சிரியாவின் மறுகட்டமைப்புக்காக சவுதி அரேபியா ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி » Sri Lanka Muslim

சிரியாவின் மறுகட்டமைப்புக்காக சவுதி அரேபியா ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி

201808171933522582_Saudi-Arabia-says-its-given-100-million-USD-to-northeast_SECVPF

Contributors
author image

Editorial Team

வளைகுடா நாடான சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது. இதுதவிர, வடகிழக்கு பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக நடந்த ஐ.எஸ்.க்கு எதிரான சண்டையில் அவர்கள் வசமிருந்த அனைத்து பகுதிகளையும் அமெரிக்கா தலைமையிலான படை கட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான படையின் வசம் இருக்கும் ரக்கா நகரை சுற்றியுள்ள பல பகுதிகளை மறு கட்டமைப்பு செய்யவும், விவசாயம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி செய்யப்போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
சிரிய அதிபர் ஆசாத்தை கடுமையாக எதிர்க்கும் சவுதி, அமெரிக்காவுடன் கைகோர்த்து நிற்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka