இலங்கை நுகர்வோரின் தேவையுணர்ந்து அதற்கேற்ப செயற்படும் » Sri Lanka Muslim

இலங்கை நுகர்வோரின் தேவையுணர்ந்து அதற்கேற்ப செயற்படும்

7M8A1643

Contributors
author image

Irshad Rahumadullah

இலங்கை நுகர்வோரின் தேவையுணர்ந்து அதற்கேற்ப செயற்படும் பலத்தினை கூட்டுறவுத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் அமைச்சின் செயலாளர் அசோக ரண்ஜித் ஆகியோர் வழங்குவதாகவும், இதனை கொண்டு மேலும் பல பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை கூட்டுறவு நுகர்வோர் சம்மேளனத்தின் பணிப்பாளர் முஹம்மத் றியாஸ் தெரிவித்தார்.

இலங்கை கூட்டுறவு நுகர்வோர் சம்மேளனமும்,பிரவுன்ஸ் முன்னணி வர்த்தக நிறுவனமும் மேற்கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையினை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கும் நிகழ்வு இன்று கொழும்பு தாஞ் சமூகத்திர ஹோட்டலில் இடம் பெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவி ரதன்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் செயலாளர் ரன்ஞித் அசோக,மேலதிக செயலாளர் சமன் ஜயசிங்க,கூட்டுறவு ஆணையாளர் எஸ்.எல்.நசீர்,சம்மேளனத்தின் தலைவர் தென்னகோன் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டு நிகழ்வில் மேலும் முஹம்மத் றியாஸ் உரையாற்றுகையில் –

சர்வதேச நாடொன்றின் ஜனாதிபதி ஒருவருடன் அந்த நாட்டின் இரு முக்கிய பிரமுகர்கள் நேரடியாக தெலைபேசியில் பேனும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதில் ஒருவர் அந்த நாட்டு இரானுவ தளபதி,மற்றவர் கூட்டுறவு அமைப்பின் தலைவர்.இது எதனை எடுத்துக்காட்டுகின்றது என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

எமது நாட்டை பொருத்த வரையில் கூட்டுறவு துறை தொடர்பில் மாறுபட்ட கருத்து இருந்தது,அதனை மாற்றி புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்து செல்லும் வகையில் இத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கொண்டுள்ளார்.இந்த மாற்றத்தோடு எமது நிறுவனமும் பல முன்னேற்ற செயற்பாடுகைளை ஆரம்பித்துள்ளது.

7 மில்லியன் அங்கத்தவர்களை கொண்ட கூட்டுறவு அமைப்பு பல கிளைகளை கொண்டுள்ளது.அங்கத்தவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும்,அவர்களது தேவைப்பாடுகள் தொடர்பிலும் தேவைாயன காத்திரமான நடவடிக்கைகள எமது அமைப்பு முன்னெடுத்துவருகின்றது.

பிரவுன்ஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட உடன்படிக்யைானது இந்த அங்கத்தவர்களுக்கு பெரும் லாபம் ஈட்டும் ஒன்றாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.எதிர் காலத்தில் பொதி செய்யப்பட்ட பால் மாவினை சந்தைக்கு வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்களை செய்துள்ளோம்.

குறிப்பாக வரட்சி பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கு நிவாரணத்தை எமது சம்மேளனம் பொறுப்பெடுத்து செயற்படுத்துகின்றது.இது போல் கிழங்கு உற்பத்தியாளர்களின் உருளைக்கிழங்கினை நியாயமான விலை கொடுத்து வாங்கி அதனை சந்தை விலைக்கு வழங்குகின்றோம்.இதனால் கிழங்கு உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள்.இது போல் எமது பொருட்கள் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற போது ஒரு சிறிய லாபம் எதிர்பார்க்கப்படுகின்றது.எதிர்காலத்தில் பொருட்கள் விநியோகத்தில் அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக கூறிய முஹம்மத் றியாஸ் கூட்டுறவு துறை மூலம் மீண்டும் நகர ,கிராம மக்களது தேவைகளை அடைந்து கொள்ளும் வேலைத்திட்டம் நவீன முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் இதன் போது அவர் கூறினார்.

Web Design by The Design Lanka