இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் » Sri Lanka Muslim

இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம்

9010

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் ராஜகிரியவில் கோட்டேயில் கட்டாா் அரசினால் 11ஆம் திகதி திறந்து வைக்க்பபட்டது. இந் நிகழ்வில் தொழில் அமைச்சா் பேர்சி சமரவீர இராஜாங்க, அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருநாயக்க, கட்டாா் நாட்டில் உள்துறை அமைச்சின் விசா சேவையின் பணிப்பாளா் மேஜா் அப்துல்லா கலிபா, இலங்கையில் உள்ள கட்டாா் துாதுவா் கலாநிதி ராஷித் பின் ஷபீக் அல் மர்றி ஆகியோா் இணைந்து இந் நிலையத்தினை திறந்து வைத்தனாா்.

இந் நிலையத்தினை திறந்து உரையாற்றிய கட்டாா் துாதுவா் –

இலங்கையில் இருந்து கட்டாா் நாட்டுக்கு கடந்த காலங்களில் விசா வழங்குவதற்கு ஒரு மாத காலம் எடுத்தது. தற்பொழுது இந் நிலையத்தின் ஊடாக 48 மணித்தியாலயத்திற்குள் விசா வழங்க முடியும். இலங்கையில் இருந்து நாளாந்தம் 700 விண்ணப்பங்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனா். புதிய விசா நிலையத்தில் கட்டாா் நாட்டில் வேலைக்காக விண்ணப்பிக்கும் போது தேவையான உயிா் புள்ளிவிபரவியல் , தரவுகளைான தொழில் உடன்படிக்கை, கைச்சாத்திடுதல் மற்றும் மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் பரிசோதனை , கைரேகை மூலம் விசா பெறும் நவீன முறையில் ்இந் நிலையம் அமையப் பெற்றுள்ளது. இது சர்வதேச தரத்தில் 48 மணித்தியாலயத்திற்குள் இலங்கைக்கு கட்டாா் நாடே விசா வழக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந் நிலையத்தில் மருத்துவம், வங்கி, முறை சகல வசதிகளும் அமையப் பெற்றுள்ளன.

விசாவை விண்ணப்பிக்கும் போது தேவையான உள்துறை, அமைச்சின் பதிவு இலக்கம், பெறல், இணையத்தளம், ஊடாக ஒன் லைன் தொழில் நுட்படம் மூலம் சந்திப்பதற்கான நேரத்தினை ஒதுக்குதல், மற்றும் சந்திப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னா் கட்டார் விசா நிலையத்திற்கு செல்வதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு்ள்ளன. அதற்கமைய விசா நிலையத்திற்கு செல்வதற்கு சகல வசதிகளும் இங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக விண்ணப்பதாரிகள் தமது தொழில் தொடா்பாக உடண்படிக்கை கைச்சாத்திடல் வேண்டும். இல 435-3 சென்டரா சுப்பா் சிட்டி ஸ்ரீ ஜெயவா்த்தன புர கோட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள விசா நிலையம் சர்வதேச தரத்திலான புதிய தொழில்நுட்பமுறையில் அமைக்கப்பட்டு்ளள்து. தினமும் 08.30 -04.30 மணி வரை திறந்திருக்கும். அதன் மருத்துவ பரிசோதனைகளை மேற்பொள்வது விசா தொடா்பான மருந்து அறிக்கைகள் வழங்குவதற்கும் ஸ்ரீம் கெல்த் கெயாா் வைத்தியசாலை 1முதலாம் மாடியில் அமையப்பெற்றுள்ளது. இதனையும் அதிதிகள் திறந்து வைத்தாா்கள். மும்மொழிகளிலும் விசா சேவை உள்ளது. உதவிக்கு 117942999 தொடா்பு கொள்ளலாம்

Web Design by The Design Lanka