அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரிய பயிலுனர்களின் சமூக விழிப்புணர்வு கலாச்சார நிகழ்வு » Sri Lanka Muslim

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரிய பயிலுனர்களின் சமூக விழிப்புணர்வு கலாச்சார நிகழ்வு

DSC06237

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரிய பயிலுனர்களின் சமூக விழிப்புணர்வு கலாச்சார நிகழ்வு சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நேற்று (13)இடம்பெற்றது.

‘பாடசாலையும் சமூகமும்’ எனும் செயற்திட்டத்தின் கீழ் பின்தங்கிய பிரதேசங்களில் காணப்படும் பாடசாலையை தெரிவு செய்து பாடசாலையின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதுடன், சமூகத்திற்கு விழிப்பூட்டும் நோக்கில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பாடசாலையுடன் சமூகத்தினை இணைத்து நல்ல ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்கும் நோக்கில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் பயிலும் 300ற்கு மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்கள் சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் மூன்று நாள் தங்கியிருந்து பாடசாலையின் சுற்றுப்புற சூழல் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யததுடன், போதைப் பொருள் பாவனை, டெங்கு நோய் என்பன தொடர்பாக சமூகத்தினை விழிப்பூட்டும் வகையில் வீதி நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதுடன், பாடசாலை சுற்று மதிலில் விழிப்புணர்வு ஒவியங்கள் வரையப்பட்டது.

அத்துடன் பின்தங்கிய பிரதேச மாணவர்களும் நகர்ப்புற பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் போன்று விஞ்ஞான ஆய்வு செயற்பாடுகள் மற்றும் கணித, ஆங்கிலம் பாடங்களின் செயற்பாட்டிற்காக செயற்ப்பாட்டு அறைகளை உருவாக்கி பாடசாலையின் உள்ளக கட்டமைப்பில் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டது.z

சமூகத்தை விழிப்பூட்டும் வகையில் கல்வி கல்லூரியின் இரண்டாம் பருவ பயிலுனர் ஆசிரியர்கள் கலாசார நிகழ்வையும் ஏற்பாடு செய்து அரங்கேற்றினர்.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரியின் பீடதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் நிதி மற்றும் நிர்வாக பிரிவு உப பீடதிபதி எம்.ஏ.கலீல், இணைப்பாளர் எஸ்.எச்.ஏ.அறூஸ், அல்-ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.வதுர்த்தீன், தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

DSC06236

DSC06237

Web Design by The Design Lanka