2 சாட்சிகள் இருந்தால் வெள்ளிக்கிழமை பெருநாள் » Sri Lanka Muslim

2 சாட்சிகள் இருந்தால் வெள்ளிக்கிழமை பெருநாள்

moon-phases-08-131008

Contributors
author image

Editorial Team

நாட்டில் எங்காவது, பிறை கண்டதாக இரண்டு பேர் சாட்சி சொல்வார்களானால், வெள்ளிக்கிழமை (15) பெருநாளை கொண்டாடலாம் என, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிடியில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற ஜும்ஆ பிரசங்கத்தின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி புனித நோன்பு ஆரம்பமானது. இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை பெருநாள் எடுக்க வேண்டி வந்தால், பிடித்த நோன்புகள் 28 ஆகவே அமையும்.

நோன்பு 28 உடன் நிறைவடைந்தால் ஒரு நோன்பை கழாச் செய்ய வேண்டும் என்பது சன்மார்க்கச் சட்டமாகும் எனத் தெரிவித்தார்.(tm)

Web Design by The Design Lanka