எதிர்பார்ப்புக்களின் தோல்வி » Sri Lanka Muslim

எதிர்பார்ப்புக்களின் தோல்வி

politics

Contributors
author image

M.M.A.Samad

மனிதனாகப் பிறந்த ஒவ்வொரும் இலக்குடனும், அந்த இலக்கை அடைந்து கொள்ளும் எதிர்பார்ப்புடனுமே காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு, சமூக வாழ்வோடு இணைந்த ஒவ்வொரு விடயத்திலும் ஓர் இலக்கும், எதிர்பார்ப்பும்;, நம்பிக்கையும் சமூகங்களின் மத்தியில் இருப்பது இன்றியமையாதது. அத்;தகைய எதிர்பார்ப்பும்;, நம்பிக்கையும் நாட்டை ஆளும் அரசாங்கத்திலும்;, ஒவ்வொரு சமூகம் சார்ந்த அரசியல் தலைமைகளிலும்;, மக்கள் பிரதிநிதிகளிலும் அவர்கள் அளிக்கம் வாக்குறுதிகளிலும் காணப்;படுகிறது.

சமூகக் கட்டமைப்பின் விருத்தியில் அரசியல் அதிகாரம் முக்கியமானது. ஒரு சமூகத்தின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும்போதுதான் அச்சமூகத்தின் சமூகக் கூறுகள் விருத்தி காண்கின்றன. அவ்விருத்திக்கு பக்கபலமாக இருப்பது அரசியல் அதிகாரமாகும். அந்த அதிகாரத்தை வழங்குவது மக்களாகும்.

அதிகாரத்திற்கான ஆணையை மக்கள் வழங்குவதற்குள்ள மூலமே தேர்தலாகும்.
இலங்கையைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என பிரதான தேர்தல்கள் நடைபெறுகின்றன. இத்தேர்தல்களில் தங்களது வெற்றியை உறுதி செய்வதற்காகவும், மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் வாக்குறுதிகள் கட்சிகளினாலும், தலைமைகளினாலும், வேட்பாளர்களினாலும் வழங்கப்படுகின்றன. வழங்கப்;படும் வாக்குறுதிகளை நம்பி அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கின்றனர்.

ஆனாலும், மக்கள் வழங்கும் ஆணையின் மூலம்; அரசியல் அதிகாரத்தை பெறுகின்றவர்களினால் மக்களின் ஆணைக்கான எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படுகிறா என்பதே தற்போதுள்ள கேள்வியாகும். காலா காலமாக மக்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கிவிட்டு அவை நிறைவேற்றப்படாமல் காணப்படுவதும் மக்கள் ஆணையைப் பெற்றவர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்வதும் இலங்கையின் அரசியல் கலாசாரத்தின் மகோட்ஷத நிலை என்பதை மறுதலிக்க முடியாதுள்ளது. இவ்வாறான அரசியல் கலாசாரமே கடந்த பல தசாப்த காலமாக இந்நாட்டில் நிலை கொண்டுள்ளது.

ஆட்சியும் அதிகாரமும்
பல்லின சமூகம் வாழும் ஒரு நாட்டின் அனைத்துப் பிரதேசங்களும் அந்நாட்டின் ஆட்சியாளர்களினால் ஒரே விதமாகக் கவனிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும். அவ்வெதிர்பார்ப்பை நிறைவேற்றுவது அதிகாரத்தில் உள்ளவர்களின் பொறுப்பாகும். ஆனால், கடந்த காலங்களில் இந்நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களினால் இந்நாட்டின் ஓர் அங்கமாகவுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வேற்றுமையற்ற மனோநிலையில் அரவணைக்கப்படவில்லை என்ற மனப்பதிவு இம்மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

ஏறக்குறைய 60 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களின்; உரிமைகள் விடயத்தில் ஆட்சியாளர்கள் புறக்கணிப்பு செய்தபோது அதற்கெதிராக சாத்வீகப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன, அப்போராட்டங்கள் தோல்வியடைந்த நிலையில்; தமிழ் தலைமைகள் மக்கள்சார் உரிமைகளை பெற்றுத்தரார் என்ற நம்பிக்கையீனம் வலுப்பெற்ற போது அந்நம்பிக்கையீனம் ஆயுதப்போராட்டமாக மாற்றமடைந்தது.

அவை பல்வேறு அழிவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தியது வரலாறாகும்.
மக்களையும் மக்களின் சொத்துக்களையும் துவசம் செய்த மூன்று தசாப்த காலப் போர் சூழலின் பங்காளிகளாக தமிழ் மக்கள் காணப்படுகின்றபோதிலும், தமிழ் பேசும் மற்றுமொரு சமூகமான முஸ்லிம்களும் பங்காளிகளாக இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில,; முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்திலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதையும், அறிக்கைககள் சமர்ப்பிக்கப்படுவதையும் சாத்வீகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

இந்நாட்டில் இனப்பிரச்சினையும், இனப்புரிந்துணர்வின்மையும் ஏற்படக் காரணமாக இருந்தது ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்களேயன்;றி மக்கள் அல்ல. அவர்களின் ஆட்சியையும், அதிகாரத்தையும் தாங்கள் பிரநிதித்துவப்படுத்தும்; சமூகத்தின் மத்தியில் நிலைநிறுத்திக் கொள்வதற்காக மக்கள் அரசியல்வாதிகளால்; ஏவிடப்பட்டு இனப்பிரச்சினையை எரிய வைத்தார்கள், இன முரண்பாடுகளை உருவாக்கினார்கள் என்பதே நிதர்சனமாகும்.

இருப்பினும், சுதந்திரம் அடைந்தது முதல் 1989ஆம் ஆண்டு வரையான காலம் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஓரிரு ஆதரவுக் கட்சிகளின் அனுசரணையுடன் மாறி மாறி இந்நாட்டை ஆட்சி செய்தாலும், இவ்விரு கட்சிகளினதும் ஆளுமையே ஆட்சிக்குள் கையோங்கியிருந்தது. இருப்பினும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் குறிப்பாக 1989களின் பிற்பாடு பெரும்பான்மையினக் கட்சிகளின் ஆட்சி என்ற நிலை மாற்றப்பட்டது. சிறுபான்மைக் கட்சிகளின் பெரும்பான்மை ஆதரவுடனான அரசாங்கம் என்ற நிலை உருவானது.
அந்த ஆட்சியமைப்பே இந்த 8வது பாராளுமன்ற ஆட்சியிலும் தொடர்கிறது, இருப்பினும் 8வது பாராளுமன்ற ஆட்சியானது கடந்த காலங்களில் இ;டம்பெற்ற கூட்டாச்சியிலும் பார்க்க, ஒரு படி மேல் சென்று இந்நாட்டின் இருபெரும் பெரும்பான்மை கட்சிகளின் கூட்டிணைப்பினாலும் இதர சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது.

ஓன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகள் கொண்ட இரு பிரதான கட்சிகளும் 2015ல் கூட்டாட்சி அமைக்க ஒருமைப்பட்டு ஆட்சி அமைத்தபோதிலும், தற்போது இவ்;விரு கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள அதிகார முரண்பாடுகள் சிறுபான்மை சமூகங்களின் எதிர்பார்வை கேள்விக்குறியாக்கியிருக்கது என்பது தெளிவாகப் புலப்படுவதாக சிறுபான்மையினங்களைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
2015 ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலினூடாக 5,768,090 – 47.58 வீத வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்து 6,217,162 – 51.28 வீத வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிறிசேன பொது எதிர்கட்சிகளின் சார்பில் .நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றாh.;. தேர்தல் காலத்தில் அளி;க்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம், பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதோடு, அமைச்சரவை நியமனமும் இடம்பெற்று நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படும் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்;டது
என்பது அறிந்த விடயங்களாகும.;

புதிய அரசாங்கத்தின் மூலம் இந்நாட்டுக்கு நல்லவை பல நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் உருவானது. 2015 ஜனவரியில் உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்துதல், தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவருதல், அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்தல், தகவல் அறியும் சட்ட மூலத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், தற்போது அந்த நூறுநாள் வேலைத்திட்டம் தொடர்பில் கடந்த வாரம் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் அரசியல் தரப்பில் பெரும் பேசு பொருளாக மாறியதுடன் கூட்டாட்சியின் பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிப் பிரமுவர்களினால் அக்கருத்துக்கு; பதிளலிக்கப்பட்டு வரும் நிலையில், இரு கட்சிகளுக்கிடையிலான அதிகார முரண்பாடு பல்வேறு தளங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பதை காண முடிகிறது.

அதிகார முரண்பாடுகளின் அதிர்வுகள்
சிறுபான்மை சமூகங்களின் பங்களிப்புடன் இற்றைக்கு மூன்றரை வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இவ்விரு கட்சி தலைமைகளினாலும், பிரமுகவர்களினாலும் முன்வைக்கப்பட்டு வருகின்ற கருத்துக்களினால் தோல்வி அடந்து வருவதையே காண முடிகிறது.

கடந்த மே 30ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற மாதுலுவாவே சோபித்த தேரரின் 76வது பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களில் 100 நாள் வேலைத்திட்டமும் அதனுள்ளடக்கப்பட்ட வாக்குறுதிகளும் இந்நால்லாட்சி மீதான நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, 100 நாள் வேலைத்திட்டத்தை யார் தயாரித்தது என்று எனக்குத் தெரியாது. எனினும், அது முட்டாள்தனமான செயலாகும் என அதனைத் தயாரித்தவர்களுக்கு நான் கூற விரும்புகின்றேன் எனக் குறிப்பிட்டிருப்பதானது அத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களையும் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது என்பதைப் புரியக் கூடியதாகவுள்ளது.

’47 வருட கால அரசியலில் கடந்த மூன்று வருடங்களில் தான் இருந்ததை விட கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும், மாதுலுவாவே சோபித தேரரின் பிறந்த தின நிகழ்வுக்கு எனக்கு எந்தவொரு அழைப்பும் கிடைக்கவில்லையெனவும். எந்தவொரு தகவலும் வழங்கப்படவில்லையெனவும். இந்நாட்டின் அனைத்து செயற்பாடுகளும் இப்படித்தான் நடக்கின்றன என்றும் இந்த அரசாங்கத்தின் கடந்த மூன்று வருடங்கள் தொடர்பில் இன்னும் பல தகவல்களைப் பெற வேண்டுமாயின் என்னை அணுகுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, சுதந்திரக் கட்சியை இணைத்துக் கொண்டமையினால் அரசாங்கம் சீரழிந்ததாக பலர் கூறுகின்றனர்., நான் ஜனாதிபதி ஆகும் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு 47 ஆசனங்கள் மாத்திரமே இருந்தன.

எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் 142 ஆசனங்கள் இருந்தன. அதில் 127 பேர் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள். எனினும், அப்போது 47 ஆனங்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தேன’; என்றும் இன்னும் பல்வேறு விடயங்களைத் தொட்டுக்காட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசியிருப்பானது இந்நல்லாட்சி அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள அதிகார முரண்பாடுகளின் அதிர்வுகளாகவே கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாறு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கூறியுள்;ள விமர்சனங்களுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு வலியுறுத்தியிருந்தபோதிலும், ‘ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக வெளியேறி வந்த அனைவருடனும் இணைந்தே 100 நாள் திட்டத்தை தயாரித்தோம். தற்போது தெரியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்த திட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த விடயங்கள் பல உள்ளன. அகவே இத்திட்டத்தைத் தயாரித்தமைக்கான பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்கின்றது.’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பதானது முரண்பாடுகளின பாராதூரத்தைப் புலப்படுத்துகிறது.

இந்நல்லாட்சியின் பயணம் இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தொடருமெனவும், நல்லாட்சியினால் சிறுபான்மை சமூகங்களின் சமூக நலன்கள் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் எந்தளவு தூரம் முன்னெடுக்கப்படும் என்ற சந்தேசங்கள் தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் உருவாகியிருப்பதை சிறுபான்மை சமூகங்கள் மத்தியிலிருந்து வெளிவரும் கருத்துக்கள் மூலம் அறிய முடிகிறது. அத்துடன், 2016, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள், அதனூடாக அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் தொடர்பிலும்; மக்களின் நம்பிக்கையில் கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிவிப்பில,; வவுனியாவில் பொருளதார மையம், கொழும்பில் நிதி கேந்திர மையம், யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் பூங்கா, 2016 ஜனவரியிலிருந்து இலத்திரனியல் அடையாளா அட்டை, கடனட்டைகளுக்கான முத்திரை தீர்வுக் குறைப்பு, கிராம சேவகர் பிரிவுக்கு 1500 மில்லியன், மலையக வீடமைப்புக்கு 1000 மில்லியன், வருமானம் குறைந்தோருக்கு 100,000 வீடுகள், அரச ஊழியர்களுக்கு 150,000 வீடுகள், சமையல் எரிவாயு உட்பட 11 பொருட்களின் விலைக்குறைப்பு, கல்வித்துறைக்காக 90,000 மில்லியன், உயர்தரத்திற்கு பின்னர் தொழிற்பயிற்சிக் கட்டணம், பல்கலைக மாணவர்களுக்கு மடிக் கணினி பெறக் கடன், புத்தகம், சஞ்சிகை இறக்குமதி வரி நீக்கம், கட்டடிடத்துறையில் பயிற்சி பெறுவோருக்கு 10,000 ரூபா போன்ற அறிவிப்புக்கள் இடம்பெற்றிருந்தன.

அவ்வாறு, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிவிப்பில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார ரீதியாகக் காணப்படும் வித்தியாசம் 2020ஆம் ஆண்டளவில் சீர் செய்யப்படும். மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு 1200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, கல்வி அபிவிருத்திக்காக மேலதிகமாக 17,840 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
175,000 உயர்தர மாணவர்கள் மற்றும் 28,000 ஆசிரியர்களுக்கும் டெப் கணிணி வழங்குதல், விஷேட தேவையுடைய சிறார்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 150 ரூபா அதிகரிப்பு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, சிறிய மற்றும் நடுத்தவர்க்கத்திற்கு 5 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கத் திட்;டம், தோட்ட தொழிலாளர்களுக்கு 25,000 வீடுகள் நிர்மாணிக்கத் திட்டம், வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகள் அமைக்க 5000 மில்லியன் ஒதுக்கீடு, 15 ஆண்டுகளுக்கு மேலாக அரச வீடுகளில் தங்கியிருப்போருக்கு அந்த வீடுகளில் தொடர்ந்தும் வசிக்க வாய்ப்பு வழங்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளன.

இவ்வாறு, 2018, 2017 மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிவிப்புக்களில்; முன்வைக்கப்பட்டுள்;ள சமூக, பொருளாதா அபிவிருத்தி தொடர்பான முன்மொழிகளையும் ; வாக்குறுதிகளையும் நடைமுறைப்படுத்துவதில் தற்போது ஏற்பட்டு அதிகார முரண்பாடுகள் ;; பல்வேறு சலசலப்புக்களையும்;, எதிர்மறைக் கருத்துக்களையும் நல்லாட்சி அரசாங்கத்திற்குள் உருவாக்கியிருக்கிறது. இவைகளும் மக்களின் எதிர்பார்ப்புக்களில் தோல்வி நிலையை உருவாக்கியிருப்பதாகவே உணர முடிகிறது. அண்மைக்காலமாக இடம்பெற்ற போராட்ட வடிவங்களினூடாக இவை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.எந்தளவுக்கு இம்முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. மூன்றரை வருட காலத்தில் சிறுபான்மை சமூகம் தொடர்பில் தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிறுபான்மை மக்கள்pன் நம்பிக்கையில் உறுதியற்ற நிலைப்பாட்டை தோற்றுவித்திருப்பதுடன் எதிர்பார்ப்புக்களின் தோல்வி நிலையையும் உருவாக்கியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டித்தான் ஆக வேண்டும்;.

நல்லாட்சின் மூன்றரை வருடமும் சிறுபான்மையினரும்
நல்லாட்சி அரசாங்கம் பதவி ஏற்று மூன்றரை வருடங்கள் கடந்தும். இவ்வரசாங்கம் பதவியேற்றது முதல் இன்று வரை கடந்த 30 வருடக்களுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? இந்நல்லாட்சி அரசாங்கத்தின் வெற்றிக்கு கரம்கொடுத்த மலையக மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன என்ற கேள்விகளும் பரவலாக எழுப்பப்படுகிறது.

குறிப்பாக, இந்நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு தடையாகச் செயற்படும் பெரும்பான்மை மதவாத கடும்போக்காளர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் பராமுகமாக இந்நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டிருக்கிறது என்பதை கடந்த மார்ச் மாதம் அம்பாறை மற்றும் கண்டிப் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்செயல்கள் புடம்போட்டமையை; சிறுபான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள் மாத்;திரமின்றி தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது மாத்திரமின்றி சர்வதேச ரீதியாகவும் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருந்தது.

அத்தோடு, இந்நல்லாட்சி அரசாங்கத்தினால் ; தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பொறுத்தவரையில் வீணடிக்கச் செய்யப்பட்டதாகத் மாத்திரமின்றி. திருப்தியளிக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகின்றன.

இதேநேரத்தில், வடக்கில் இராணுவத்தினரால் கையப்படுத்தி வைத்திருந்த மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை, கிழக்கில் ஆளுனர் மாற்றப்பட்டமை, தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்க வழிவிட்டமை, மலையகத்தில் 7 பேர்ஜ் காணியுடன் தனி வீடுகள் கட்டிதரப்படும் என்ற திட்டம் ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டுள்ளமை போன்ற நடவடிக்கைகள் ஓரளவு சிறுபான்மை மக்கள் மத்தியில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றபோதிலும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகார இழுபறி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பெரும்பான்மை கட்சிகளின் அங்கத்தவர்களிடமிருந்து வரும் கருத்துக்கள் சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக் கீற்றை ஒளியிழக்கச் செய்துள்ளதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

கடந்த அரசாங்கத்தின் ஏதேச்சாதிகாரப்போக்கு, அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோதச் செயற்பாடுகள், ஊழல்மோசடிகள், அநியாயச் செலவுகள் உள்ளிட்ட அநாவசிய விடயங்களுக்கு இந்நல்லாட்சியின் மூன்றரை வருட காலத்திற்குள் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படும் நிலையில், சிறுபான்மை மக்களின் மனங்களை முழுமையாக வெற்றிகொள்வதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இதய சுத்தியுடன் முன்னெடுக்கப்படவில்லை என்ற சிறூன்மை மக்களின் உள வெளிப்பாடையும் மறுதளிக்க முடியாதுள்ளது.

இந்நிலையில்தான். மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்து சிறுபான்மை சமூகங்கள் குறித்தான நல்லிணக்க கருத்துக்களும் உறுதி மொழிகளும் வெளிப்படுத்தப்பட்டு வருகி;ன்றன.

கோத்தபயவின் உறுதிமொழி
சிறுபான்மையினரின் வாக்குகளே 2015ல் தமது தோல்விக்குக் காரணமென முன்னாள் ஜனாதிபதியின் தரப்பில் குறிப்பிட்ட வந்த நிலையில் நல்லாட்சி அரசாங்க பிரதான கட்சிகளுக்கிடையிலான அதிகால முரண்பாட்டைத் தொடர்ந்து சிறுபான்மை சமூகங்கள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்தான கருத்துக்களை முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இதர தரப்பினரினால் சிறுபான்மை சமூகங்களை நோக்கி முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்தகையில ‘வடக்கு, கிழக்கு மற்றும் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எமது தரப்பினால் மட்டுமே வழங்க முடியும். அதிகாரப்பகிர்வை வலியுறுத்துக்கின்ற வாசுதேநாணயக்கார, ராஜா கொல்லுரே, திஸ்ஸ விதாரண போன்றோர் எமது தரப்பிலேயே இருக்கின்றனர் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரப் பகிர்வை ஆதரிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க மட்டுமே அதிகாரப்பகிர்வை விரும்பினாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகமானோர் அதிகாரப்பகிர்வை விரும்பவில்லை.

ஆதலால், ஐக்கிய தேசியக் கட்சினால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியாது என்றும் எமது தரப்பினால் இப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதையும், மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்காலத்தில் உருவாகும் ஆட்சியில் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எவ்வித அச்சமும் பீதியுமின்றி சமயக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றவும் வர்த்தக நடவடிக்கைகளை எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்ளவும் நிம்மதியாக வாழவும் கூடிய சிறந்ததொரு சூழ்நிலையை உருவாக்கித் தருவோம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய முஸ்லிம்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் அதிகாரத்திலுள்ள மத்துக பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள இறைச்சி விற்பனை நிலையத்தை மூடுவதற்கான தீர்மானத்தை அப்பிரதேச சபை எடுத்துள்ளமையையும் இங்கு உற்று நோக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமூகம் சார் நடவடிக்கைகள் தொடர்பிலும் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில், எதிர்பார்ப்புக்களில் தோல்வி கண்டுள்ள நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகளினால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் மற்றும்; வாக்குறுதிகளின் எதிர்பார்ப்புக்களில் நம்பிக்கையீனத்தையும் தோல்வியையும் முஸ்லிம் சமூகம் கண்டுள்ளது.

இதனால் தமிழ் மக்களுக்கான புதிய தலைமைத்துவம் வேண்டும் என்ற கோஷம் வடக்கில் எழுப்பப்படுவதையும், முஸ்லிம் தலமைத்துவங்கள் ஒன்றுபட வேண்டும் அல்லது மாற்றுத் தலைமை உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் கிழக்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து எழுப்பப்படுவதையும் சமகாலத்தில் காணக்கூடியதாகவுள்ளது.

இந்நிலையில், இந்நல்லாட்சிக்குச் கைகோர்த்த வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட்ட இந்நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களின் மனங்களை வெற்றிகொள்ளும் வகையில் சிறுபான்மை சமூகத்தின் நீண்டகாலத் தேவைகள் இந்நல்லாட்சியில் நிறைவேறும். இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் அதனூடாக சகல மக்களினதும் உரிமைகள் மதிக்கப்பட்டு நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் வாழும் சூழல் ஏற்படும், பேரினவாத கடும்போக்காளர்களின் வெறுப்புப் பேச்சுகளும். அவர்களின் செயற்பாடுகளும் கடந்த ஆட்சியோடு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

சட்டமும் நீதியும் சகலருக்கு சமம் என்ற தத்துவத்துக்கு இந்த நல்லாட்சியில் மதிப்பளிக்கப்படும் என்ற பல்வேறு நம்பிக்கையின் அடிப்படையிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பிலும் இந்நல்லாட்சி அரசாங்கம் உருவாகுவதற்கு சிறுபான்மை சமூகத்தின் பெரும்பாலானோர் வாக்களித்தனர்.

இருந்தபோதிலும், இந்நல்லாட்சியின் இரு பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கிடையிலான அதிகார முரண்பாட்டின் அதிர்வுகள்; இற்றைக்கு மூன்றை வருடங்களுக்கு முன்னர் இந்த நல்லாட்சியின் மீது சிறுபான்மை சமூகங்கள் வைத்திருந்த நம்பிக்கையையும்; எதிர்பார்ப்பையும்; தோல்;விகளை நோக்கி நகரச் செய்வதாகவே சிறுபான்மை சமூகங்களினால் உணரப்படுகிறது என்பதே யதார்த்தமாவுள்ளது..

வீரகேசரி – 2018.06.09

Web Design by The Design Lanka