அட்டாளைச்சேனை புதிய பிரதேச செயலாளர் லியாகத் அலி கடமையேற்பு..! » Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை புதிய பிரதேச செயலாளர் லியாகத் அலி கடமையேற்பு..!

IMG-20180810-WA0057

Contributors
author image

Aslam S.Moulana

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.லியாகத் அலி அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் புதிய பிரதேச செயலாளர் வரவேற்கப்பட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான ஜே.லியாகத் அலி அவர்கள் கடந்த ஆறு வருட காலமாக கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றியுள்ளார்.

IMG-20180810-WA0057

Web Design by The Design Lanka