தேர்தலில் தோற்றாலும் பதவியில் நீடிக்க மாலத்தீவு அதிபர் யாமீன் திட்டம்? » Sri Lanka Muslim

தேர்தலில் தோற்றாலும் பதவியில் நீடிக்க மாலத்தீவு அதிபர் யாமீன் திட்டம்?

201809271626309913_Maldives-security-forces-vow-to-uphold-presidential-vote_SECVPF

Contributors
author image

Editorial Team

சமீபத்தில் நடந்த மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாலும், தற்போதைய அதிபர் யாமீன் பதவியில் நீடிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் இருந்து நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தல் மிகவும் கவனிக்கப்பட்டது.

மாலத் தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது ஷோலியிடம் தோல்வியடைந்தார்.

அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தாலும், தனது பதவியில் தொடர்ந்து நீடிக்க அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து எதிர்க்கட்சிக் கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் அகமது மஹ்லூப் கூறுகையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளர் முகமது சோலீ வெற்றி பெற்றதாகவும், தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும் அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார்.

எனினும், மாற்று வழியில் தனது அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க அவர் திட்டமிட்டு வருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடவும், அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது அவரது கட்டுப்பாட்டில் உள்ள உளவுத் துறையிடமிருந்து அறிக்கையைப் பெற்று வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ள தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையத்தை அவர் கேட்டுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது என்று தெரிவித்தார்.

Web Design by The Design Lanka