட்டார்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் என்று. இவர்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி வழங்காத பாதுகாப்புப் பிரிவு “நீங்க ஆணியே புடுங்க வானம்” நாங்க எல்லா பொலிஸ் நிலையங்களுக்கும் எல்லா ஊர்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு பணிப்புரை விடுத்திருக்கின்றோம் என்று கூறி எல்லா பொலிஸ் நிலையங்கள், அரசமட்டங்களுக்கு அனுப்புள்ள ஒரு கடித்தின் புகைப்படப் பிரதியைக் கையில் கொடுத்துள்ளனர்.

உடனே, முகநூலில் “எஸ்.எல்.டீ.ஜே.யின் வேண்டுகொளை ஏற்று உடனடியாக எல்லா பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டு விட்டது” என்று பீற்றத் தொடங்கி விட்டனர். இவர்களுடைய இந்தப் பொய்யை பலமாக நான் தோலுறிக்கவே மூடிக் கொண்டு வேறு சண்டைகளை இழுத்துப் போட்டு விட்டு ஒதுங்கிவிட்டார்கள். மஹிந்த ராஜபக்க பலஸ்தீனுக்கு ஒரு சிறு நிதியுதவி வழங்கிய போது மஹிந்த வைப் புகழ்ந்து போஸ்டர் அடித்த வேளையிலும், பொதுபலசேனாவின் நடவடிக்ைககள் பலமாக இருக்கும் போதே அவர்களைப் போன்று இவர்களும் எதிர்நடவடிக்ைககள் மேற்கொள்ளும் போதும் நாம் கூறினோம், இவர்களுக்கும், அரசுக்கும் இடையில் ஒரு டீல் இருக்கு. சரியாகவே, இவர்களுக்கும் கோத்தாபயவுக்கும் இடையில் இருந்த டீல் வௌிப்பட்டது.

இவர்களுக்குத் தெரிந்த ஒன்று இந்த ஆர்ப்பாட்டம் மட்டுமே. இதனை விட ஒரு பிரச்சினையை முறையாக அணுகி நிதானமாக அதனை கொண்டு செல்லும் பக்குவமோ, முதிர்ச்சியோ இதன் தலைவர்களுக்கு இல்லை. அதனால் தான் அடிக்கடி இவர்களின் தலைவர்கள் அங்குமிங்கும் பாய்ந்து கொண்டிருப்பார்கள். அதன் பின் அவர்களுக்கு கிடைக்கும் பரிசு ” பொண்புடி” கேஸ்தான். அதுவரை அவர்களது குறைகளை வௌிப்படாமல் மிகக் கவனமாக மூடி மறைத்துக் கொண்டு அடுத்தவர்களின் தனிப்பட்ட விவகாரங்களைக் கிளறிக் கொண்டே இருப்பார்கள்.

பலூன் விவகாரத்தினை அதிகம் ஊதிப் பெருப்பித்த பெறுமையும் இவர்களையே சாறும். கடைசியாக, இந்துக் கல்லூரி விவகாரத்திலும், அப்பிரச்சினை சம்பந்தமாக எமது பல முகநூல் நண்பர்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து பதிவுகளை எழுதி தமிழ் சகோதரர்களையே எமக்கு ஆதரவாக எழுத வைத்துக் கொண்டிருந்த நேரம், கொல்லப்பட்ட தமிழ் சகோதரியின் படங்களைக் கிளறி, அச்சிறுமியின் உடையைக் கண்டால் எமக்கும் தான் குறி விரைக்கின்றது என்ற பாணியில் எழுதி முழு முஸ்லிம் உம்மத்துக்கும் “பெருமை” தேடித் தந்தார்கள். அது முடிந்த கையோடு, இன்று சேலையை இழிவுபடுத்தி பதாதைகளைத் தூக்கிய வண்ணம் ஆர்ப்பாட்டம். இவனுகளுடைய மூளை எப்படித்தான் இந்த மாதிரியே சிந்திக்கின்றது என்று விளங்குவதில்லை. சேலை உலக மகா ஆபாச உடை என்று இந்த மடையனுகள் எழுதினால், இறுக்கமான, ஆபாசமான ஆபாயாக்களின் புகைப்படங்களோடு அவனும் எம்மைக் கலாய்க்கத்தான் செய்வான்.

கிந்தோட்டைப் பிரச்சினைக்குப் பின்னர் இன்று வரை அது சார்ந்த செயற்பாடுகளில் களத்தில் பணியாற்றுபவன் என்ற வகையில் எம்மை அழகாக வழி நடாத்தியது தேசிய சூறா கவுன்ஸில், Voice of Movement – V move, மட்டும் ARC போன்ற நிறுவனங்களே. ஆனால் அவர்கள் இவர்களைப் போன்று தம்மட்டம் அடித்துக் கொள்வதில்லை. ஒரு ஆர்ப்பாட்டத்தினை செய்து விட்டு நாம் தான் செய்தோம், மற்ற கோழைகள் எங்கே என்று பீற்றிக் கொண்டிருப்பதில்லை. சுருங்கச் சொன்னால், இந்த எஸ்.எல்.டீ.ஜே. என்ற அமைப்பு ஒரு ஆணியையும் இதுவரை சரியாகப் புடுங்கவில்லை. அவ்வளவுதான்.

இனி இரண்டு நாட்களுக்கு என்னைக் கலாய்த்து, என் பதிவிலுள்ள எழுத்துப் பிழைகளைக் கலாய்த்து பதிவுகள் வௌியாகும். அதனை சிலர் எனக்கு அறிவிப்பார்கள். நான் சிரித்துவிட்டு லாவகமாகக் கடந்து விடுவேன்.

link – facebook

sari

Web Design by The Design Lanka