சவூதி அரேபிய எழுத்தாளர் ஜமால் கசோக்கி விவகாரம் » Sri Lanka Muslim

சவூதி அரேபிய எழுத்தாளர் ஜமால் கசோக்கி விவகாரம்

IMG_0017

Contributors
author image

முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது)

சவூதி அரேபிய நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் கொல்லப்பட்ட அல்லது காணாமல்போன விவகாரமே இன்று சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் சவூதி அரேபியா  பாரிய தலைகுணிவை அது சந்தித்துள்ளது.

எழுத்தாளர் ஜமால் கசோக்கி அவர்கள் உலகத்தில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை நன்கு அறிந்தவர். அத்துடன் இவர் அல்குவைதா இயக்க தலைவராக இருந்த ஒசாமா பின் லேடனினால் அதிகம் விரும்பப்பட்ட ஓர் எழுத்தாளராவார்.

பல தடவைகள் ஒசாமா பின் லாடன் இவரை அழைத்து பேட்டி வழங்கியிருக்கின்றார். அதனால் உலகில் இவர் அதிகம் அறியப்பட்ட ஓர் எழுத்தாளராவார்.

கொல்லப்பட்ட எழுத்தாளர் சவூதி அரேபிய அரச குடும்பத்துக்கெதிராக குறிப்பாக மன்னர் சல்மானுக்கும், முடிக்குரிய இளவரசர் முகம்மத் பின் சல்மானுக்கும் எதிராக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “வாசிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் கட்டுரைகளை எழுதிவருகின்றவராவார்.

இவரது மரணம் பற்றிய உண்மையை கண்டறிந்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் “வாசிங்டன் போஸ்ட்” பத்திரிகை அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றது.

சவூதி அரேபியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி அங்கு நிறுவப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தை எழுத்தாளர் ஜமால் கசோக்கி அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இவரது பிரச்சாரத்தினால் தங்களது ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பலைகள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மன்னர் குடும்பத்தினர்களுக்கு ஏற்ப்பட்டுள்ளது.

இவர் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புலில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானதும், ஆரம்பத்தில் சவூதி அரசாங்கம் அந்த செய்தியை மறுத்திருந்தது.

எவ்வளவுதான் மறுத்தாலும், கொலையாளிகளின் புகைப்படத்துடன் கூடிய ஆதாராங்கள் வெளிவந்ததுடன் தனது உற்ற தோழமை நாடான அமெரிக்காவின் அதிபரே இந்த விவகாரத்தினை பகிரங்கமாக கண்டித்திருந்தார்.

அத்துடன் இந்த கொலை விவகாரத்தினால் சவூதி அரேபியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வலுவடைந்துகொண்டு வருகின்றது.

இதனால் வேறு வழியின்றி தனது தூதரகத்தில் வைத்தே அந்த கொலை நடந்ததை சவூதி அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆனாலும் அது சவூதி அரசாங்கத்தின் கட்டளைகளின் பேரில் கொள்ளப்படவில்லை என்றும், அது பற்றி விசாரிப்பதாக கூறி பதினெட்டு சந்தேக நபர்களை சவூதி அரசு கைது செய்ததாக அறிவித்துள்ளது. ஆனால் எங்கே வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று அறிவிக்கப்படவில்லை.

தொடரும்………………………………………….

Web Design by The Design Lanka