கல்முனை மாநகர புதிய ஆணையாளர் எம்.சி.அன்சார் கடமையேற்பு » Sri Lanka Muslim

கல்முனை மாநகர புதிய ஆணையாளர் எம்.சி.அன்சார் கடமையேற்பு

?

Contributors
author image

Aslam S.Moulana

கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக எம்.சி.அன்சார் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் முன்னிலையில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில், இதுவரை கல்முனை மாநகர ஆணையாளராக கடமையாற்றிய ஜே.லியாகத் அலி அவர்கள் கலந்து கொண்டு புதிய ஆணையாளரிடம் பொறுப்புக்களை கையளித்தார்.
இதில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி, கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.சத்தார், அப்துல் மனாப், மாநகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் உட்பட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு புதிய ஆணையாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதற்கு முன்னர் கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த இலங்கை நிருவாக சேவை அதிகாரியான எம்.சி.அன்சார் அவர்கள், காத்தான்குடி, எறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அதேவேளை கடந்த ஆறு வருடங்களாக கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த மருதமுனையை சேர்ந்த ஜே.லியாகத் அலி அவர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka