சிறகுடையும் சிட்டுக்கள்! » Sri Lanka Muslim

சிறகுடையும் சிட்டுக்கள்!

childrens-day

Contributors
author image

M.M.A.Samad

எம்.எம்.ஏ.ஸமட்


குழந்தைகள் பறக்கும் சிட்டுக்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். இன்றைய குழந்தைகள் அல்லது சிறுவர்களே நாளை துறைசார் ஆளுமைகள். இத்தகைய ஆளுமைகள் இயற்கை மற்றும் சூழலின் நெருக்கடிகளினால் சிறகுடைந்த சிட்டுக்களாக வாழும் நிலையை உலகெங்கிலும் காணலாம்.

குழந்தைகளும், சிறுவர்களும் தெளிவான அறிவையும், ஆரோக்கியத்தையும் பெற முடியாததொரு சூழ்நிலையை சமகாலம் தோற்றுவித்திருக்கிறது. குழந்தைகள் அல்லது சிறுவர்களின் விளையாட்டுக்கள், ஆசைகள், கனவுகள், கற்பனைகள் எல்லாம் முளைவிடும்போது அவை கிள்ளியெறியப்படுகிறது. அல்லது அவர்களது ஆசைகளையும், கனவுகளையும், கற்பனைகளையும் அக,புறச் சூழல்கள் பாதித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக பெற்றோர்களினால் கல்விக்க அளிக்கும் முக்கியத்துவம், அதிலும் கல்விக் கடைகளுக்கு அனுப்பும் முக்கியத்துவம் அவர்களின் உடல், உள ஆரோக்கியங்களை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது.

காலை எழுந்தவுடன் அவசர அவசரமாக பாடசாலைக்குச் செல்வதற்கு ஆயத்தப்படுத்தல், பின்னர் பாடசாலை முடிந்தவுடன் மேலதிக வகுப்பு, மேலதி வகுப்பு முடிந்து வீடு வந்ததும் பெற்றோரின் வற்புறுத்தலின் பெயரில் மீண்டும் படிப்பு இப்படி, படிப்பு மட்டுமே வாழ்க்கை என்கின்ற சிந்தனையினால், உடல், உல ஆரோக்கியமின்றி பிள்ளைகளின் உள்ளம் நெருக்கடிகளைச் சந்திப்பதனால் அப்படிப்பில்; அவர்கள் வெறுப்படைந்து கல்வியில் தோல்வியடையும் நிலைக்கு சில சிறுவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இவற்றின் காரணமாக, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதும் வெறுப்பு ஏற்படுவதையும். இந்த வெறுப்புணர்வானது வீணான விளைவுகளுக்கு அவர்களின் மனவெழுச்சியை இட்டுச் செல்லவும் வழியேற்படுத்துகிறது. இதனால், படிப்பு மாத்திரம்தான் வாழ்க்கை என்ற சித்தாந்தத்தை முதலில் பெற்றோர்கள் களைய வேண்டும். பாடப்படிப்பைத் தவிர இன்னும் ஏராளமான விடயங்கள் இந்த உலகில் உள்ளன. வாழ்க்கை என்பது படிப்பு மாத்திரமல்ல என்ற எண்ணத்தைப் பெற்றோர்கள் நம் பிள்ளைகள்; மனதில் விதைக்க வேண்டும்.

படிப்பு, படிப்பு என்ற காலத்திலிருந்து சற்று விலகி, இத்தலைமுறையினர் வாழ்வை ரசிக்கக் கூடியவர்களாக மாற்ற வேண்டிய கடமை பெற்றோர்களுக்குள்ளது. முந்தைய காலங்களில் குழந்தைகள் வெளி விளையாட்டுக்களில் அதிகம் ஈடுபடுபவர்களாக இருந்தனர். அதில் தோல்வியும் வெற்றியும் மாறி மாறி ஏற்படும். ஒரு தடவை நண்பன் தோற்றால் மற்றைய தடைவ நானும் தோற்பேன் என்ற யதார்த்தத்தைக் கண்டு கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், இவ்வாறான சந்தர்ப்பம் தற்போiதைய அகப்புறச் சூழலின் அழுத்தங்களினால் பிள்ளைகளுக்கு கிடைக்கச் செய்யாமல் ஆக்கப்படுகின்றன. இதனால், பிள்ளைகள் வாழ்க்கையில் சந்திக்கின்ற விடங்களில் வெற்றியும், தோல்வியும் சகஜமென விளங்கிக் கொள்ள முடியாத நிலைக்குக்தள்ளப்படுவNது தங்களைத் தாங்களாகவே அழித்துக்கொள்ள முனைவதாகும்.

குழந்தைகளது, சிறுவர்களது மனவெழச்சியை ஆரோக்கியமாக்க வேண்டுமென்றால் வயதுக்கேற்ற வாழ்க்கைச் சூழலை வழங்க வேண்டியது பெற்றோர்களினதும், பாதுகாவலர்களினதும், ஆசிரிய சமூகத்தினதும் கடப்படாகவுள்ளது. இக்கடப்பாடு நிறைவேற்றப்படாத விடத்து எதிர்கால தலைமுறையினர் வழிதவறிய வாழ்க்கைப் பயணத்திற்குள் வழுக்கி விழுவதைத் தவிர்க்க முடியாது. அத்தோடு அவர்கள் சிறகுடைந்த சிட்டுக்களாக மூலையில் ஒதுங்கிக்கிடக்க வேண்டிய நிலைக்குள்ளாக வேண்டியும் ஏற்படலாம்.

இவ்வாறான நிலைமைகள் சிறுவர்களை பாதிக்காமலிருக்கும் பொருட்டு மனவெழச்சியில்; மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே சர்வதேச சிறுவர் தினம் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாகக் கொள்ளலாம.; எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி திங்கள் கிழமை சர்வதேச சிறுவர் தினம் உலகளவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இத்தினத்தில் சிறுவர்களின் உரிமை, பாதுகாப்பு, நலன்களை வலியுறுத்தி;; பேரூரைகளும், நடைபவணிகளும,; நிகழ்ச்சிகளும,; விழிப்புணர்வுகளும் நாடுபூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறும். இந்நிகழ்ச்சிகள், அதிகாரிகளின் கட்டளைகளுக்காகவும் நிறுவன மற்றும் சுய விளம்பரங்களுக்காகவும் நடந்தேறலாம்.

இந்நிகழ்சிகளையும் ஏனைய நிகழ்வுகளையும் நடத்தக் கூடாததென்றோ அல்லது நடந்துவது பிழையென்றோ நடத்தாமல் இருப்பது தவறெனறோ தெரிவிப்பதது நோக்கமில்லை. மாறாக விலைமதிக்க முடியாத வருங்காலச் சிறுவர்கள் நெருக்கடிகளிலிருந்தும், வன்முறைகளிலிருந்தும், துஷ்பிரயோகங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக நிரந்தமான, முறையான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அந்தப் பொறிமுறைகள் சமூக மயப்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் சிறுவர்களை பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பதன் உடாகவே சிறுவர் தினத்தை அர்த்தமுள்ளதாக்க முடியும். இவை சமூகப் பொறுப்பாக மாற்றப்பட வேண்டும். அவை தொடர்ச்சியாக ஆரோக்கியமாக சமூகத்தின் ஒவ்வொரு பிரஜையினாலும் முன்னெடுக்கப்பட வேண்டும். அவற்றின் மூலமே இச்சிறுவன தின நிழக்வுகள் வெற்றியளித்ததாகக் கொள்ளப்படும்.

சர்வதேச சிறுவர் தினம்
சர்வதேச புள்ளிவிபரங்களின் பிரகாரம் உலகின் 7.7 பில்லியன் மக்கள் தொகையில் 1.89 வீதமானவர்கள் சிறுவர்களாவர். 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், இலங்கையின் ஏறக்குறைய 20 கோடி முப்பது இலட்சம் மக்கள் தொகையில் சிறுவர்களாகக் கணிக்கப்படும் 15-17 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 4571,442ஆகும்.
இந்நிலையில், உலகளாவிய ரீதியிலும் நம்நாட்டிலும்; வாழும் சிறுவர்களுக்காக அனுஷ்டிக்கப்படுகின்ற சிறுவர் தினமானது வௌ;வேறு நாடுகளில் வௌ;வேறு தினங்களில்; அனுஷ்டிக்கப்பட்டு வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இச்சர்வதேச சிறுவர் தினமானது முதன்முதலாக 1920ஆம் ஆண்டு துருக்கியில் கொண்டாடப்பட்டது பின்னர். 1925ஆம் ஆண்டு சுவிட்சலாந்து மற்றும் ஜெனிவாவிலும் கொண்டாப்பட்டது. இருப்பினும், 1955ஆம் ஆண்டே உலக முழுவதிலும் இந்த சிறுவர் தினம். அனுஷ்டிக்கப்பட்டது. இருப்பினும், இத்தினத்தை உலக நாடுகள் பல வௌ;வெறு தினங்களில்; அனுஷ்டித்து வரும் நிலையில்; உலக முதியோர் தினம் 1990ஆம் ஆண்டிலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

இன்றைய சிறுவர்கள் நாளை முதியவர்கள் என்ற அடிப்படையில் இவ்விரு தினங்களும் இலங்கையில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருவது பொறுத்த முடையதாகும்.
இலங்கையில் இவ்வாண்டின்; சிறுவர் தினத்துக்கான தொணிப்பொருள் ‘தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்காக சிறுவர்களைப் பலப்படுத்துவோம்’ என்பதாகும். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இக்கருப்பொருளை உள்ளடக்கியதாகவே சகல பாடசாலைகளிலும் இச்சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் பாடசாலைகளுக்கு அறிவித்தள்ளார்.

இவ்வாண்டின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டாலும் சிறுவர்களுக்குகெதிராக அரங்கேற்றப்பட்டு வருகின்ற அழுத்தங்களையும், அநீதிகளையும், துஷ்பிரயோகங்களையும் இயன்றளவு குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சகலரும் பங்களிப்புச் செய்ய வேண்டிய காலகட்டம் ஏற்பட்டுள்ளது.

சிறுவர்கள் மீதான அழுத்தங்கள் பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தப்பட்டாலும் அவற்றில் முக்கியமானதாக கருதப்படுவது சிறுவர் துஷ்பிரயோகங்களாகும். துஷ்பிரயோக வடிவங்கள் பலவற்றுக்கு முகம்கொடுத்து பல சிறுவர்கள் சிறகுடைந்த சிட்டுக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சிறுவர்கள் என்போர் மனித குலத்தின் மிக முக்கிய பருவத்தினர். இவர்கள் அடுத்தவர்களில் தங்கி வாழ்கின்ற பலவீனர்களாகக் காணப்படுததனாலேயே வாழும் வீட்டினுள்ளும், சூழலிலும், பாடசாலைகளிலும் பல்வேறு அழுத்தங்களுக்;கு உள்ளாக்கப்படுகின்றனர். சிறுவர்கள் மீதான அழுத்தங்களைக் குறைப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் சிறுவர் உரிமைகள் சாசனம் வகுப்பட்டிருந்தாலும், அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் தினமும் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சிறுவர் உரிமைகளும் துஷ்பிரயோக வடிவங்களும்
பிறப்பின் போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக்கொள்ளும் உரிமை, பெற்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை, பெற்றோரிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தாதிருப்பதற்கான உரிமை, வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை, தமது கருத்தை வெளிப்படுத்தும் உரிமை, சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப்படி நடப்பதற்கும், சமயமொன்றைப் பின்பற்றுவதற்குமான உரிமை, போதிய கல்வி பெறும் உரிமை, சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார வசதிகள் பெறும் உரிமை, ஓய்வெடுக்கவும் விளையாடவும் உரிமை, சித்திரவதை குரூரமான தண்டனைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளும் உரிமை, சாதாரண வழக்கு விசாரணைகளுக்குள்ள உரிமை, சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை அனுபவிக்கும் உரிமை சிறுவர்களுக்குண்டு. இத்தகைய உரிமைகள் மறுக்கப்படுவதும் துஷ்பிரயோகமாகவே கருதப்படுகிறது.

பொதுவாக சிறுவர் துஷ்பிரயோகமானது பல்வேறு வடிவங்களில் அரங்கேற்றப்படுகின்றன. உடலியல் ரீதியான துஷ்பிரயோகம், உளவியல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் ரீதியான துஷ்பிரயோகம், உணர்வு ரீதியான துஷ்பிரயோகம், புறக்கணிப்பு ரீதியிலான துஷ்பிரயோகம் என பல்வேறு கோணங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

சிறுவர்களுக்கு உடல் ரீதியாக தீங்கு இழைக்கப்படின் அது உடலியல் ரீதியான துஷ்பிரயோகமாகக் கருதப்படுகிறது. இதில் அடித்தல், காயப்படுத்தல், அங்கங்களைச் சிதைத்தல் போன்ற மட்டுப்படுத்தப்படாத தண்டனைகளும் அடங்குகின்றன. குறிப்பாக பெரும்பாலான உடலியல் ரீதியிலான துஷ்பிரயோகங்கள் வீடுகளில் இடம்பெறுகின்றன. பெற்றோர்கள், பாதுகாவலர்கள், வயது வந்த சகோதாரர்கள், சில ஆசிரியர்கள், கள்ளக் காதாலர்கள், காதலிகள், எஜமானர்கள் போன்றோரினால் சிறுவர்கள் உடலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இவ்வாறான உடலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் ஒரு சில வெளிக் கொணரப்படுகின்றபோதிலும் பல சம்பவங்கள் வெளிக்கொணரப்படாமல் மூடிமறைக்கப்பட்டு வருகின்றன.

பொதுவாக, சிறுவர்கள் சுயமாக விளையாடுதல், கற்றல், நாளாந்த கருமங்களைச் செய்தல், ஒளிவு மறைவின்றிப் பேசுதல், விருப்பங்களை வெளிப்படுத்துதல், அறியாத விடயங்களை அறிந்துகொள்ள முயலுதல், சுயமாகச் சிந்தித்தல், ஆராய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற போது அவை பலவந்தமாகத் தடுக்கப்படுமிடத்து, உளவியால் ரீதியான தாக்கங்களுக்கு உள்ளாகுவார்கள்.
இதனால் அவர்களின் ஆற்றல், ஆளுமை, திறன், நுண்ணறிவு, விவேகம் போன்ற உள நிலைகள் பாதிப்படையும். இவ்வாறு சிறுவர்களைப் பாதிப்படை செய்யும் செயற்பாடுகள் உளவியல் ரீதியான துஷ்பிரயோகமாகக் கொள்ளப்படுகிறது.

அநேக வீடுகளில் பிள்ளைகளின் சுதந்திரங்கள் பறிக்கப்படும் வகையில் தங்களது எண்ணங்களையும் ஆசைகளையும் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது திணிக்கின்றனர். இதனால், சிறுவயதில் ஏற்படுகின்ற உளத் தாக்கங்கள் அப்பிள்ளையின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதை அநேக பெற்றோர்கள் மறந்து செயற்படுவது அவர்களின் அறியாமையாகும்.

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்காக பிள்ளைகளைத் தயார்படுத்தும்; போது பெற்றோர்களால் பிள்ளைகள் மன அழுத்திற்கு உள்ளாகின்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளது. அதேபோன்று இப்பரீட்சை முடிவுகள் வெளி வந்த பின்னரும் தகைமை பெறாத சிறுவர்கள் பலர் வதைக்கப்பட்டிக்கிறார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.
சிறுவர்களை ஏதாவது பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுத்தும் போது சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுகின்றனர். பாலியல் துஷ்பிரயோகம் என்பது பாலியல் இச்சைக்காக சிறுவர்களைப் பயன்படுத்துவது மாத்திரமின்றி, சிறுவர்களைத் தொடுதல், வருடுதல், பொருத்தமற்ற பாலியல் சொற்களைப் பயன்படுத்துதல், பாலியல் நொந்தரவுகளைக் கொடுத்தல், பாலியல் செயற்பாடுகளை பார்ப்பதில் ஈடுபடுத்தல், ஆபாசப் படங்கள், புத்தகங்களை பார்க்கச் செய்தல் போன்ற செயற்பாடுகளில் சிறுவர்களை ஈடுபடச் செய்வதானது பாலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகமாகக் கொள்ளப்படுகிறது.

சமகாலத்தில் சிறுவர்கள் மிக மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுட்டுள்ளவர்கள் ‘சேடிசம’;, ‘பிடோபீலியா’, ‘பெடிசிஷம’;, ‘மஸோசியம்,’ போன்ற பாலியல் விலகல் நடத்தை உளக் கோளாறுகளினால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என உளவியல் நுபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோமென்பது வெளிப்படையாகவே மறுத்து விலக்குதல், தனிமைப்படுத்தல், அவமானப்படுத்தல், பயமுறுத்தல், கெடுத்தல், சுரண்டிப்பிழைத்தல், உணர்ச்சி ரீதியான துலங்களை மறுத்தல் மற்றும் சூழலுடன் இடைத்தொடர்பை மேற்கொள்ளும் சிறுவர்களது பிரயத்தனங்களுக்கு தண்டணையளித்தல் போன்ற செயற்பாடுகள் உணர்ச்சி ரீதியிலான சிறுவர் துஷ்பிரயோகமாகக் கொள்ளப்படுகிறது. இவ்வகையான துஷ்பிரயோகச் செயற்பாடுகளும் பெருவாரியாக இடம்பெற்றுத்தான் வருகின்றன.

ஒரு சிறுவனுக்குரிய உடை, உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுகின்றபோது அச்சிறுவன் புறக்கணிப்பு ரீயிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றான். அதுதவிர, சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதும் அதனால் ஏற்படுகின்ற இறுக்கமான செயற்பாடுகளும கூட சிறுவர் துஷ்பிரயோக வடிவங்களாகக் கருதப்படுகின்றன.
துஷ்பிரயோகம் பற்றிய உண்மையான தகவல்களை சிறுவர்களுக்கு கற்பித்தல் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்தினால் இலகுவில் பாதிக்கப்படும் தன்மையைக் குறைப்பதற்கும் ஆரோக்கியமான உறவுகளை மேம்படுத்துவதற்கும் தேவையான திறன்களையும் பண்புகளையும் அவர்களில் விருத்தி செய்தல் அவசியம். இந்த அவசிய நடவடிக்கைகளில் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களின் வகிபங்கு அளப் பெரியது.

கல்விச் சமூகத்தின் கடப்பாடு
18 வயதிற்குக் குறைந்தவர்களே சிறுவர்களாக் கருதப்படுகிறார்கள். இந்த வயதுச் சிறுவர்களே பாடசாலை மாணவர்களாகவும் உள்ளனர்.; நாடு பூராகவுமுள்ள 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைகளில் 40 இலட்சத்துக்குமதிகமான மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக ஏறக்குறைய 2இலடச்து 30 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆசிரியர்கள் என்பவர்களின் பணி கற்பித்தல் மாத்திரம் என்பதற்கு அப்பால் மாணவர்களின் ஏனைய விடயங்களிலும் தாக்கம் செலுத்துவதாக இருக்க வேண்டும்.

மாணவர்களின் கல்வி, பரீட்சை அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படுவதுடன் மாணவர்களின் ஆளுமை, ஆற்றல், திறன் விருத்தி அவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விடயங்களிலும் நல்ல ஆலோசனைகள் பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் வழங்கப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது.

குறிப்பாக சமகாலத்தில் மாணவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுவது அதிகரித்துள்ளது. 25 மாவட்டத்திலும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கை தொடர்பான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில்தான் அதிகளவிலான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாக தரவுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

சிறுவர்கள் என்பவர்கள் பாடசாலை மாணவர்கள் எனக் கருதி அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், தைரியமாக முன்னோக்சிச் செல்வதற்காக அவர்களைப் பலப்டுத்த வேண்டிய கடப்பாடும் கல்விச் சமூகத்தில் முக்கிய தூணாகக் கருதப்படுகின்ற ஆசிரியர்களுக்குண்டு.

அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகச் செயற்பாடுகளிலிருந்து மாணவர்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளும் விழிப்புணர்வும் பாடசாலைகளில் முறையாகவும் தொடராகவும் வழங்கப்படுவது காலத்தின் கட்டாயச் செயற்பாடு எனக்கருதி அவற்றிற்கு முக்கியத்துவம் வழங்குவதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்கள்; துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதைத் தடுப்பதற்கான வகிபங்கை ஆற்ற முடியும்.

ஆனால் பயிரை வேலி மேய்ந்த சம்பவங்களாக சில ஆசிரியர்களால் மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவங்களும் நாட்டில் இடம் பெறுவது துர்ப்பாக்கிய நிலை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

சிறுவர்கள்; துஷ்பிரயோங்களுக்கு ஆளாகாமல் அவர்களை பாதுகாப்பதற்கும்;, அவர்கள் ஆளுமையோடு தங்களது பணிகளை அச்சமின்றி முன்கொண்டு செல்வதற்கும், பலப்படுத்தப்படுவதற்கும்; ஒவ்வொரு தரப்பினரும் தமது கடப்பாடாகக கருதிச் செயற்பட முன்வருவதன் மூலமே ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படும் சிறுவர் தினத்தை அர்த்தமுள்ளதாக்க முடியும். இல்லையேல், தினமும் சிறகுடைந்த சிட்டுக்களாக மாறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதைத் தவிர்க்க முடியாது.
விடிவெள்ளி – 27.09.2018

Web Design by The Design Lanka