ஸஹானாவின் மரணச் செய்தியுடன் இன்றைய காலை விடிந்திருக்கிறது - Sri Lanka Muslim

ஸஹானாவின் மரணச் செய்தியுடன் இன்றைய காலை விடிந்திருக்கிறது

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ashroff Shihabdeen


சகோதரி கெக்கிராவ ஸஹானாவின் மரணச் செய்தியுடன் இன்றைய காலை விடிந்திருக்கிறது.

இலங்கையின் மிகச் சிறந்த முஸ்லிம் பெண் இலக்கிய ஆளுமைகளில் குறிப்பிடத்த இடத்தை வகித்தவர் ஸஹானா. மிகவும் மென்மையும் அமைதியுமான சுபாவம் கொண்டவர். எழுதுவதை விடவும் ஆர்ப்பாட்டமும் அலட்டலும் மிகுந்த உலகத்தில் காத்திரமான இலக்கியப் பங்களிப்பை வழங்கியவர்.

மிகவும் சகோதர வாஞ்சையுடன் ஒளிவு மறைவின்றிப் பேசக் கூடியவர். ஓர் ஆசிரியையாக நல் மாணாக்கர் கூட்டமொன்றை உருவாக்கியவர். தன்னைப் பற்றிப் பேசுவதற்காக ஆள் சேர்க்காதவர்.

வாழ்வு இன்று அவரை விடுவித்து விட்டதாக நான் நம்புகிறேன்.

ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சிபோல் என்றும் எங்கள் நெஞ்சங்களில் இருப்பாய் சகோதரி!

எல்லாம் வல்ல இறைவன் உன்னைப் பொருந்திக் கொள்ள மனம் நெகிழப் பிரார்த்திக்கிறேன்!

Web Design by Srilanka Muslims Web Team