கேள்விக்குறியாகும்; இளைஞர்களின் உளநலம் » Sri Lanka Muslim

கேள்விக்குறியாகும்; இளைஞர்களின் உளநலம்

mental

Contributors
author image

M.M.A.Samad

 ஒக்டோபர் 10ஆம் திகதி உலக உளநல தினமாகும். உலகளாவிய ரீதியில் உலக உளநல தினம் 1992 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இத்தினத்தில் உளநலம் மற்றும் உளப் பிரச்சினகள் தொடர்பில் அறிவூட்டபு;படுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆலோசனை வழங்குவதும் என்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. ஏறக்குறைய உலக உளநல சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 150 நாடுகளில் இந்த உலக உளநலத் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

உள நலத்திற்கான வழிகாட்டலில் இத்தினத்தில் ஆயிரமாயிரம் தொண்டர்கள் உளப்பிரச்சினை தொடர்பாகவும் அதற்கான விழிப்பூட்டல் நடவடிக்கைகளுக்காகவும் உலகளாவிய ரீதியில் கலந்துகொண்டு இத்தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இவ்வருட உலக உளநல தினத்திற்கான கருப்பொருள் ‘உலக மாற்றத்தில் இளைஞர்களும் உளநலமும்’ என்பதாகும். இக்கருப்பொருளுடன் கூடியதான உளநல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்றைய தினத்தில் பல பல்வேறு அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

அந்த வகையில,; உலக உளநல தினத்தையொட்டி உளநலம்;, உளப்பிரச்சினைகள், உளப்பிரச்சினைகளிலிருந்து உள நலத்தைப் பெறுவதற்கு வழிகோலும் உளவளத்துணைச் செயற்பாட்டின்; அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகவுள்ளது.

குறிப்பாக தற்கால இளைஞர்களிடையே காணப்படும் பிறழ்வான நடவடிக்கைகள் குறித்த அதிதி அக்கறையும், அவதானமும் இன்றியமையாததாகவுள்ளது. கட்டிளைப்பருவ வயதையுடையோர் முதல் ஆரம்ப வயது வந்தோர் பருவத்தை அடைந்தவர்கள் வரையான பலரிடையே காணப்படுகின்ற பல்வேறு பிறழ்வான செயற்பாடுகள் சமூக பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. இத்தகைய செற்பாடுகளின் பின்னணியில் இளைஞர்களின் உள ஆரோக்கியமும் காணப்டுகிறது.

தொழில்நுட்ப வளர்;ச்சி ஏற்படுத்தியுள்ள மாற்றத்தின் வழியே பயணிக்கும் இஞைர்கள் பலர் பல்வேறுபட்ட விடயங்களுக்கு அடிமையாகி வருவதை அவதானிக்க முடிகிறது. போதைப் பொருள் பாவனை முதல் சமூக வலத்தளப் பாவனை வரை இளைஞர்கள் எல்லை மீறி விட்டதனால் அவர்களின் உடல், உள ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிட்டதோடு பல்வேறு சமூக, பொருளாதார, பிரச்சினைகளையும், விளைவுகளையும் ஏற்படுத்தி வருவதையும் காண முடிகிறது.

சமுதாய சீர்கேடுகள் பலவற்றுக்கும், சமூக பிரச்சினைகளின் தொடக்கத்திற்கும் காரணமாகிவிட்ட போதைப் பொருள் பாவனையும், இணைய வழி சமூக வலைத்தளப் பாவனையும் இளைஞர் சமுதாயத்தை அதலபாதளத்தில் தள்ளிக்கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இலத்திரனியலும் இளைஞர்களும்
அன்றாட வாழ்வின் செயற்பாடுகளை செயல்திறன்மிக்கதாக்கவும,; துரிதமாக மேற்கொள்ளவும், அறிவுத் தேடலை அதிகரித்துக்கொள்ளவும், கால நேர விரையங்களை தவிர்த்துக்கொள்ளவும், தகவல்களை தாமதமின்றிப் பரிமாறிக்கொள்ளவும் என பல்வேறு நோக்கங்களை இலக்காகக் கொண்டுதான் இலத்திரனியல் சாதனங்களும் அவற்றினூடாக பல்வேறு தொடர்பாடல் முறைமைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

வானொலி, தொலைகாட்சி, தொலைபேசி என உலகை வலம் வந்த தொழில்நுட்ப உபகரணங்களின் வரிசையில் கையடக்கத்தொலைபேசி, கணணி என்பன கண்டுபிடிக்கப்பட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வுகரணங்கள் பல்பேறு வடிவங்களிலும,; பெயர்களிலும் உள்ளதுடன் அவற்றின் பயன்பாடுகளும் உச்சத்தைத் தொட்;டுள்ளன.
இவற்றின் அதிகரித்த பயன்பாடுகள் தனிநபரிவும், சமூகத்திலும் நிம்மதியை இழக்கச் செய்திருக்கிறது. இச்சாதனங்களின் தொழில்பாட்டில் நன்மைகள் பல இருந்தும், அவற்றை முறைதவறிப் பயன்படுத்துவதனால,; அவற்றினால் கிடைக்கின்ற அநுகூலங்களை விட பிரதிகூலங்களே அதிகம் என்ற எண்ணப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்துள்ள இணையப் பயன்பாட்டுடன் தொடர்பான பல்பேறு வசதிகள் இன்று பலரை அடிமையக்கியிருக்கிறது. இணைய அடிமைகள் என்றும், முகநூல் அடிமைகள் என்றும் ஸ்மாட்போன் செல்ஃபி பிரியர்கள் என்றும் அழைக்கச் செய்திருக்கிறது.
இவற்றின் முறையற்ற பயன்பாடுகள் தனிநபர்களில் உளவியல் ரீதியான பாதிப்புக்களையும் சமூக, பொருளாதாப் பிரச்சினைகளையும் உருவாக்கி உயிர்கள் கூட காவுகொள்ளப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்மை தொடர்பில் அவதானம் செலுத்துவது ஆரோக்கியமானதாகும்.

குறிப்பாக இளைஞர் சமுதாயம் இவற்றில் அள்ளுண்டு போய்;கொண்டிருப்பது அவர்களது உடல், உள ஆரோக்கியத்தைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டு வருவது மாத்திரமின்றி, சமூக ஆராக்கியத்தையும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது. இருப்பினும், ஆரோக்கியமான விழுமிய வாழ்விற்கு அவதானங்களும் அவை தொடர்பான அறிவாற்றலும் அவசிமாகும்.

இணையப்பாவனையும் உளப்பாதிப்புக்களும்.
இணையப் பாவனை வழியிலான சமூகவலைத்தளங்களில் மூழ்கிக் கொண்டிருப்பர்கள் இளைய தலைமுறையினர்தான். இளைய தலைமுறையினரான கட்டிளமைப் பருவத்தினரும் ஆரம்ப வயதுவந்தோருமே இப்பயன்பாட்டில் நேரத்தை விரையம் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் இப்பயன்பாடானது நேரத்தை மாத்திரமின்ற பல்வேறு துன்பியல்களையும் தேடிப் பெறச் செய்கிறது.
ஆயிரக்கணக்கான சமூக ஊடகங்கள் இணையத்தள வலையமைப்பில் உலகளாவிய ரீதியில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 40 சமூக ஊடக இணைத்தளங்கள் உலகளாவிய ரீதியில் பிரபல்யமானவை. அதில் முதன்மை வகிப்பது முகநூல் என்று கூறப்படும் பேஸ்புக் ஆகும்.

சமூக ஊடகங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் பேஸ்புக் இணையத்தளத்தை அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் ஸுகர்பேர்க்கும் அவரது சக நண்பர்களும் இணைந்து 2004ஆம் ஆண்டு வெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி தொடங்கினர். பல்கலைக்கழக நண்பர்களுக்கிடையே ஒரு தொடர்பாலை ஏற்படுத்த தொடங்கப்பட்ட பேஸ்புக்கை கடந்த ஜனவரி 30ஆம் திகதி வரை 2.46 பில்லியன் பேர் பயன்படுத்தியிருக்கின்றனர். பிரபல்யமான மற்றுமொரு வலைத்தளம்தான் வட்சப் சமூகவலைத்தளமாகும். இதனை இவ்வருடத்தின் ஜனவரி மாதம் வரை 1.5 பில்லியன் பேரும் உலகலாவிய ரீதியில் பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஆய்வு குறிப்பிடுகிறது.

பேஸ்புக் பாவனை தொடர்பாக சர்வதேச ஆய்வுதரும் தரவுகளின் பிரகாரம், உலகளாவிய ரீதியில், ஒவ்வொரு மாதமும் 1.23 பில்லியன் பேரும் தினமும் 757 மில்லியன் பேரும் பேஸ்புக்கைப் பயன்படுத்துக்கின்றனா.; உலகியுள்ள 14 பேரில் ஒருவர் பேஸ்புக் அங்கத்தவராகவுள்ளார். ஒரு நாளைக்கு 100 மில்லியன் மணித்தியாலங்கள் பேஸ்புக் பாவிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. அத்தோடு, தினமும் 400 மில்லியன் படங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதுடன் ஒரு செக்கனுக்கு 9,000 புகைப்;படங்கள் பகிரப்படுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்படுகின்றன.

இவ்வாறு உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் அதிகளவு இணையத்தைப் பயன்படுத்துவர்களாக இளைய தலைமுறையினர் விளங்குவதை அவதானிக்க முடிகிறது. இலங்கையில் இணையப் பாவனையாளர்களில் 70 வீதமானோர் பேஸ்புக் பாவனையாளர்களாகவும் இவர்களில் 41 வீதமானோர் 18 வயதுக்கும் 24 வயதுக்குமிடைப்பட்டவர்களாகவும் 34 வீதமானோர் 25 வயதுக்கும் 34 வயதுக்குமிடைப்பட்டவர்களாகவும் உள்ளனர்

இந்த வயதுப் பருவத்தினரிடையே காணப்படுகின்ற உடலியல் மாற்றங்கள், பாலியல் வளர்ச்சி, மனவளர்ச்சி, சுதந்திரமான உணர்வுகளின் வளர்ச்சி, நுண்மதித் திறன், சகபாடிகளின் உறவு, கவர்ச்சி;, பொழுதுபோக்கு என்பவற்றைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கானதொரு வாய்ப்புத்தளமாக இந்த சமூகவலைத்தளங்களும் அவற்றோடு இணைந்தவைகளும் கைகொடுக்கின்றன.

வயதுப் பண்புகளின் வளர்ச்சிச் செயற்பாடுகளை பிரயோக ரீதியாக பயன்படுத்துவதற்கு முற்படுகின்ற இளம் வயதினர் சமூக வலைத்தளங்களின்; நல்லபக்கங்களுக்குச்; செல்வதிலும் பார்க்க எதிர்மறைப் பக்கங்களை நாடுகின்றனர். அதனால் அவர்கள் தானாகவே பிரச்சினைகளுக்குள் தள்ளப்படுகின்றனர். இவர்கள் iவெநசநெவ யனனiஉவழைn னளைழசனநச என்ற இணைய அடிமைதன்மை கொண்ட உளப் பிரச்சினைக்கு ஆளாகுவதாக மனநல மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். உலகளாவிய ரீதியில் இணையத்தைப் பயன்படுத்துகின்றவர்களில் 6 வீதமானவர்கள் இந்த இணைய அடிமைத்தன்மைகொண்ட உளப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மிதமிஞ்சிய இணைத்தளப் பாவனையானது நிர்பந்தஎண்ணச் சுழற்சி ஓசிடி (ழுடிளநளளiஎந ஊழஅpரடளiஎந னளைழசனநச) எனும் உளப் பிரச்சினையை உருவாக்குவதுடன்;, மனச்சோர்வு, பதகளிப்பு போன்ற உளப் பிரச்சினைகளுக்கும் தள்ளுகிறது. இணையப் பாலியல் காட்சிகளுக்கு அடிமையாதல், முறையற்ற இணைய உறவுகள ஏற்படல்;, இணையச் சூதாட்டம், போன்றவற்றிற்கும் அடிமையாக்குகிறது.
இவ்வாறு அடிமையாவதனால் உடல், உள பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவும் செய்கிறது. இவ்வாறான நிலையில்தான் ஸ்மாட்போன்களினூடாக செல்ஃபி எடுப்பவர்களும் ஆளுமை உளப் பிரச்சினைக்கு ஆளாகுவதாக ஆய்வுகளினூடாக அறியப்பட்டுள்ளது.

ஸ்மாட்போனுடனான செல்பிஃயும் உளப்பாதிப்பும்
உலக சந்தையில் பல்வேறு பெயர்களில் பல்வேறு வடிவங்களில் பல தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஸ்மாட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. உலகளாவிய ரீதியில் ஏறக்குறைய 2.8 பில்லியன் மக்கள் ஸ்மாட்போன் பானையாளர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கையானது 2020ஆம் ஆண்டளவில் 6.1 பில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வசதியுடைய ஸ்மாட்போன்களை கொள்வனவு செய்வதற்காக சில யுவதிகள் கன்னித்தன்மையை ஏலம்போட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் உலகில் இடம்பெற்றுள்ளன.

;இலங்கையில் கையடக்கத்தொலைபேசி இணைப்பை வைத்துள்ளவர்கள்pல் அதிகமானோர் சமகாலத்தில் ஸ்மாட் போன் பாவனையாளர்களாக உள்ளனர். இந்த ஸ்மாட்போன் பிரியர்கள் செலஃ;பி பிரியர்களாகவும் மாறியுள்ளனர். எவ்வித கூச்ச உணர்வுமின்றி, ஏனையவர்களது சமூகப் பார்வையையும் கருத்திற்கொள்ளாது செல்ஃபி எடுக்கும் கலாசாரம் கொடிகட்டிப் பறப்பதை பட்டிதொட்டி எங்கும் காண முடிகிறது. இவ்வாறு செல்ஃபி எடுப்பதும் ஒரு புதுவகையான உளப்பிரச்சினை என அமெரிக்க மனநல ஆய்வு மையம் குறிப்பிடுகிறது.

செல்பிஃ எடுப்பதானது ‘நாசிஷியம் எனும் ஆளுமைக் உளப்பிரச்சினையின் அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தானே உயர்ந்தவர் என்ற மனப்பாங்கு, சுயநலத்தன்மை, அடுத்தவர் உணர்வை மதிக்காமை, அடுத்தவர் குறித்த கரிசனம் இன்மை, தற்பெறுமை போன்ற அறிகுறிகளை இந்த உளப்பிரச்சினையுடையவர்களிடம் காணப்படும்.

இப்புதுவகையான உளப் பிரச்சினையை அமெரிக்க மருத்துவர்கள் 3 வகையாகப் பிரித்துள்ளனர். அதில் ஒன்று தினமும் மூன்று முறை செல்ஃபி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றாதிருப்பது ஆரம்ப நிலை. தினமும் மூன்று முறை படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவது இரண்டாவது நிலை. எப்போதும் எதைக்கண்டாலும் அவற்றுடன் செல்ஃபி எடுத்து அதனை உடனுக்குடன் வலைத்தளங்களில் பதிவேற்றுவது 3வது நிலை. இதுவே உச்சநிலை என தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி அதிக லைக் கிடைக்கும் என்று எண்ணி ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுத்து அதனால் கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி வiர் உலகளாவிய ரீதியில் 250க்கு மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இதில் அதிகளவிலானோர் இந்தியாவில் இறந்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான வாஷிங்டன்போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் ரயில்பாதையில் ஏற்படும் உயிர் இழப்புக்களில் அதிகம் செல்வாக்குச் செலுத்துவது செல்பிஃ படமெடுப்பினால் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 6ஆம் திகதி பலாங்கொடையில் செல்பிஃ படம் எடுக்கச் சென்ற 22 வயதுடைய இளைஞர் ஆற்றில் விழுந்து பலியான சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதோடு இதுவரை 20க்கு மேற்பட்டடோர் இலங்கையில் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செல்ஃபி. எடுக்கும் பழக்கம் அமெரிக்காவின் பிரபல புகைப்படக் கலைஞரான ரொபட் கொனிலியஸினால் 1839ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும் 2013ஆம் ஆண்டிலேதான் உலகளாவிய ரீதியில் பிரபல்யம்பெற்றது. அதனுடனான மோகம் அதிகரித்தது. செல்;பிஃ பிரியர்களாக ஆசிரியர் முதல் அரசியல்வாதிகள் வரை செல்வி பிரியர்களாக இலங்கையிலும் மாறி வருகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். அண்மையில் சிகிரிய மலைக்குண்டில் ஐந்து இளைஞர்கள் ஏறி அநாகரியமான முறையில் செல்பிஃ எடுத்து அவற்றை சமூகவலைத்தளங்களில பதிவிட்டமை இளைஞர்களின்; மேற்படி செல்பிஃ மோகத்திற்கு சான்றாகவுள்ளது.

இருப்பினும். இளையத்தள பாவனைக்கு அடிமைப்பட்டவர்களும் ஸ்மாட்போனினூடாக செலஃ;பி எடுக்கும் அதி தீpவிர பிரியர்களுக்குமான உளவிளத்துணை உலகளாவிய ரீதியில் திட்டமிடப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கையிலும் இளைஞர்களிடையே உளவளத்துணை செயற்பாடுகள் அதிகரிக்கப்படுவது அவர்களின் உள ஆரோக்கியம் கேள்விக்குறியாவதைத் தவிர்க்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இளைஞர்களின் உளநலத்தில் உளவளத்துணை.

உளவளத்துணையானது ‘ஒருவர் நாளாந்த வாழ்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோது முகங்கொடுக்கும் எதிர்பார்த்த, எதிர்பாராத சமபவங்களினால் ஏற்படுகின்ற உளரீதியான பிரச்சினைகளுக்கு உளவியல் முறைகளைப் பயன்படுத்தி அவரிடம் காணப்படும் உள்ளார்ந்த சக்தி, திறன்களை வெளிக்கொணர்வதன் மூலம் நம்பிக்கையீனத்தை இல்லாமல் செய்து, ஆளுமையை விருத்தி செய்து, அவரது பிரச்சினைகளுக்கு அவரே தீர்வு காண்பதற்கு உதவுகின்றதொரு அறிவியல் ரீதியான தொழில்வாண்மையான பணியாகும்.

சமூ அமைப்பில் ஏற்பட்டுள்ள துரித மாற்றங்களினால் உளவளத்துணையின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இச்சேவை இன்று இன்றியமையாததாக மாறியதற்குப் பல்வேறுவிடயங்கள்; காரணமாகவுள்ளன. இவற்றுள் பிரதானமானது சமூ, கலாசார மாற்றங்கள் ஆகும். இவை நாளுக்கு நாள் மிகவேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் இளைஞர்கள்; தமது பாரம்பரிய சமூக, கலாசார பண்புகளை விட்டு தூரமாகச் செல்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகளினால் ஏற்படுகின்ற உளப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று வாழ்வை இன்பகரமாக்குவதற்கு இன்று இளைஞர்களுக்கு உளவளத்துணை அவசியமாகியுள்ளமையை எவரும் மறுப்பதற்கில்லை. உளவளத்துணையானது, உடல், உளநோய்களுக்குக் காரணமான மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். சமூகக் கலாச்சார மாற்றங்களுக்கேற்ப தம்மை இயைபாக்கம் செய்து கொள்ள முடியாதவர்களுக்கு வழிகாட்டி, நவீன மாற்றங்களுக்கேற்ப அவர்களை இயைபடையச் செய்ய உதவுகிறது.

இளைஞர்களிடையே காணப்படும் உளநெருக்கீடு, பதகளிப்பு, உளச்சோர்வு, மனவெழுச்சி சார் பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றி சந்தோஷமாக வாழ்வதற்கும் துணைநிற்கிறது. சுய மதிப்பீடு, சுய அடைவைக் கட்டியெழுப்ப உதவுதல். யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள உதவுதல். நேர்த்தன்மையான மனப்பாங்குகளை ஊக்குவித்தல். போன்றவற்றுக்கு துணை நிற்கும் உளவளத்துணையினூடாக இளைஞர்களின் உள ஆரோக்கியம் கட்டியெழுப்பப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது.

இத்தேவையை துரிதமாக நிறைவேற்ற எடுக்கும் நடவடிக்கைகள் உள ஆரோக்கியமுள்ள இளைஞர் சமுதாயத்தை உருவாக்கவும், சமூக, பொருளாதார, அரசியலில் அவர்கள் மூலம் வளமான மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவலாம். மாறாக இளைஞர்களின் உள ஆரோக்கியம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகக் காணப்படுமாயின் போதைவஸ்துப் பாவனை முதல் அத்தனை சமூகவிரோத செயற்பாடுகளும் தொடர்ந்து இடம்பெறவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

வீரகேசரி – 10.10.2018

Web Design by The Design Lanka