கற்றல் நடவடிக்கைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது » Sri Lanka Muslim

கற்றல் நடவடிக்கைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

clossed

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிகக்கல்வி கற்கைகள் எதிர்வரும் 09ம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பீடாபதி
குமுதுனி தேவி சந்திரகுமார் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இயங்கி வரும் தொடர்பாடல் மற்றும் வணிகக்கல்வி கற்கைகள் பீடத்தின் மாணவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2018/05/01ம் திகதி தொடக்கம் கற்றல் நடவடிக்கைகளை பகிஷ்கரித்து வந்தனர்.

எனினும் இதனை முடிவுக்கு கொண்டு வர பல்கலைக்கழகம் பல கட்டப்பேச்சுவார்தைகளை மேற்கொண்ட போதிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கையிலிருந்து விலகியிருப்பதினால் தொடர்பாடல் மற்றும் வணிகக்கல்வி கற்கைகள் பீடத்தின் சகல கல்வி ஆண்டு கற்கை நெறிகளும் (YEAR 1.2,3,4, SEMESTER 2)   09/06/2018) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும் பீடாதிபதி தெரிவித்தார்.

Web Design by The Design Lanka