சவுதி அரேபியா ; சிறப்பு பயான் நிகழ்ச்சி » Sri Lanka Muslim

சவுதி அரேபியா ; சிறப்பு பயான் நிகழ்ச்சி

شريحة1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்…

சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் பயான் நிகழ்சி இன்ஷா அல்லாஹ் 26/10/2018 வெள்ளிக் கிழமை இஷா தொழுகைத் தொடர்ந்து 7.30 மணியளவில் தஃவா நிலைய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் அல் கோபார் – ராக்காஹ் தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க் மஸ்ஊத் ஸலபி அவர்கள் (இலங்கை – கந்தலாய்) “முதலாம் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்களின் வாழ்க்கை வரலாறு” எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

மேலும் நிகழ்சி முடிவில் கேள்வி – பதில் இடம் பெற்று தகுந்த பரிசில்களும் வழங்கப்படும். இந்நிகழ்வில் இராப் போசனமும் தயார் செய்யப்பட்டுள்ளது.

எனவே தமிழ் அறிந்த நெஞ்சங்கள் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

شريحة1

Web Design by The Design Lanka