ரமளான் மாதமும் அல்குர்ஆனும் (2 » Sri Lanka Muslim

ரமளான் மாதமும் அல்குர்ஆனும் (2

al quran

Contributors
author image

எம்.எல்.பைசால் (காஷிபி)- Qatar

3.அல்குர்ஆனை மனனம் செய்தல்
இவ்வுலகில் அதிகமாக மனம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் வேதவாக்கியம் அல்குர்ஆனே. நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் குர்ஆன் மனனம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது மேலும் நபியவர்கள் அதனை மனனம் செய்யுமாறும் மக்களை உபதேசித்தும் உள்ளார்கள்.
அல்குர்ஆனை மனம் செய்தல் முதன்மையான செயற்பாடாக “ஸலபு ஸாலிஹீன்கள்” கைக்கொண்டு வந்தனர். அவர்கள் ஒரு மாணவன் கற்க விரும்பினால் அல்குர்ஆனை முதலில் மனம் செய்வதை தெரிவு செய்தனர்.

கல்வி கற்பதில் முற்படுத்த வேண்டியது அல்குர்ஆனை மனனம் செய்தலை யாகும். ஏனெனில் “ஸலபு ஸாலிஹீன்கள்” அல்குர்ஆனை மனம் செய்தவர்களைத் தவிர அல்குர்ஆனையோ அல்லது அல் ஹதீஸையோ கற்றுக் கொடுக்க முற்பட மாட்டார்கள் என இமாம் நவவி (றஹ்) அவர்கள் கூறினார்கள்.

“மார்க்க கல்வியினை கற்க விரும்பும் ஒரு மாணவனை முதலில் அல்குர்ஆனை மனனம் செய்ய அனுமதிக்க வேண்டும் அதுவே முதன்மையானதும் அடிப்படை யானதுமாகும்” என்று இமாம் இப்னு தைமியா (றஹ்) அவர்கள் கூறினார்கள்.

முன்பு ஒரு காலத்தில் அல்குர்ஆனை மனனம் செய்வதற்கான கலாபீடங்கள் குறிப்பிட்ட சில கிராமங்களிலேயே எமது நாட்டில் காணபட்டன. ஆனால் இன்று பல கிராமங்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு கிராமத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் குர்ஆன் மனனப் பிரிவு ஆரம்பிக்கப் பட்டு மாணவர்களின் குர்ஆன் மனனத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளமை அதன் முக்கியத்துவத்தினை சாட்சி பகர்ந்து நிற்கின்றது அல்ஹம்துலில்லாஹ்.

அல்குர்ஆன் எமது வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பங்களிப்பு செலுத்துவதால் அதனை மனம் செய்தல் அத்தியாவசியமாகும் .எங்களில் அதிகமானவர்கள் அதில் கவனம் செலுத்துவதும் இல்லை, முயற்சிப்பதும் இல்லை . அதற்கான ஒரு சந்தர்ப்பமாக எஞ்சியுள்ள ரமளான் காலங்கள் உதவியாக இருக்கட்டும். குர்ஆனை முழுமையாக மனனம் செய்ய முடியாவிட்டாலும் குறிப்பிட்ட சில சூராக்களை மனனம் செய்து அதன் பயனை பெற முயற்சித்தல் வேண்டும் .

அல்குர்ஆனை மனனம் செய்வதன் பயன்கள்
01.நபி (ஸல்) அவர்களை பின்பற்றுதல்.
02.”ஸலபு ஸாலிஹீன்களின்” முன்மாதிரியினை தொடர்தல்
3.அல்குர்ஆனை மனனம் செய்தல் இஸ்லாமிய உம்மத்தின் சிறப்பம்சம் .
04.அல்குர்ஆனை மனனம் செய்வது மிகவும் இலகுவானது.
05 இது ஒரு மார்க்க செயற்பாடாகும் இதனை முழுமையாக மனனம் செய்ய முடியா விட்டாலும் அதற்கான கூலி உண்டு கைசேதம் ஏற்படப் போவதில்லை.

06.ஹாபிழ்களுக்கு கௌரவமும் கண்ணியமும் உண்டு
07. இவ்வுலகத்தில் உள்ள இன்பங்களில் குர்ஆனை மனனமி டலும் அதனை கற்றுக் கொடுப்பதும் மிகச் சிறந்த பணி.
08.குர்ஆனை மனனமிடுவதன் மூலம் இவ்வுலகிலும் மற்றும் மறுமையிலும் உயர்வும், நரகத்தில் இருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.
09. குர்ஆனை மனனன் செய்தவர்கள் மலக்குமார்களுடன் இருப்பர்.

10. அல்லாஹ்வினை எப்பொழுதும் நினைவிற் கொண்டு கருமமாற்றும் சந்தர்ப்பம் உண்டு
வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் எம்மை வழிப்படுத்தும் குர்ஆனின் சில பகுதிகளையாவது மனனன் செய்து அதன் பயனை பெற ரமளான் காலத்தினை பயன்படுத்திக் கொள்வோம்.

4. அல்குர்ஆனின் பொருளை அறிதல்
வாழ்க்கையின் வழிகாட்டியான அல்குர்ஆன் கூறும் பொருளை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு எல்லோர் மீதும் உள்ளது . அல்குர்ஆன் என்பது அல்லாஹ்விடம் இருந்து வந்த செய்தியாகும் அச்செய்தி அரபு மொழியில் இருப்பதனால் அதன் பொருளை அறிவதில் பலர் ஆர்வம் காட்டுவதில்லை. குறைந்தது நாளாந்தம் தொழுகையில் ஓதப்படும் குர்ஆன் சூராக்களின் பொருளை அறிந்து மனதிற்கொள்ள முயற்சித்தல் அவசியமாகின்றது.

அல்குர்ஆன் அருளப்பட்டது வெறுமனே ஒதுவதற்காக அல்ல. அதன் வசனங்களை ஆயிந்து அது கூறும் பொருளை விளங்கி தானும் கற்று மனித சமூகத்திற்கும் கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எம் எல்லோர் மீதும் இருக்கிறது.

நபித் தோழர்களின் செயற்பாடு பின்வருமாறு காணப்பட்டதாக இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,,
“எங்களில் ஒரு மனிதன் பத்து குர்ஆன் வசனங்களை கற்றால் அவ்வசனங்களின் கருத்துக்களை அறிந்து அதற்கேற்ப செயற் படாமல் வேறு வசனங்களை கற்றுக் கொள்ள மாட்டார்” (அத்தப்பரி )
இச்செய்தி அல்குர்ஆனின் பொருளை அறிந்து அதன் படி செயற்படுவதை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

பாடசாலை பருவங்களில் மாணவர்கள் பரீட்சையினை நோக்காகக் கொண்டு சில குர்ஆன் வசனங்களின் பொருளை அறிந்து மனனமிட்டுக் கொள்ளவர் பின்னர் வாழக்கையில் தொடராக பேணப்படாமையினால் அவர்களது மனதினை விட்டும் நீங்கி செல்வதை அனுபரீதியாக காண்கின்றோம். அவ்வாறின்றி வாழ்க்கை பாடமாகக் கொண்டு அதனை முன்னெடுக்கும் போது வெற்றி தங்கியுள்ளது.

எம்மில் பலர் பல பாடல்களை மனனமிட்டுக் கொள்வர் அதேவேளை வாழ்க்கையின் பாடமாகிய குர்ஆனின் பொருளினை அறிந்து குறைந்தளவு சிறிய சூராக்களின் பொருளை அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.

இக்குறைபாடுகள் சமூகத்தில் களையப் பட்டு குர்ஆனின் பக்கம் கவனத்தினை திருப்புதல் அவசியமாகும்.
எனவே விரும்பிய மொழியில் அல்குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இக்காலத்தில் பொழி பெயர்ப்பினை பெற்று பொருள் அறிந்து பயன் பெறுவோம் .
தொடரும்

Web Design by The Design Lanka