வட முஸ்லிம்களின் கட்டாய வெளியேற்ற தினத்தை ஞாபகப்படுத்துவதன் அவசியம் » Sri Lanka Muslim

வட முஸ்லிம்களின் கட்டாய வெளியேற்ற தினத்தை ஞாபகப்படுத்துவதன் அவசியம்

north

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட இன்னொரு வருடம் இம்மாதத்தோடு முடிகின்றது ..

வெளியேற்றப்பட்ட இந்த தினம் வரலாறுகளால் மறைக்க முடியாத கரை படிந்த நாளாக இருந்த போதிலும் இந்த வெளியேற்றத்துக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று மறைமுகமாக குற்றம் சாட்ட எத்தனிக்கும் புலி ஆதரவு விசிலடிச்சான் குஞ்சுகள் காலத்துக்கு காலம் முட்டாள்தனமாக அறிக்கைகளையும் பிற்போக்குத்தனமான கட்டுரைகளையும் வெளியிட்டு இந்த வெளியேற்றத்தில் புலிகளுக்கு இருக்கின்ற பங்கை மூடி மறைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் .

வரலாற்றில் இடம்பெற்ற சில மோசமான படுகொலைகளும் இன அழிப்புகளும் தடம் இல்லாமலே மறைந்து போயிருக்கிற அதேவேளை சில சாதாரண படுகொலைகள் வரலாற்றிலே ஆழமாக பதிந்து போயிருக்கின்றன. இதற்கு காரணம் அந்த சமூகத்தின் வழித்தோன்றல்கள் ,பின்னால் வாழுகின்ற அதன் பரம்பரைகள் குறிப்பிட்ட அந்த சமுகம் சந்தித்த அந்த இடர்ப்பாட்டை வருடா வருடம் நினைவு படுத்தி ,அந்த நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி ஆவணப்படுத்தி பிரபல்யப்படுத்தி வந்தமையே காரணமாகும். ஓரு சமூகத்தின் வெற்றியும் வரலாற்றில் அது பதிக்க்கிற தடமும் அதன் நிகழ்கால செயற்பாடுகளில் தங்கி இருக்கும் . கண்ணை மூடிக்கொண்டு கடந்த காலம் முடிந்து விட்டது என்பதில் அல்ல ..

எனவே இந்த வெளியேற்றத்தை வருடா வருடம் நினைவு கூர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்க்க வேண்டும்
நமது அமைப்புகளை சர்வதேச மயப்படுத்தியதை போல நமது பிரச்சினைகளையும் சர்வதேச மயப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாம் உலக மகா யுத்த முடிவில் யூதர்கள் கொல்லப்பட்டதை பின்னால் வாழ்ந்த யூதர்கள் ஆவணப்படுத்தினார்கள், பிரபலப்படுத்தினார்கள் ,வருடா வருடம் நினைவு கூர்ந்தார்கள் ,பல திரைப்படங்கள் எடுத்தார்கள் , நூற்றுக்கணக்கான புத்தகங்களில் எழுதித்தள்ளினார்கள் ஏன் நாட்டின் சட்டங்கள் இயற்றுவதில் கூட செல்வாக்கு செலுத்தினார்கள் .ஐரோப்பா முழுவதிலும் தமக்கு பாதுகாப்பான சட்டங்களை இயற்றினார்கள்.

அதே போல அமெரிக்கா தானே நாடகம் அரங்கேற்றிய செப்டெம்பர் 11 ஐ வைத்து தனக்கு வேண்டிய விடயங்களை நாசகார வேலைகளை செய்து வருகின்றது.

பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம் என்கிற போர்வையில் முஸ்லீம்களுக்கு எதிரான யுத்தத்தை சர்வதேச அரங்கில் அவிழ்த்து விட்டது.

நமக்கு ஏற்பட்ட அவலத்துக்காக நாம் என்ன செய்தோம்.. ?

எதுவுமே செய்யா விட்டாலும் செய்கிறவனையாவது சும்மா விட்டோமா ..?

இப்படி ஒரு நினைவு தினம் தேவையா ..?என்கிற கேள்விக்கணைகள் தொடுத்து முட்டைக்குள் மயிறு புடுங்குகிறோம் .தொதல் துண்டுகளுக்காக கருத்து மோதல்களை ஏற்படுத்தி அரசியல் வேஷம் போட்டு ஒருத்தனை ஒருத்தன் கருவாடு போட்டு குளம்பு வைக்கிற நிலையில் தான்தோன்றி சமூகமாக வாழ்த்து கொண்டிருக்கிறோம் நாம்.

யுத்தம் முடிந்த நிலையில் பலமான அரசியல் பொருளாதார செல்வாக்கு இருந்ததும் நமது பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் அனாதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

நமக்குள் உள்ள பிளவுகள் கருத்து முரண்பாடுகள் ,ஈகோக்கள் ,ஜமாத்து பேதங்கள் தகர்த்து எறியப்பட வேண்டும்.

இந்த வெளியேற்றதை சர்வதேச ரீதியாக நினைவு படுத்தி பல்வேறு மொழிகளில் கட்டுரைகள் நூல்கள் ஆவணப்படங்கள் ஏன் திரைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு நமக்கு இடம்பெற்ற அவலத்தை சர்வதேச மையப்படுத்தி நமக்குரிய இழந்த உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

-முஹம்மது ராஜி

Web Design by The Design Lanka