கல்முனை சாஹிரா கல்லூரியில் அழகுக்காக நடப்பட்ட மரங்கள் இனந்தெரியாதோரால் அழித்தொழிப்பு » Sri Lanka Muslim

கல்முனை சாஹிரா கல்லூரியில் அழகுக்காக நடப்பட்ட மரங்கள் இனந்தெரியாதோரால் அழித்தொழிப்பு

4

Contributors
author image

M.S.M.ஸாகிர்

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையை அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ், அழகிய மரங்கள் நடும் திட்டம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் கலந்து கொண்டு முதலாவது மரத்தை நட்டிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரியின் முன்னாள் அதிபர்களான எம்.சீ.ஆதம்பாவா, ஏ.எம்.ஹுஸைன், ஏ.பீர்முஹம்மது, ஐ.எல்.ஏ. மஜீத், எம்.எம். இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நட்டிவைத்தனர்.

நீர்கொழும்பில் இருந்து சுமார் ஓர் இலட்சம் பெறுமதியான பொக்ஸ் டெய்ல் வகையைச் சேர்ந்த பாம்றீ மரக்கன்றுகள் எடுத்துவரப்பட்டு அவை கல்லூரியில் நட்டிவைக்கப்பட்டன.

இத்திட்டம் பற்றி பலரும் பாராட்சி பேசிய அதேவேளை, நட்டிவைக்கப்பட்ட மரங்கள் இனந்தெரியாதோரால் வெட்டி அழித்தொழிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி கல்லூரி அதிபரிடம் வினவிய போது, இம்மரங்கள் நட்டு இரண்டு நாட்களின் பின்னர் அதாவது 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாதோர் அவற்றை அழித்துச் சென்றுள்ளனர். இதனால் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பாடசாலைச் சமூகமே அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர். இதுபற்றி கல்முனை பொலிஸிலும் வலயக் கல்விப் பணிப்பாளரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் எமக்குத் தெரிவித்தார்.

1 4

Web Design by The Design Lanka