யாழ்ப்பாணம் மக்கள் பணிமனை ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு » Sri Lanka Muslim

யாழ்ப்பாணம் மக்கள் பணிமனை ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு

IMG_9735

Contributors
author image

Farook Sihan - Journalist

மக்கள் பணிமனை தலைவரும் யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளைத்தலைவருமான பி.எஸ்.எம் சுபியான் மௌலவி  ஏற்பாடு செய்த  இப்தார் நிகழ்வு நேற்று (8) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பாக  நடைபெற்றது.

இவ் இப்தார் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வட மாகாண எதிர்கட்சி தலைவர் எஸ்.தவராசா யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
யாழ் மாநகர சபை முதல்வர் உரை
இஸ்லாத்தில் 5 தூண்களின் ஒன்றான இந்த ரமழான் மாதத்தில் முஸ்லீம் மக்கள் ஒன்றிணைவது போன்று ஏனைய விடயங்களில் மற்றைய சமூகத்துடன் ஒற்றுமையாக பணியாற்ற உறுதி பூண வேண்டும்.ஏனெனில்  எமக்கான உரிமைகளை பெறுவதற்கு சிறுபான்மையினரான நாம் ஒற்றுமையுடன் பெறுவதே இலகுவாகும்.அந்த ஒற்றுமையை இந்த நோன்பு மாதம் எமக்கு வலியுறுத்துகின்றது என கூறினார்.
IMG_9735
IMG_9709
snapshot187

Web Design by The Design Lanka