பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார் - Sri Lanka Muslim

பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

  ஏ.எஸ்.எம்.ஜாவித் ,  பாறுக் ஷிஹான்


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்(வயது-64) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்.

இன்றைய தினம்(25) நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரது ஜனாசா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போது மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளதுடன் மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முஸ்லீம் மக்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்வுகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

20180825_115109

Web Design by Srilanka Muslims Web Team