காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு » Sri Lanka Muslim

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

201809150004536951_Israeli-troops-kill-3-Palestinians-in-Gaza-protest_SECVPF

Contributors
author image

Editorial Team

இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான காஸாமுனை எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த சில மாதங்களாக காசா எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை காசா எல்லையோரத்தில் உள்ள தடுப்பு வேலியின் அருகே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர். கம்பி வேலியை வெட்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதாக  இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Web Design by The Design Lanka