"தென்கிழக்காசிய நாடுகளில் இஸ்லாம்" நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

“தென்கிழக்காசிய நாடுகளில் இஸ்லாம்” நூல் வெளியீட்டு விழா

FB_IMG_1534059259976

Contributors
author image

Hasfar A Haleem

தென்கிழக்காசிய நாடுகளில் இஸ்லாம்” என்ற தொனியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.ஹபீபுல்லாஹ் அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழா இன்று 2018/08/12 காலை கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

நூலாசிரியர் எம்.ரீ.ஹபீபுள்ளாவிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நூலின் ஒரு பிரதியினை இதன் போது பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்,கிண்ணியா நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் ,கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம். முகம்மட் நிஹார் மற்றும் முன்னால் நகர பிதா டாக்டர் ஹில்மி மஃரூப், கிண்ணியா நகரசபை பிரதித்தவிசாளர் ஐயுப் நளீம் மற்றும் கிண்ணியா உலமாசபை தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹிதாயதுல்லாஹ் நளீமி உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துசிறப்பித்தனர்.

FB_IMG_1534059259976

FB_IMG_1534059267343

FB_IMG_1534059270414

Web Design by The Design Lanka