உரிமை என்ற பெயரில் வெளிவரும் பத்திரிகையில் இனவாத நஞ்சை விதைக்கும் கட்டுரையாளர்கள். » Sri Lanka Muslim

உரிமை என்ற பெயரில் வெளிவரும் பத்திரிகையில் இனவாத நஞ்சை விதைக்கும் கட்டுரையாளர்கள்.

20180912_232245

Contributors
author image

Junaid M. Fahath

(எம்.பஹ்த் ஜுனைட்
ஊடகவியலாளர்)


தலை நகரில் இருந்து வெளிவரும் “தமிழ்த் தந்தி” எனும் வாரப் பத்திரிகையின் 09.09.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளிவந்த பத்திரிகையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் இன முறுகள்களையும், வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இரா.துரைரத்தினம் சுவிட்சர்லாந்து என்ற ஒருவரினால் கட்டுரைகள் எழுதி தனது இனத் துவேசத்தை பத்திரிகையில் பல பக்கங்களில் உழிந்து இருக்கிறார்.

அதாவது பக்கம் 06 இல் ” இஸ்லாத்திற்கு மதம் மாற மறுத்த தமிழ் குடும்பத்திற்கு நடந்த கொடூரம்!” என்ற தலைப்பில் அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பட்டி கிராமத்தில் உள்ள இஸ்மாயில் புரத்தில் வசிக்கும் சோதிநாதன் சந்திரசேகர் என்ற தமிழ் சகோதரர் ஒருவரது குடும்பத்தை இஸ்லாம் மதத்திற்கு வருமாறு நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வந்துள்ளதாகவும் அதற்கு அச் சகோதரரது குடும்பம் சம்மதிக்காததால் கடந்த 31 திகதி அவரது வீடும் முச்சக்கர வண்டியும் தீயிட்டு கொழுத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாகவும்,
இஸ்லாமிய மதவாதிகளின் நெருக்குதல்களால் சகோதரர் சோதிநாதன் சந்திரசேகரின் மனைவி வினோஜினியின் உறவினர்கள் 09 பேர் இதுவரை இஸ்லாத்திற்கு மதம் மாறி இருப்பதாகவும் இக் கட்டுரையில் கட்டுரையாளர் இரா.துரைரத்தினம் சுவிட்சர்லாந்து இன வாந்தி எடுத்துள்ளார்..

இவர் குறிப்பிட்டுள்ள அச் சகோதரின் வீடும் உடமைகளும் உண்மையாக சேதப்படுத்தப்பட்டிருந்தாலும் சேதப்படுத்தப்பட்ட வீடு சோதிநாதன் சந்திரசேகரின் வீடு அல்ல அவர் வாடகைக்கு இருந்த முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான வீடாகும். இருப்பினும் இச் சம்பவத்திற்கும் அங்குள்ள முஸ்லிம்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது அயல் வீட்டுக்காரர்களின் வாக்கு மூலத்தில் இருந்து அறிய முடிகிறது. இச் சகோதரிடமோ அல்லது அங்கு வசிக்கும் ஏனைய இன மக்கள் யாரிடமும் இதுவரை மதம் மாற்றம் சம்பந்தமாக யாரும் எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை என்றும் அங்குள்ள மக்கள் தெறிவிப்பதுடன் மேற்படி நபரின் உறவினர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தாங்கள் விரும்பியே இஸ்லாத்தை ஏற்று வாழ்கிறோம் என்றும் மதம் மாறியதாக சொல்லப்பட்ட சோதிநாதன் சந்திரசேகரின் மனைவி வினோஜினியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இக் கட்டுரையாளர் எழுதியுள்ளது போல சோதிநாதன் சந்திரசேகர் அவரையும் அவரது குடும்பத்தினரயும் இஸ்லாம் மதத்திற்கு வருமாறு நீண்ட நாட்கள் அச்சுறுத்தி இருந்தால் இவர் அச்சுறுத்தல் விடுத்தவர்களை அடையாளப்படுத்தி பொலீசில் முறைப்பாடு செய்துள்ளாரா?

இவ்வாறு வளத்தாப்பட்டி கிராமத்தில் இருந்து தனது இனவாத வாந்தியை எடுக்க ஆரம்பித்த கட்டுரையாளர் இரா.துரைரத்தினம். சுவிட்சர்லாந்து கட்டுரையின் இறுதிப்பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்வை காரி உமிழ்ந்து இருப்பதை தெளிவாக உணர முடிகிறது.

அதாவது அதே பக்கத்தில் கட்டுரையின் இறுதி பகுதியில் 1990 ஆண்டு வரலாறுகளை அறையும் குறையுமாக கிரிக்கி வரலாற்றை மாற்றி முஸ்லிம் மக்களால் தமிழர்கள் பாதிக்கப்பட்டதாக படங்காட்டி தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் இன முறுகல்களை ஏற்படுத்தி குளிர்காய முயற்சித்து இருக்கிறார்.
அதே 1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் காத்தான்குடி, ஏறாவூர் போன்ற முஸ்லிம் கிராமங்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை முதுகுக்குப்பின்னால் நின்று சுட்டு வீழ்த்திய வரலாற்றை கட்டுரையாளர் இரா.துரைரத்தினம் அறியவில்லை போல.

இது போல இதே பத்திரிகையில் இன்னும் சில கட்டுரைகள் மூலமும் கட்டுரையாளர் இரா.துரைரத்தினம் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கு இடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தி குளிர்காய முயற்சித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

கட்டுரையாளர் இரா.துரைரத்தினம் அவர்களே..!

உங்கள் பெயருக்கு கீழே சுவிட்சர்லாந்து என்று இருப்பதால் நீங்கள் அந்த நாட்டில்தான் வாழ்கிறீர்கள் என நினைக்கிறேன். அதனால் உங்களுக்கு இலங்கையின் இன ஒற்றுமையை விரும்பும் பிரஜை என்ற வகையில் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த இலங்கை நாட்டில் இடம்பெற்ற இரத்த வெறி கொண்ட வரலாற்றை மறந்து இன்று பல்லின மக்களும் உடன் பிறப்புக்களை போன்று பின்னி பிணைந்து ஒற்றுமையாக வாழ்கிறோம். எங்கோ ஒரு நாட்டில் இருந்து கொண்டு உங்கள் சுய நலத்திற்காக இந்த ஒற்றுமையை குலைத்து குளிர்காய நினைக்க வேண்டாம் இந்த நாட்டு மக்கள் இழந்தது போதும் இனி எதையும் இழக்கத்தயார் இல்லை.

தமிழ்த் தந்தி பத்திரிகை ஆசிரியர் பீடமே..!

பத்திரிகையின் முன்பக்கத்தில் தமிழ்த்தந்தி என்ற உங்கள் நாமத்துக்கு கீழ் ” உண்மையாய்…உரிமையாய்…உணர்வாய்..” என்று மார்தட்டும் நீங்கள் ஏன் உண்மை இல்லாத இனங்களுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரைகளை பிரசுரித்து தமிழ் பேசும் மக்களை பிரித்து குளிர்காய நினைப்பதுதானா உங்கள் ஊடக தர்மம்? இது தான உங்கள் ஊடக சேவை?

உரிமையாய்… என்று சொல்லும் நீங்கள் யார் உரிமைக்காக பேசுகிறீர்கள் தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிரச்சனைகளை உண்டாக்கி உதிரம் காண்பதா உரிமை??

உணர்வாய்… உணர்வு உணவுள்ள மணிதன் இவ்வாறு இனங்களுக்கு இடையில் வெறியாட்டத்தை உருவாக்கி உயிர்களை கொண்டு குவிக்க மாட்டான்.

முஸ்லிம்களும் உங்கள் பத்திரிகையை 10/= கொடுத்து வாங்கி வாசிக்கிறார்கள். உங்கள் உணவிற்கு அவர்களும் உதவுகிறார்கள் நன்றியுடன் ஊடகப்பணி செய்யுங்கள்..

ஊடகம் என்பது ஒரு சமூகப் பொறுப்புள்ள நிறுவனம் அதனை மக்கள் மகத்துவமாக மதிக்கிறார்கள் ஒரு சில ஊடகங்கள், ஊடகவியலாளர்கள்,கட்டுரையாளர்களின் சுய நல சிந்தனையால் உண்மையான ஊடகமும் உதரித்தள்ளப்பட்டு ஊமையாய் கிடக்கிறது..

Web Design by The Design Lanka