எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு » Sri Lanka Muslim

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

petrol price

Contributors
author image

Editorial Team

எரிபொருட்களுக்கான விலை சூத்திரத்தின் அடிப்படையில், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனவென, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், 95 ஒக்டென் பெற்றோல் லீற்றரின் விலை 2 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் லீற்றர் ஒன்றின் விலை ஒரு ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூலை மாதம் 10 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட விலை சூத்திரத்தின் பிரகாரம், 92 ஒக்டென் பெற்றோல் லீற்றரின் விலை 8 ரூபாவினாலும், 95 ஒக்டென் பெற்றோல் லீற்றரின் விலை 87 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

Web Design by The Design Lanka