சட்ட விரோதச் செயல்களுக்கு இனிமேல் பேலியகொடையில் இடமில்லை » Sri Lanka Muslim

சட்ட விரோதச் செயல்களுக்கு இனிமேல் பேலியகொடையில் இடமில்லை

images (2)

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஐ. ஏ. காதிர் கான்


எவ்வித சட்ட விரோதமான செயல்களுக்கும் இனிமேல் பேலியகொடை நகர எல்லைக்குள் இடமளிக்கப் போவதில்லை என்ற தீர்மானமொன்றை, பேலியகொடை நகர சபை உறுப்பினர்கள் கொண்டுவந்துள்ளனர்.

நகர சபையைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலுடன் இத்தீர்மானத்தை, கடந்த மாதாந்த அமர்வின்போது எடுத்துள்ளனர்.

மக்களின் பெறுமதியான வாக்குகளினால், மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள நாம், மக்கள் பிரதி நிதிகள் என்ற அடிப்படையில், மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவித சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கும் இதன்பிறகு இந்நகர சபை வட்டாரத்துக்குள், நகர சபை ஊடாக அனுமதியளிக்க மாட்டோம் என்றும் சகல உறுப்பினர்களும் உறுதிப்பாடு செய்து கொண்டுள்ளனர்.

வர்த்தக நகரமாக விளங்கும் பேலியகொடை நகர எல்லைக்குள், வறிய நிலையில் வாழும் மக்களும் பெருமளவில் வாழும் நிலையில், போதைப்பொருள் உள்ளிட்ட மயக்க மருந்துகள் போன்ற சட்ட விரோத வியாபாரங்களுக்கும், இவை போன்றவற்றிட்கும் அடிமைப்பட்டவர்கள் வாழும் பிரசித்திபெற்ற ஒரு தளமாக அறிமுகமாகியுள்ள பேலியகொடை நகரை, இவற்றிலிருந்து மீட்பதே, தனதும் நகர சபை உறுப்பினர்களினதும் பிரதான குறிக்கோளாகும் என்று, நகர சபைத் தலைவர் ஆனந்த புஷ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

Web Design by The Design Lanka