விலையே ஓ விலையே நீ இறங்கி விடு » Sri Lanka Muslim

விலையே ஓ விலையே நீ இறங்கி விடு

price6

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


ஒவ்வொரு பெயர்களிலே
பெருகிறதே
வாழ்கின்ற தாய் நாட்டில் பொருள் விலைகள்
ஒவ்வொரு இதயங்களும் உருகிறதே
எவ்வாறு பொருள் வாங்கி வாழ்வதென்று

தும்பிக்கை ஆட்சி விலைகள்
தொடராக
எம்பிக் குதிக்குது பலர்க்கும்
இடராக

விலையே ஓ விலையே நீ இறங்கி விடு
இனியும் கூடாது குறைந்து விடு.

—–
வரிகள் என்ற பெயர்களிலே
வாழ்க்கைச் செலவை கூட்டி வைப்பார்
சுங்கம் என்றும் வேறு பெயரில்
சுமத்தி விடுவார் பாரத்தை

சூத்திரங்கள் என்று சொல்லி
மாற்றுப் பெயரில் விலை கூட்டி
பாத்திரத்தை மாற்றி மாற்றி
பழைய கள்ளை ஊற்றி நிற்பார்

டொலர் கூடும் நேரம் எல்லாம்
இவர் இங்கே அதைக் கூறி
பலர் வாடி வதங்கிப் போக
விலை கூட்டி வதை செய்வார்.

பாரு இங்கே பல பெயர்கள்
ஆனால் அனைத்தும் ஒரு செயலே
ஒரு பொருளின் விலை பல வடிவங்களில்
பாரு கூடுவதை
விலையே ஓ விலையே நீ இறங்கி விடு
இனியும் கூடாது குறைந்து விடு.

——
பிள்ளை பசி எனும் போது
பெற்ற மனது தாங்காது
உள்ள பொருளை விற்றுப் போட்டும்
உணவு கொடுத்து காத்து நிற்பார்

விற்கக் கூட பொருளுமில்லை
வேறு வழிகள் ஏதுமில்லை
மற்றவரின் பொருளை ஏனும்
கெட்ட வழியில் பெற முனைவார்

விலை கூடும் நாட்டின் உள்ளே
கொலை கொள்ளை கூடி வரும்
வழியில்லா ஏழை வாழ்வு
விழி நீரில் வாடி நிற்கும்

கூடும் விலைகள் குறைய வேணும்
வாடும் வாழ்க்கை நிறைய வேணும்
ஒரு மாற்றம் வந்து இந்த துன்பங்களை
ஓட்டி விட வேண்டும்
இறைவா ஓ இறைவா நீ
இரக்கம் காட்டு
குறைவாய் பொருள் வாங்க அருள்
நீ காட்டு

Web Design by The Design Lanka