குருதி உறைந்த நாள் செப்டம்பர் 16 2000 » Sri Lanka Muslim

குருதி உறைந்த நாள் செப்டம்பர் 16 2000

IMG_8650

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வஸ்ஸலாம்
– எம்.எச்.முஸ்தாக் முஹம்மட் –
           16.09.2018 மு.ப 11.41


குருதி உறைந்த நாள்
கண்ணீர்களால் கிழக்கை நனைத்த நாள்
போராளிகளின் போராட்டம் – ஓய்ந்த நாள்
கட்சிக்காரவர்கள் பதவிக்கு கனவு கண்ட நாள்
தலைவரே!! …………….
செப்டம்பர் 16 2000

பரிதவித்து அழுது புழம்பி முடியுமுன்னே
தலைவர் பதவிக்கு கச்சை கட்டி சண்டையிட்டார்கள்.
தலைவரின் ஒசியத்து என பதவிகேட்டார்கள்
நப்சி கேட்கிறது என பொம்மலாட்டம் ஆடினார்கள்
தலைவரே!!

தலைவரே – உங்கள்
போராளிகள் கலைக்கப்பட்டு
கரைக்கப்பட்டார்கள்.
உங்கள் பாதை என கூவி
சலுகைகளுக்காய்
தம்பட்டம் அடித்தார்கள் – நீங்கள்
பதவிகொடுத்து அலங்கரித்து
வயிறு வளர்த்து விட்ட
உங்கள்
நம்பிக்கை நட்சத்திரங்கள்

கண்டித்தலைமை என ஹக்கீமை விரட்டி விரட்டி
மூத்தலைமைகள் என பதவியையும் பணத்தையும்
சூரையாடினார்கள்
தலைவரே!!

உரிமைக்கோசத்தை மக்களுக்குள் விதைத்து
பதவிக்கோசத்துக்கு பேரினவாதத்தலைமைகளிடம்
ஓப்பந்தங்கள் செய்தார்கள்.
தலைவரே!!

பேரியலை தூற்றி
தூக்கி எறிந்தார்கள்
அதாஉல்லாஹ்வையும் – ஹிஸ்புல்லாஹ்வையும்
துரோகி என தூரமாக்கினார்கள்.
தலைவரே!!

நீங்கள் கொடுத்த வன்னித்தலைமை
நூர்த்தீன் மசூரிடம் இருந்து வன்னியை
றிஸாட்பதியுதீனுக்கு தத்துக்கொடுத்தார்கள்
மட்டக்களப்பு தலைமையை
அமீரலிக்கு தாரைவார்த்தார்கள்
தலைவரே!!

திருகோணமலையை
மஹ்ருப்புகளுக்கும்
ஜ.தே.கட்சிக்கும் தட்டில் வைத்து பரிமாறினார்கள்
தலைவரே!!

அம்பாறை தலைமைத்துவத்தை
அன்னியனுக்கு ஆரவாரமாய்
கூட்டி வந்து கொடுத்தார்கள்
தலைவரே!!

ஹக்கீம் இல்லாது போனால்
கட்சியை காப்பாற்ற
தலைவனே இல்லை – என
சூளுரைத்த குரல்கள் எல்லாம்
பாராளுமன்ற கதிரைக்கனவு கலைந்தவுடன்
கண்டித்ததலைமைக்கு கண்டிப்பாகி
கனகாட்டாகி கலைந்து சென்றனர்
இப்போது யார்……….???
தலைவரே!!

கட்கிக்குள் பலரின்
கண்ணீரை கண்டும்
பதவிக்காய் நியாயத்தை மறந்து
ஹக்கீமுக்கு குடை பிடித்து மறைத்தவர்கள்
மேடை போட்டு மக்களுக்குள் இப்போது அழுகிறார்கள்
தலைவரே….!!

துரத்தப்பட்டவர்களும்
பிரிக்கப்பட்டவர்களும்
கண்டி
கிழக்கு
வன்னி – வடக்கு
என
கலைந்து கரைந்து போகிறார்கள்
தலைவரே…..!!

தலைவரே உங்கள்
கொள்கை மறந்தே போயிற்று
2000 செப்டம்பர் 16ல்
பிறந்தவர்கள் கண்ணில் படாத தலைவரே
காலத்தாலும் – கண்ணீராலும்
கரைந்து போகும் நினைவுகளை
நினைத்தழ
சம்மாந்துறை அஸீஸ்யும்
தொடர்ந்து இருப்பாரா??
தலைவரே….!!

உங்களை எழுதி
ஆவணமாக்கி
ஆச்சரியமூட்டி
ஆரவாரமாய் கவிஞன் என
பறை சாட்டிய
எம்.பௌஸரின்
எழுத்துக்களை
வைத்து – அடுத்த
தலைமுறைக்கு
ஆவணமாக்க சொல்லுங்கள்……???
தலைவரே….!!

நமது
மரூதூர்க்கணி
அன்வர்இஸ்மாயில்
தொப்பி முகையதீன்
மசூர்மௌலானா
மஜீத் ஆலிம்
நூர்த்தீன் மசூர்
றிகாஸை – கண்டால்
சொல்லிவிடுங்கள்

நான் – எழுதியதையும்
உங்களைப்போல்
எவரையும் – கிழக்குக்கு வர
இறைவன்
இன்னும் நாடிவிடவில்லை
என – சொல்லிவிடுங்கள்
தலைவரே!!

         IMG_8650

         IMG_8651

Web Design by The Design Lanka