அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் வடக்கு மாகாணத்திற்கான ஊடக களப்பயணம் » Sri Lanka Muslim

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் வடக்கு மாகாணத்திற்கான ஊடக களப்பயணம்

4-PMMA CADER-03-09-2018

Contributors
author image

P.M.M.A.காதர்

யுத்தம் முடிவடைந்த பின்னர் மக்கள்; மீள் குடியேற்றப்பட்டுள்ளார்களா? மக்களுக்கான அடிப்படை வசதிகள் செயது கொடுக்கப்பட்டுள்ளதா? மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்களா ? அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கின்றார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு விடைதேடும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களின் காலடிக்குச் சென்று ஆராய்வதே இந்த களப்பயணத்தின் நோக்கமாகும்.

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வவுனியா,மன்னார் ஆகிய மாவட்டங்களில் 1990ஆம் ஆண்டு தமிழ்ஈழ விடுதலைப் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம்?,அதே போன்று இறுதி யுத்தத்தில் புலிகளால் கைவிடப்பட்ட தமிழ் மக்களின் மீள் குடியோற்றம் உள்ளீட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாமல்; இழுத்தடிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் எந்த விதமான அபிவிருத்தியும் செய்யாமல் மக்களை மீள்குடியேற்றாமல் இழுத்தடித்து வருகின்றார் காடுகளை அழிக்கின்றார் என்ற குற்றச்சாட்டு பெரும்பான்மைச் சமூகத்தில் இருந்தும்; தேசிய அரசியலில் எதிர்தரப்பு அரசியல் வாதிகளாலும் ஏனையோராலும் முன்வைக்கப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டுவரும் நிலையில் இதன் உண்மைத்தன்மையை அறியும் நோக்கோடு இந்த களப்பயணத்தைத் தொடங்கினோம்.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் மூத்த ஊடவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் அடங்கலாக 12 ஊடகவியலாளர்களைக் கொண்ட குழுவினரும்,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் 9 ஊடகவியலாளர்களைக் கொண்ட குழுவினரும்,தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் 9 ஊடகவியலாளர்களைக் கொண்ட குழுவினரும்,உதிரியாக ஊடகவியலாளர் முபாறக் அப்துல் மஜீத் அடங்கலாக 31 பேர் இந்த களப்பயணத்தில் இணைந்திருந்தனர்.

இந்த ஊடகவியலாளர் குழுவினர் கடந்த 2018-08-31ஆம் மாலை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து 2.30 மணிக்கு தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.மருதமுனையில் இருந்து நானும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையிலான அணியில் இணைந்து கொண்டேன்;.எங்கள் பயணம் சந்தோமாக அமைந்திருந்தது வெள்ளிக்கிழமை 11 மணியளவில் வவுனியாவைச் சென்றடைந்து இரவு அங்கு தங்கினோம்.

மறுநாள் 2018-09.01ஆம் திகதி காலை உணவை முடித்துக் கொண்டு வவுனியா மாவட்ட சாளம்பைக்குளம் பிரதேசத்திற்குச் சென்றோம் அங்கு பழைய,புதிய சாளம்பைக்குளம் என இரண்டு பிரிவாக மக்கள் வாழ்வதை அறிய முடிந்தது அங்கு வாழ்கின்ற மக்களிடம் அவர்களின் மீள் குடியேற்றம் அவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள் பற்றி ஊடகக்குழுவினர் மிகவும் தெளிவாகக் கேட்டறிந்தனர்.அங்கு மக்கள் வாழ்ந்த பல வாழ்விடங்கள் காடுமண்டிக் கிடப்பதை கவலையுடன் அவதானிக்க முடிந்தது.

இந்தக் கிராமம் நூற்றிஐம்பது வருடங்களுக்;குமேல் பழைமை வாய்;ந்த கிராமமாகும் 1990ஆம் ஆண்டு இடம்பெயரும் போது 350 குடும்பங்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் இப்பொது 750 குடும்பங்கள் வாழ்கின்றார்கள்.இவர்கள் 2014ஆண்டு மீழ்குடியேறி இருக்கின்றார்கள்.இங்கு மக்கள் வாழ்ந்த பிரதேசங்களை வனஜீவராசிகள் திணைக்களம் சொந்தமாக்கியிருக்கின்றார்கள் அவற்றை அவர்கள் விடுவிப்பதாக இல்லை இதனால் மக்கள் விவசாயம் செய்ய பல ஏக்கர் காணிகள் எட்டாக்கனியாகியுள்ளது.ஊடகவியலாளர் குழுக்கள் இங்குள்ள மக்களிடம் தனித்தனியாகவும்,குழுக்களாகவும் விபரங்களைக் கேட்டறிந்தனர்.

அதன் பின்னர் வவுனியா சாளம்பைக்குளம் அல்-அக்ஷா மகா வித்தியாளயத்திற்குச் சென்று அங்குள்ள விபரங்களைச் சேகரித்து கொண்டு திரும்பிய ஊடவியலாளர் குழு பொது மக்கள் சந்திப் பொன்றில் கலந்து கொண்டு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர் அங்கு மக்கள் எதிநோக்குகின்ற பிரச்சினைகளை ஊடகவியலாளர்களிடம் முன்வைத்தனர்.

அதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மன்னார் பிரதேசத்திகுச் சென்று அங்கு மக்கள் வாழ்ந்த இடங்களை வனராசிகள் திணைக்களம் சுவிகரித்திருக்கின்ற பல ஏக்கர் காணிகளைப் பார்வையிட்டோம் இது முசலி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசமாகும் இதைத்தான் விலங்கியல் பாதுகாப்புத் திணைக்களம் வில்பத்து தேசிய பூங்கா என அடையாளப்படுத்தியிருக்கிறார்கள் இதனால் அந்தப் பிரதேசத்திற்குள் மக்கள் பிரவேசிக்க முடியாமல் திண்டாடுகின்றார்கள்.

இந்த இடத்திலிருந்து மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற பல வீட்டுத்திட்டங்களைப் பார்வையிட்டு அங்கு மக்கள் எதிர்நோக்ககின்ற பிரச்சினைகளும் ஆராயப்படடது.முக்கிய தகவல்களை பெற்றுக் கொண்டு 2ஆம் திகதி மாலை 5.00மணிக்கு நாங்கள் அம்பாறை மாவட்டம் திரும்பினோம்.வவுனியா,மன்னார் மாவட்டங்களில் அமைச்சர் றிஷட் பதியுதீன் இல்லையென்றால் எங்களுக்கு வாழ்விடம் இல்லையென முஸ்லிம்,தமிழ்,சிங்கள மக்கள் கருத்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

4-PMMA CADER-03-09-2018

6-PMMA CADER-03-09-2018

5-PMMA CADER-03-09-2018

3-PMMA CADER-03-09-2018

Web Design by The Design Lanka