திருமண வாழ்வு மற்றும் குடும்ப நிறுவனம் குறித்த வழிகாட்டல்கள் உரிய காலத்தில் வழங்கப்படுதல் கட்டாயமாகும் » Sri Lanka Muslim

திருமண வாழ்வு மற்றும் குடும்ப நிறுவனம் குறித்த வழிகாட்டல்கள் உரிய காலத்தில் வழங்கப்படுதல் கட்டாயமாகும்

wedding in sa

Contributors
author image

Dr. Inamullah Masihudeen

உரிய வயதில் தொழிலும், (சுமார் 17+ – 20+) திருமணமும்; ஹலாலான உழைப்பும், ஹலாலான இல்லறமும் இஸ்லாம் வலியுறுத்தும் பிரதான அடிப்படை விடயங்களாகும்.

15 வயது தாண்டிவிட்டால் சொந்த எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறது என்ற கரிசனை ஒவ்வொரு ஆண் பெண் பிள்ளைகளின் மனத்திலும் ஏற்படல் வேண்டும்.

மிகவும் பொறுப்பான திருமண வாழ்வு மற்றும் குடும்ப நிறுவனம் குறித்த வழிகாட்டல்கள் உரிய காலத்தில் (16- 20 வயதிற்குள்) வழங்கப்படுதல் கட்டாயமாகும்.

தனது கல்வி, அறிவு, ஆற்றல், திறமை, என்பவற்றை இனம் கண்டு தனக்குரிய துறைகளை தெரிவு செய்து கொள்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டப் படல் வேண்டும்.

சாதாரண, உயர்தர கற்கைகள், உயர்கல்வி என்பவற்றை பொறுப்புணர்வுடன், எதிர்காலம் குறித்த விழிப்புணரவுடன் அவர்கள் தெளிவான திட்டமிடலுடன் மேற்கொள்கின்ற மனப்பாங்கு ஏற்படுத்தப் படல் வேண்டும்.

எல்லோரும் பாடசாலை போகிறார்கள், நாங்களும் போகிறோம், எல்லோரும் வகுப்புகளுக்கு செல்கிறார்கள் நாங்களும் போகிறோம், நண்பர்கள் இந்த துறையில் படிக்கிறார்கள் நாங்களும் படிக்கிறோம் என்று பெரும் பலான மாணவர்கள் 20-22 வயது வரை இலக்கின்றியே பயணிக்கிறார்கள்.

இலங்கையில் மட்டுப்படுத்தப் பட்டுள்ள சந்தர்ப்பங்கள், ஏனைய தொழில் தொழில் நுட்ப, உயர் தொழில் நுட்ப கல்விக்கான சந்தர்ப்பங்கள், உள்நாநாட்டிலு, வெளி நாடுகளிலும் உள்ள தொழில் வாய்ப்புக்கள் என எத்தகைய பிரக்ஞ்சையும் அவர்களில் பெரும் பாலானோருக்கு திருமண வயது வரை இல்லை.

பாடசாலைகளில் இவைபற்றிய விழிப்புணர்வுகள் , தரவுகள், தகவல்கள் பெற்றுக் கொடுக்கப் படுவதுமில்லை. கல்வி உயர்கல்வி வழிகாட்டல்கள் பெரும்பாலும் பல்கலை கழகங்களில் இருக்கின்ற மட்டுப் படுத்தப் பட்ட துறைகளை நோக்கி மாத்திரமே மேற்கொள்ளப் படுகின்றன.

சாதாரண தரப்பரீட்சையில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சியடைவதில்லை, உயர் தரப்பபரிட்சையில் இன்னும் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் தேர்ச்சியடைவதில்லை, தேர்ச்சியடையும் 200,000 பேரில் பல்கலைக் கழகத்தில் 30,000 பேருக்கும் ஏனைய துறைகளில் இன்னும் 25,000 பேருக்குமே கல்வி உயர் கல்வி வாய்ப்புக்கள் இருக்கின்றன.

வருடாந்தம் 300,000 பேர்கள் மத்திய கிழக்கு தொழிற் சந்தைக்கு பெரும் பாலும் தொழிற் திறன்கள், நிபுணத்துவங்கள் இல்லாமல் செல்கின்றனர்.

ஹிப்ளு கிதாபு மதரசாக்கள் ஜாமியாக்கள் என அரபு இஸ்லாமிய கலாப்பீடங்களிற்கு தெரிவாகும் மாணவர்களுக்கும் மிகத் தெளிவான கல்வி மற்றும் தொழில் நிபுணத்துவ வழிகாட்டல்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு இளைஞனும் தனக்கு உரிய வயதில் மிகவும் பொருத்தமான தொழில் ஒன்றை தேடிக் கொள்வதும், பொறுப்புக்களை சுமப்பதுமே வீட்டிற்கும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் செய்கின்ற மிகப் பெரிய முதன்மையான சேவையாகும்.

தலைமைத்துவப் பண்புகள் என்பது நாளு பேரை மேய்க்கும் கனவுகள் அல்ல, மாமனாரின் மனைவியின் சொத்துக்களை இலக்கு வைப்பதுமல்ல, இன்றேல் குறுக்கு வழியில் செல்வம் புகழ் திரட்டும் வாங்குரோத்து அரசியல் குபேரர்களாகும் கனவுகளும் அல்ல, அல்லது மலேசியாவில் மழை பெய்தால் மட்டக்களப்பில் குடை பிடிப்பதுமல்ல.

Web Design by The Design Lanka