மஹிந்தவுக்கு இந்தியாவின் மேல் புதிய காதல் மலர்ந்துள்ளது-இம்ரான் எம்.பி » Sri Lanka Muslim

மஹிந்தவுக்கு இந்தியாவின் மேல் புதிய காதல் மலர்ந்துள்ளது-இம்ரான் எம்.பி

41518510_1139145859583653_1696467504454434816_n

Contributors
author image

ஊடகப்பிரிவு

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இந்தியாவின் மீது புதிய காதல் மலர்ந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். வியாழக்கிழமை மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

உதாகம்மான ,கம்பரலிய, என்டப்ரைசிஸ் சிறிலங்கா என பல மக்கள் நல திட்டங்களை முன்னெடுக்கும் எமது ஆட்சியை கவிழ்க்க பல வழிகளில் முயற்சித்தும் முடியாமல் போனதால் மஹிந்த ராஜபக்ச இப்போது இந்தியாவின் உதவியை நாடியுள்ளார். இதுவரை காலமும் தன்னை சூழ்ச்சி செய்து தோற்கடித்தது இந்தியாவே என குற்றம்சாட்டி வந்த மஹிந்த ராஜபக்சவுக்கு இந்தியாவின் மேல் புதிய காதல் மலர்ந்துள்ளது.

எட்கா உடன்படிக்கை, திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், மத்தளை விமான நிலையம் என அரச சொத்துக்களை இந்தியாவுக்கு நாம் விற்பதாக கூறிய மஹிந்த மோடியிடம் போய் எட்கா உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த விடமாட்டேன், மத்தளை விமான நிலையத்தை நான் தரமாட்டேன் என கூற முடியுமா?

அன்று மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும்போதுதான் இலங்கையின் அரச சொத்துக்கள் சீனாவுக்கு விற்கப்பட்டன. இராணுவ தலைமையாக காணியை சீனாவுக்கு விற்றார். துறைமுக நகர காணியை முற்று முழுதாக சீனாவுக்கு எழுதி கொடுத்தார். நாம் ஆட்சிக்கு வந்தபின் அதை மீட்டெடுக்க முயற்சி செய்து அடுத்த சந்ததியினராவது பயன்பெறட்டும் என அந்த ஒப்பந்தத்தை 99 வருட குத்தகையாக மாற்றினோம். அன்று மஹிந்த ராஜபக்ச சீனாவுடன் செய்த ஒப்பந்தத்தின் காரணமாகவே துறைமுக நகரை எம்மால் முழுமையாக பெற முடியாமல் போனது.

தான் ஆட்சியில் இருந்த பொது தேசிய சொத்துக்கள் அனைத்தையும் சீனாவுக்கு தாரைவார்த்த மஹிந்த ராஜபக்சவே இன்று தேசிய சொத்துக்களை விற்பதாக நல்லாட்சி மீது குற்றம் சுமத்துகிறார்.

சீனாவுக்கு தேசிய சொத்துக்களை விற்றதில் கிடைத்த தரகு பணம் மூலம் நடாத்தப்பட்ட போராட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்ததால் இன்று ஆட்சியை கவிழ்க்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளார் என தெரிவித்தார்.

Web Design by The Design Lanka