ஆசிரிய டிப்ளோமாப் பயிற்சியை நிறைவு செய்த 1074 ஆசிரியர்களுக்கு இன்று பட்டமளிப்பு விழா » Sri Lanka Muslim

ஆசிரிய டிப்ளோமாப் பயிற்சியை நிறைவு செய்த 1074 ஆசிரியர்களுக்கு இன்று பட்டமளிப்பு விழா

PHOTO-2018-10-11-11-38-55

Contributors
author image

M.J.M.சஜீத்

அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு போன்ற கல்விக் கல்லூரிகளில் தமது ஆசிரிய டிப்ளோமா பயிற்சிகளை நிறைவு செய்த 1074 ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா திங்கள் கிழமை (08) அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. திருமதி.ஜயந்தி குணசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்குப் பட்டங்களை வழங்கி வைத்தார்.

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் பயிற்சி பெற்ற 541 ஆசிரியர்களுக்கும், மட்டக்களப்புக் கல்விக் கல்லூரியில் பயிற்சி பெற்ற 533 ஆசிரியர்களுக்கும் மொத்தம் 1074 ஆசிரியர்களுக்கான டிப்ளோமாச் சான்றிதழ்கள் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் ஒரே கூரையின் கீழ் முதல் தடவையாக இடம் பெற்றமை தேசிய நல்லிணக்கத்தை வளர்க்கும் ஒரு சிறப்பம்சமென கல்வியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

திறந்த பல்கலைக்கழக கல்விப் பேராசிரியர் பீ.சி.பக்கீர் ஜஃபர், கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் கலாநிதி.கே.ஈ.கருனாகரன், மட்டக்களப்புக் கல்விக் கல்லூரி பீடாதிபதி எஸ். ராஜேந்திரன், ஆசிரிய கல்விப் பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் திறந்த பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவனம் போன்றவற்றின் உயரதிகாரிகள், கல்விக் கல்லூரிகளின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திறந்த பல்கலைக்கழக கல்விப் பேராசிரியர் பீ.சி.பக்கீர் ஜஃபர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ‘இன்று பயிற்சியை முடித்துக் கொண்டு, பணியாற்றச் செல்லும் ஆசிரியர்கள் என்றும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்படுவதோடு, தமக்குப் பயிற்சியளித்த ஆசான்களையும் என்றும் நினைவிற் கொண்டு செயற்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

பிரதம அதிதி தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. திருமதி.ஜயந்தி குணசேகர இங்கு கருத்துத் தெரிவி;க்கையில்:- ‘ இன்று பட்டம் பெறும் ஆசிரியர்கள் அனைவரும் நாட்டிற்குத் தேவையான நற்பிரஜைகளை உருவாக்க வேண்டும். அதுவே இன்றையத் தேவை!’ எனக் கேட்டுக் கொண்டார்.

PHOTO-2018-10-11-11-38-55 PHOTO-2018-10-11-11-38-55 (2) PHOTO-2018-10-11-11-38-55 (1)

Web Design by The Design Lanka