ஆப்கானிஸ்தான் டியூஷன் சென்டர் மீது தற்கொலை தாக்குதல்: 48 பேர் பலி » Sri Lanka Muslim

ஆப்கானிஸ்தான் டியூஷன் சென்டர் மீது தற்கொலை தாக்குதல்: 48 பேர் பலி

_102982022_476309fe-154f-4767-8c48-df937fe5a4d0

Contributors
author image

Editorial Team

(Bbc)


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், டியூஷன் சென்டர் ஒன்றில் நிகழ்ந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 67க்கு மேலானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த கல்வி மையத்திற்குள் நுழைந்த தற்கொலை குண்டுதாரி, அங்கிருந்து மாணவர்களின் மத்தியில் தான் வைத்திருந்த குண்டை வெடிக்க செய்தார் என்ற போலீஸ் கூறுகிறது.

இந்த சம்பவம் நடைபெற்ற கல்வி மையமானது தலைநகரில் ஷியா முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடத்தில் அமைந்துள்ளது.

இந்த தாக்குதலை யார் மேற்கொண்டார் என்பது தெரியவில்லை. முன்னதாக ஐ.எஸ் குழுவினர் ஷியாக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

Web Design by The Design Lanka