அக்குறணை; வருடாந்த பொதுக் கூட்டம் » Sri Lanka Muslim

அக்குறணை; வருடாந்த பொதுக் கூட்டம்

IMG-20180810-WA0031

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மத்திய மலை நாட்டின் அக்குறணை எனும் நகரில் குருகொடை எனும் எழில்மிகு கிராமத்தில் 25 வருடங்களுக்கு மேலாக தனது சமூக, சன்மார்க்க சேவையை செய்து வரும் அரபுக்கல்லூரியே *தாருல் உலூம் அல்-மீஸானிய்யா*. இக்கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியமான *”இத்திஹாதுல் மீஸானிய்யீன்”* தனது வருடாந்த பொதுக்கூட்டத்தை 2018.08.04 ஆம் திகதி சனிக்கிழமையன்று மாத்தளையில் அமைந்துள்ள Grand City Hotel இல் நடாத்தியது.

அஷ்ஷெய்க் பர்ஹான் (மீஸானி) இன் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் கல்லூரியின் பணிப்பாளர் அல் ஹாஜ் இஹ்திஷாம் மீஸான் முஹிய்யத்தீன்,அவரின் புதல்வர் இஜாஸ் மீஸான் மற்றும் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் கலீலுர் ரஹ்மான் (ரியாதி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

இக்கூட்டத்தில், கடந்த வருட வேலைத்திட்டங்கள் மற்றும் நடப்பு ஆண்டிற்கான புதிய திட்டங்கள் ஆராயப்பட்டமை, செயலாளர் அஷ்ஷெய்க் ஷாகிர் (மீஸானி) அவர்களால் ஆண்டறிக்கையும் பொருளாலர் அஷ்ஷெய்க் இர்ஷாத் (மீஸானி)யினால் கணக்கறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு சபையின் அங்கீகாரம் பெறப்பட்டமை மேலும் புதிய உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டமை போன்றன கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகளாகும்.குறிப்பாக இத்திஹாதிற்கான யாப்பும் நிறைவேற்றப்பட்டமை இக்கூட்டத்தின் சிறப்பம்சமாகும்.

IMG-20180810-WA0030

IMG-20180810-WA0031

IMG-20180810-WA0033

Web Design by The Design Lanka