நுளம்பு வலைகள் விநியோகம் » Sri Lanka Muslim

நுளம்பு வலைகள் விநியோகம்

IMG_8181

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இக்பால் அலி


குவைட் நாட்டு அரச நிறுவனத்தின் உதவியுடன் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை மாற்றத்தினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாத்தான்டிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொட்டாரமுல்ல, தும்மோதர, பாத்திமாபுர ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்கு நுளம்பு வலைகள் விநியோகிக்கின்ற நிகழ்வு ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான் தலைமையில் நேற்று (9) வழங்கி வைக்கப்பட்டது.

கொட்டாரமுல்ல கல்வி மேம்பாட்டுக் கழகத்தின் வேண்டுகோளின் பிரகாரம் வழங்கி வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பறகஹதெனிய தாரூத்; தஹ்ஹீத் மகளிர் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம். சி. அன்சாரி ரியாதி, மானிங்கல இப்னு மஸ்ஊத் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் சி. நஸுர்தீன், நாத்தான்டிய அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம். எம். சியாம்,

கொட்டாரமுல்ல கல்வி மேம்பாட்டுக் கழகத்தின் உப தலைவர் எம். ஐ. எம். இக்பால், பள்ளிவாசல்கள் தலைவர்கள் நிருவாகிகள் உள்ளிபட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொட்டாரமுல்ல, தும்மோதர, பாத்திமாபுர பகுதிகளிலுள்ள 515 குடும்பங்களுக்கு இந்த நுளம்புவலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
IMG_8181

Web Design by The Design Lanka