டிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள் » Sri Lanka Muslim

டிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்

201808172012155371_Hundreds-of-US-newspapers-run-editorials-rebuking-Trump-for_SECVPF

Contributors
author image

Editorial Team

அமெரிக்காவின் அதிபராக உள்ள டிரம்ப் அவ்வப்போது ஊடகங்களில் தன்னை பற்றி விமர்சனமாக வரும் செய்திகளுக்கு கடுமையான எதிர்வினையை தெரிவிப்பார். அந்த ஊடகம் மற்றும் அந்த செய்தியை எழுதிய செய்தியாளரை திட்டி தீர்த்த பின்னர்தான் அவர் அமைதி அடைவார்.
இந்நிலையில், நேற்று காலை அவர் அமெரிக்காவின் முன்னணி செய்தி நாளிதழ்கள், காட்சி ஊடகங்களை குறிப்பிட்டு பொய் செய்தி ஊடகம் என ட்வீட் செய்திருந்தார். மேலும், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் செயல்படும் இத்தகைய ஊடகங்கள் அமெரிக்காவுக்கே தீங்கு எனவும் அவர் ட்வீட் செய்தார்.
இதற்கு, அமெரிக்க ஊடகங்கள் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளன. அங்குள்ள சுமார் 350-க்கும் மேலான செய்தி நாளிதழ்கள் இன்று டிரம்ப்பை விமர்சித்து தலையங்கம் வெளியிட்டுள்ளன.
அதிபரின் அறிக்கைகள், பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாகவும், செய்தியாளர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளன. ‘மற்றவர்களுக்கான பேச்சுரிமை இருப்பதே சிறந்த அமெரிக்கா’ என பாஸ்டன் குளோம் நாளிதழ் கூறியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழில், ‘செய்தியாளர்களும் மனிதர்களே, அவர்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், தனக்கு எதிரான செய்தி வந்தால் பொய் என்பதும், செய்தியாளர்களை தாக்குவதும் எந்த வகையான ஜனநாயகம்’ என கூறப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka