ஆயிரமாவது முதற்பிரதி நோக்கி.. ஓர் அற்புத மனிதர்! » Sri Lanka Muslim

ஆயிரமாவது முதற்பிரதி நோக்கி.. ஓர் அற்புத மனிதர்!

43744339_10217276346971506_3731335546585219072_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ashroff Shihabdeen


1999 ஆகஸ்ட் முதல் இவ்வருடம் செப்டம்பர் வரை நான் வெளியிட்ட எனது நூல்கள் பதினொன்றினதும் முதற் பிரதி பெற்றவர் ஹாஜி ஹாஷிம் உமர் அவர்கள்.

ஒரு நூல் பிரதிக்கு ஐயாயிரம் ருபா முதல் பத்தாயிரம் ருபா வரை தந்து முதற் பிரதியைப் பெற்றுக் கொள்ளும் இந்த மனிதரை அற்புதமான மனிதர் என்று சொல்ல யாருக்கும் தயக்கம் வேண்டியதில்லை.

வெளியீட்டு விழா கொழும்பில் நடந்தால் மட்டுமல்ல, வெளியூர்களில் நடந்தாலும் வெளிநாடுகளில் நடந்தாலும் வாய்ப்பு இருந்தால் ஆஜராகி முதற் பிரதியைப் பெற்று வரும் ஹாஷிம் உமர் இலங்கைப் படைப்பாளிகளுக்கு இறைவன் அளித்த பெருவரம்.

முக்கியஸ்தராக இருந்தாலும் சாதாரண மனிதராக இருந்தாலும் எல்லோரையும் ஒரே நிறையில் அவர் காண்பதையும் நட்புடனிருப்பதையும் அனைவரும் அறிவார்கள்.

வெளியுலகுக்குத் தெரியாமல் அவர் ஆற்றி வரும் உதவிகள் நிறைய உண்டு. அவற்றை அவர் எப்போதும் வெளிப்படுத்தியதில்லை. வெளியில் தெரிந்தது அவர் முதற் பிரதி பெறுகிறார் என்பது மட்டும்தான்.

அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த பண்பு என்னவெனில் போலித் தனம் இல்லாமல் பேசுவதும், பழகுவதும், நடந்து கொள்வதுமேயாகும்.

ஆயிரமாவது முதற் பிரதியை நோக்கிச் செல்லும் ஹாஜி ஹாஷிம் உமர் போல் ஓர் மனிதனை எதிர்கால எழுத்துலகம் சந்திக்குமா என்பது சந்தேகம்தான்.

எழுத்துலக வரலாற்றில் நூல்கள் எழுதாமலே அழியாத பெயரோடு அவர் நிலைத்திருப்பார்.

அன்னாரின் சேவைக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்திக்கிறேன்!

Web Design by The Design Lanka