"SOLIDARITY DAY 2014" முழு நாள் நிகழ்வு - Sri Lanka Muslim
Contributors
author image

Fauzer Mahroof

நேற்று சனிக்கிழமை “SOLIDARITY DAY 2014” முழு நாள் நிகழ்வு நடைபெற்றது. ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு தமது ஒருமைப்பாட்டினையும் தோழமையையும் ஆதரவையும் ,பிரித்தானியாவிலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் , சோசலிச அமைப்புகள், அரசியல், சமூக அமைப்புகள் இந்த நிகழ்வில் கலந்து உறுதிப்படுத்தின. இலங்கையின் சமகால அரசியல் நிலை குறித்த அரசியல் கலந்துரையாடலுடன் நிகழ்வு ஆரம்பித்தது..

 

முள்ளி வாய்க்கால் படுகொலை தொடக்கம், முஸ்லிம் மக்கள் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறை, ஜனநாயக உரிமைகளை மதிக்கத் தவறும் இலங்கை அரசின் ஏதோச்சதிகாரப் போக்கும் அதன் இனவாத அரசியல் செயல்முறை மீது பலத்த அரசியல் கண்டனங்கள் எழுப்பட்டதுடன், புலம்பெயர் நாடுகளில் அதிகரிக்கும் சுரண்டல், தொழிலாளர்கள் மீது காட்டப்படும் பாரபட்சம், மற்றும் இன்வாத போக்குகளுக்கு எதிரான விழிப்புணர்வும் முன்வைக்கப்பட்டது.

 

பல தளங்களிலும் ஒடுக்கப்படுகின்ற மக்கள் அனைவருமாக ஒன்றிணைந்து முன்செல்வதே ஒடுக்குமுறை சக்திகளுக்கு எதிரான பலமிக்க வழிமுறை என்பது கலந்து கொண்ட பல பேச்சாளர்களது வேண்டுகோளாக இருந்தது.

 

மன நிறைவையும் நம்பிக்கையையும் தந்த அரசியல் நிகழ்வு இது. ஒடுக்கப்படுகின்ற பல நாட்டு, காலாசார பின்புலங்களிலிருந்து வந்த கலை நிகழ்வுகளும் இந்த நாளுக்கு சிறப்பு சேர்த்தது..

 

இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்த Tamil Solidarity அமைப்பினருக்கும், குறிப்பாக இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள இளைய தலைமுறைக்கும் அவர்களின் உழைப்புக்கும் எமது தோழமை என்றும் உண்டு. நன்றி-(Fauzer Mahroof)

 

londen1

 

londen1.jpg2

 

londen1.jpg2.jpg3.jpg4

Web Design by Srilanka Muslims Web Team