ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு புல்மோட்டை காணி பிரச்சினை தொடர்பான அவசர மகஜர் » Sri Lanka Muslim

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு புல்மோட்டை காணி பிரச்சினை தொடர்பான அவசர மகஜர்

41725408_10216450390641934_5503551881705684992_n

Contributors
author image

M.T. ஹைதர் அலி - செய்தியாளர்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு புல்மோட்டை காணி பிரச்சினை தொடர்பாக அனைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியத்தினால் அவசர மகஜர் அனுப்பி வைப்பு

புல்மோட்டை முஸ்லிம்களின் காணிகளில் இடம்பெற்றுவரும் பௌத்த மதகுருவின் அத்துமீறல் மற்றும் பிரதேச மக்களின் நீண்ட கால காணி பிரச்சினை தொடர்பாக தீர்வுகளை பெற்றுத்தரும்படியான மகஜர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இம்மகஜர் புல்மோட்டை அனைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியத்தினால் பதிவுத் தபால் மற்றும் தொலை நகல் ஊடாகவும் 14.09.2018ஆம் திகதி – வெள்ளிக்கிழமை (இன்று) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறிப்பிட்ட பௌத்த மதகுருவால் புல்மோட்டையின் அணைத்து பகுதிகளிலும் காணப்படும் காணிகளை அத்துமீறி பிடிப்பது தொடர்பாகவும், இப்பிரதேசத்தில் வசித்து வரும் மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்களை பெற்றுத் தரக்கோரியும், அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள தங்களது காணிகளுக்குள் சென்று தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வன பரிபாலன சபையினர் அனுமதிக்காது குறித்தும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 17.09.2018ஆம் திகதி அரிசிமலையில் காணப்படும் காணிகள் அளவீடு தொடர்பாக நில அளவையாளர்கள் அன்றைய தினம் விஜயம் மேற்கொள்வது தொடர்பாகவும் அவற்றை தடுத்துநிறுத்தி தமது காணிகளை பெற்றுத்தருபடி கோரியும் இன்றைய (14) ஜூம்ஆவின் பின்னர் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருந்த நிலையில் அணைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியத்தின் தலைமையில் புல்மோட்டை இலாஹியா ஜும்மா பள்ளிவாசலில் கட்சி பேதமின்றி நடைபெற்ற கூட்டத்தில் இதனை இப்போது செய்யாது நிறுத்தம் செய்வதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், 13.09.2018ஆம் திகதி – வியாழக்கிழமை (நேற்று) புல்மோட்டை பொலிஸ் உயர் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரது தலைமையில் பிரதேச பள்ளிவாயல்களின் தலைவர்கள், அணைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் இறுதியில் அரிசிமலை விகாரையை அண்டிய தொல்பொருள் பகுதியான 4.5 ஏக்கர் பகுதி மாத்திரம் அளவிடப்படும் என்பதுடன் ஏனைய குடியிருப்புகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் தாம் பொறுப்பு நிப்பதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்பின்னர் நில அளவையின் போது குச்சவெளி பிரதேச செயலாளர், புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் புல்மோட்டை பிரதேச மக்கள் சார்பாக இரண்டு முக்கியஸ்தர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடைபெறவிருந்த எதிப்பு நடவடிக்கையை கை விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்

.

41608629_10216450390721936_5017098633015721984_n

41738472_10216450367841364_372737250724675584_n

41725408_10216450390641934_5503551881705684992_n

Web Design by The Design Lanka