சாய்ந்தமருது அல் - கமறூனில் முதல் தடவையாக 4 பேர் புலமைப்பரிசிலில் சித்தி: கல்விச் சமூகத்தால் கோரிக்கை ஒன்றும் முன்வைப்பு » Sri Lanka Muslim

சாய்ந்தமருது அல் – கமறூனில் முதல் தடவையாக 4 பேர் புலமைப்பரிசிலில் சித்தி: கல்விச் சமூகத்தால் கோரிக்கை ஒன்றும் முன்வைப்பு

pirincipal with Students

Contributors
author image

M.S.M.ஸாகிர்

கல்முனை கல்வி வலயத்தில் சாய்ந்தமருது கோட்டத்தில் கமு/க/மு அல் – கமறூன் பாடசாலையில் இருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 19 மாணவர்களில் 4 பேர் (21.05%) புலமைப்பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளதுடன், 17 பேர் (89.47%) சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக கல்லூரி அதிபர் எம்.ஐ. நிபாயிஸ் தெரிவித்தார்.

என்.எப். நப்லா (171), எம்.ஆர்.எப். மிஹ்னா சதா (169), என்.எப். செய்னப் (166), என்.எப். சஹ்னாஸ் (163) ஆகிய புள்ளிகளைப் பெற்று புலமையில் சித்தியடைந்துள்ளனர்.

“மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு அயராது கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், சகல விதங்களிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோர்களுக்கும் புலமைப்பரிசிலில் சாதனை படைக்க அயராதுழைத்த ஏ. நஸ்றுத்தீன் ஆசிரியருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, பாடசாலை மாணவர்கள் இதுபோல் கல்வியில் மென்மேலும் சாதனைகள் படைக்க இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் மாணவர்களின் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டு எமது பாடசாலை ஆசிரியர்களும் நானும் தொடர்ந்தும் அயராது முயற்சி செய்து வருகிறோம்”எனவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

கமு/கமு/அல்-கமறுன் வித்தியாலயம் இம்முறை வரலாற்றுச் சாதனை படைத்தது மட்டுமல்லாமல், பெற்றோர்களுக்கும் ஒரு சிறப்பான செய்தியையும் சொல்லியுள்ளதாக கல்விச்சமூகத்தினர் தெரிவிக்கின்றனiர்.

சில பாடசாலைகள் பெற்றோர்கள் மத்தியில் ஒரு விதமான மயக்கத்தையும், மாயையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அத்தகைய பாடசாலைகளில் மாத்திரம்தான் சரியான கற்பித்தல் நடக்கிறது என்றும், அங்கு தான் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற தவறான புரிதலின் அடிப்படையில் தங்களது பிள்ளைகளை அப்பாடசாலைகளில் தான் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் முண்டியடிப்பதை நாம் அறிவோம்.

ஆனால் அந்த மாயையை முறியடிக்கும் விதமாக தற்போது வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை – 2018 முடிவுகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.

இதன் மூலமாக, எல்லாப் பாடசாலைகளும் சிறந்த பாடசாலைகள்தான் என்றும், கற்பிக்கும் ஆசிரியர்கள் எல்லோருமே சிறந்தவர்கள்தான் என்றும் நிரூபணம் செய்திருக்கிறது.

இத்தகைய வரலாற்றுச் சாதனை நிகழ காரணமாக இருந்த மாணவர்கள், அதிபர் நிபாயிஸ், புலமைப்பரிசில் கற்றுக் கொடுத்த ஏ. நஸ்றுத்தீன் ஆசிரியர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நலன்விரும்பிகள் சகலருக்கும் கல்விச்சமூகத்தினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, எதிர்வரும் காலங்களில் பெற்றோர்கள் சில பாடசாலைகள் மீதான மோகத்தை தகர்த்து, தமக்கு அருகேயுள்ள பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளைச் சேர்க்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.

pirincipal with Students Students

Web Design by The Design Lanka