அனஸ் அப்பாஸ் எழுதிய "தேசிய சாதனை மடல்" நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

அனஸ் அப்பாஸ் எழுதிய “தேசிய சாதனை மடல்” நூல் வெளியீட்டு விழா

38901490_2037380862952660_2861159491490021376_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

பிரதமர் அலுவலகத்தின், தேசிய ஊடக மத்திய நிலைய தகவல் உத்தியோகத்தரும், மீள்பார்வைப் பத்திரிகையின் முன்னாள் பத்தி எழுத்தாளருமான அனஸ் அப்பாஸ் எழுதிய “தேசிய சாதனை மடல்” நூல் வெளியீட்டு விழா மிகவும் விமர்சையாக தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் (கடந்த 07 செவ்வாய்க்கிழமை மாலை) நடைபெற்று முடிந்தது.

அரங்கமே நிரம்பி வழிந்த இந்நூல் வெளியீட்டை அஷ்-ஷெய்க் ரவூப் ஸய்ன் அவர்கள் தலைமை தாங்கினார். பிரதம அதிதியாக தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ M.H.A. ஹலீம் அவர்களும், கௌரவ அதிதியாக இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் கௌரவ துஞ்சா ஒஸ்சுகதார் அவர்கள் சார்பில் கௌரவ அர்ஷத் அவர்களும், சிறப்பு பேச்சாளராக தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களும், நூல் அறிமுக உரைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளரும் கவிஞருமான அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களும் பங்கேற்றனர்.

சாதனையாளர்கள், சிறப்பு ஊடக விருந்தினர், அரசியல் பிரமுகர்கள், சமூக சேவை பிரதிநிதிகள், இளைஞர்கள், கல்வித் துறை சார்ந்தோர் பங்குகொண்ட இந்நிகழ்வில் நூலாசிரியர் அனஸ் அப்பாஸ் பற்றிய அறிமுகத்தை மீள்பார்வை பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பியாஸ் முகம்மத் மேற்கொண்டார்.

கொழும்பில் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டோடு, நூலில் இடம்பெற்ற சாதனையாளர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நூல் வெளியீட்டை போகஸ் மீடியா நிறுவனமும், நிகழ்ச்சி ஏற்பாட்டை பலகத்துறை கலை இலக்கிய வட்டமும், விஷேட பங்களிப்பை SMFC குழுமமும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. பலகத்துறை கலை இலக்கிய வட்ட உப தலைவர் றிஸ்மி ஆசிரியரின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்

38891140_2037381672952579_8497240972889948160_n

38874484_2037392499618163_1722219076094263296_n

38658497_2037381366285943_6813201385803218944_n

38901490_2037380862952660_2861159491490021376_n

Web Design by The Design Lanka