அமித் ஷா: "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது கலாசாரத்தின் வெற்றி" » Sri Lanka Muslim

அமித் ஷா: “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது கலாசாரத்தின் வெற்றி”

_103522838_5dd1bf0d-3eb2-4638-a0a3-050e1610b3d6

Contributors
author image

BBC

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் போராட்டத்துக்கு கிடைக்கும் வெற்றி நமது கலாசாரத்தின் வெற்றியாக இருக்குமென்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

“நமது சமூகத்துக்கு விரைவில் நீதி கொடுக்கப்பட வேண்டும் என்றால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். அதற்கான சரியான பாதையில் நாம் சென்றுக்கொண்டிருக்கிறோம். அயோத்தியில் ராமர் கோயில் இடிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து சுமார் 600 ஆண்டுகளாக அதற்கான போராட்டம் நடைபெற்று வருகிறது” என்று அமித் ஷா பேசியுள்ளார்.

இதே விவகாரம் குறித்து கடந்த புதன்கிழமை பேசியிருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், அயோத்தியில் ராமர் கோயிலை காட்டினால்தான் இந்து-முஸ்லீம்கள் இடையிலான மோதல்போக்கு குறையும்” என்று கூறியதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka