அமைச்சர் றிசாத் பதியுதீன் கொலை முயற்சியின் பின்னணியும் , சந்தேகமும்.?????? » Sri Lanka Muslim

அமைச்சர் றிசாத் பதியுதீன் கொலை முயற்சியின் பின்னணியும் , சந்தேகமும்.??????

IMG_1101

Contributors
author image

Irshad Rahumadullah

எழுதுவது – தேசமான்ய தேசகீர்த்தி இர்ஷாத் றஹ்மத்துல்லா

(சமாதான நீதவான்,,சிரேஷ்ட ஊடகவியலாளர்)


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பிரபல அமைச்சராக இருந்த போதும்,தமது வடபுல மக்களின் எத்தனையோ தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கு உரிய காத்திரமான நடவடிக்கையினை அப்போதைய அரசாங்கம எடுக்க தவறியமையினை சுட்டிக்காட்டி அதற்கு மாற்றீடாக தற்போதைய ஜனாதிபத மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து ஆட்சியினை உருவாக்கிய பெரும் பாங்காற்றியவர் அமைச்சர் றிசாத் பதியுதீன்.இன்றைய அரசாங்கத்திலும் மிகவும் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்ட போதும் சமூக சிந்தணையுடன் பயணிக்கும் இவர பணிகளை நாட்டு மக்கள் மெச்சுகின்றனர் என்பது நாடறிந்த உண்மையாகும்.இப்படிப்பட்ட ஒரு அரசியல் தலைமையினை மௌனிக்க செய்யும் திட்டங்கள் தற்போது அம்பலத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக வடபுல மக்களின் பிரதி நிதியாக பாராளுமன்றம் சென்றது முதல் வடக்குக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த மக்களுக்கும் பணி செய்வதில் இவரை மிஞ்சுவதற்கு வேறு ஒரு அரசியல்வாதியினை ஒப்பிட முடியாது.இதனால் என்னவோ இவர் மீது பல கனைகளும்,இல்லாத பொல்லாத கதைகளும் அவ்வப்போது வெளிவருகின்றதை நோக்க முடிகின்றது.தாம் சார்ந்த மக்களின் மீள் குடியேற்றம் செய்ய முற்பட்டது முதல் இவருக்கு எதிரான திட்டங்கள் பல தரப்புக்களிலும்,குறிப்பாக முஸ்லிம் விரோத இனவாத மற்றும் புலம் பெயர் சக்திகளினால் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் அதனை முறியடிக்கும் வியூகங்களை வகுத்து செயற்பட்டவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ,இது இவரது ஆத்ம சக்தியின் துணிச்சலாகும்.

அநீதியினை கண்டால் அதனை துணிந்து தட்டிக்கேட்டு அதற்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தும் பண்பினையும் கொண்டவராக அமைச்சர் றிசாத் பதியுதீனை பல சந்தர்ப்பங்களில் பார்க்க முடிந்துள்ளது.தமக்கு எதிரான சவால்களை மிகவும் நிதானமாக முகம் கொடுத்து அது ஜனாதிபதியாக இருந்தாலும் உண்மையினை எடுத்து சொல்வதினால் அவருக்கு எதிரான கனைகளையும்,விமர்சனங்களையம் அரசுக்குள்ளும்,வெளியிலும் சமபாதித்துள்ள அரசியல் வாதி பட்டியலில் இவரும் ஒருவர் என்பதையும் இந்த சந்தரப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

இந்த நாட்டில் மட்டுமல்ல பலஸ்தீன முஸ்லிம்கள மற்றும் பர்மா றோக்கிங் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்கு முறைகளுக்கு எதிராக அந்த நாட்டு மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக இலங்கையில் ஏற்பாடு செய்யப்படும் பேரணிகளில் கலந்து கொண்டு தமது வண்மையான கணடனத்தை தெரிவிப்பதிலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் எங்கிருக்கின்றார் என்பதை புடம் போட்டு பார்க்க முடியும்.குறிப்பாக இந்த நாட்டில் 9 மாகாணங்கள் இருக்க வேண்டும் அதில் ஒன்றும் குறைக்கப்படக் கூடாது அவ்வாறு குறையும் பட்சத்தில் ஒரு மாகாண மக்கள் சிறுமைப்படுத்தப்படுவார்கள்,அது அவர்களது சுதந்திர செயற்பாடுகளுக்கு பொருந்தாது என்பதினால் வடக்கும,கிழக்கும் பிரிந்து இருக்க வேண்டும் என்பதில் விடாப் பிடியாகஇருப்பதுடன்,சிறுபான்மையாக வாழும் சமூகங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை ஓங்கி சொல்லிக் கொண்டு இருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று பலருக்கு பெரம் அச்சுறுத்தலானவர் என்ற பதிவுகளையும் நாம் பார்க்கின்றோம்.

இயக்கங்கள்,அமைப்புக்கள் எதனை மக்களுக்கு செய்கின்றதோ அதனை விட ஒரு படி கடந்து கட்சியொன்றினை அமைத்து அதன் மூலம் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் அளவுக்கு இறைவனின் துணையுடன் செயற்படுவதும்,அவரை அவ்வப்போது அசிங்கத்தமாக அவமானத்துக்குற்படுத்தியதொன்றாகும்.இதெல்லாம் நன்மையாக கருதி அதற்கு முகம் கொடுத்து இலங்கையில் ஒரு மக்கள் வலையமைப்பினை உருவாக்கியமையினை பொறுத்துக் கொள்ளமுடியாத காழ்ப்புணர்வாளர்கள் இவரை பல சந்தர்ப்பங்களில் முடக்குவதற்கு எடுத்த சந்தர்ப்பங்கள் பல.அதில் வில்பத்து,மன்னார் சம்பவம்,ஆட்சி மாற்றத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வகிப்பகம்,கிழக்கு மக்களுக்கு பணியாற்றும் போது அதற்கு எதிராக அரசியல் அதிகாரங்களை கொண்டு அரச அதிகாரிகளை அச்சுறுத்தியமை என்பன பட்டியல் இடலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் இன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் பல பொறிகளாக இலக்கு வைக்கப்பட்டுள்ள சம்பவம் மிகவும் அவதானத்துடன் நோக்கப்பட வேண்டியமொன்றாகும்.குறிப்பாக அண்மைய காலமாக ஆதாரங்களுடன் பேசப்பட்டுவரும் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் றிசாத் பதியுதீன் கொலை சம்பவம் தொடர்பிலான திட்டத்தின் பின்னணி தொடர்பில் பல்வேறுபட்ட தரவுகளும்,தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் இது தொடர்பில் அரச புலனாய்வு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் மக்கள் அறிய வேண்டிய நிலைக்கு இன்று எமது சமூகம் தள்ளப்பட்டுள்ளது.இந்த வகையில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர்,மற்றுமு் ஊழல் மோசடி செயலணியின் பணிப்பாளர் சம்பாஷனைியின் ஒளி நாடாக்களை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும் அப்போது தான் இந்த நாட்டு முஸ்லிம் தலைமைகள் உண்மையாக மக்களுக்கு பணியாற்ற விளைகின்ற போது பெற்றுக்கொள்ளும் சன்மாணம் என்ன என்பதை சரியாக தெரிந்து கொள்ளமுடியும்.

இந்த கொலைபட்டியலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உள்வாங்கப்பட்டதன் பின்னணி என்ன ?

இதற்கு முன்னதாக எம்மால் மேற்கூறப்பட்ட காரணங்கள் இருந்த போதும்,இவரது கொலையின் தீட்டல் இடம் பெற்ற இடம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு புலன் விசாரணைகளை செய்வதுடன்,இது தொடர்புபட்டவர்கள் அடையாளப்படுத்தப்படல் வேண்டும்.கடந்த ஆகஸ்ட் மாதம் மடட்க்களப்பில் நடைபெற்ற அமைச்சின் கூட்டுறவு தேசிய நிகழ்வில் கலந்து கொள்ள வருகைத்தர இருந்த ஜனாதிபதி மற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீனை இலக்கு வைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டதை நாமல் குமார வெளிப்படுத்தியுள்ளார்.ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை தொடர்பிலேயே அதிக அக்கறை செலுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பட்டியலில் அமைச்சர் றிசாத் பதியுதீனும் உள்ளீரக்கப்பட்டுள்ளது தொடர்பில் அரசும்,ஏனைய விடயங்களுக்கு வரிந்து கட்டிககொண்டு பேசும் பொருட்களும் மெளினத்துள்ளமை கவலைத்தரும் விடயமாகும்.இது ஒரு புறமிருக்க பிரான்ஸ்ஸில் இருக்கும் கொன்தராத்து காரர் ஒருவர் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கொலை சதித் திட்டத்தில் இருப்பதாக நாமல் குமார வெளிப்படுத்தியுள்ளமையினை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது என்னவாக இருக்கும் ?

இதன் மூலம் எதிர்பாரக்கப்படும் நன்மைகள் இணையும் வடக்கிழக்குக்கு எதிரான குரல் இல்லாமல் ஆகிவடும்,வடக்கிலும்,கிழக்கிலும் தமக்கு சவால் என நினைக்கும் அரசியல் கட்சிகள் வெற்றிக் களிப்பில் வழமையாக ஏமாற்று அரசியலை செய்ய முடியும்,பெரும்பான்மை சிங்கள் அமைப்புக்கு சவாலாக இருந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியான றிசாத் பதியுதீனின் அமைதி மூலம் அவர்களது இனவாத வெறித்தனமான செயற்பாடுகளை முடுக்கிவிட்டு முஸ்லிம்களுக்கு அடிமை சாசனம் எழுதுவது பிரதான காரணங்களாக மாறும்.இதனை மையப்படுத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் கொலை பின்னணியில் தொடர்புபட்டு இன்னோரன்ன நபர்கள் பெறும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்குவார்கள்.

இவற்றையும் சமூகத்தின் எதிர்காலத்தினையும கவனத்திற் கொண்டு இவரது பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் யார் ?

இந்த விடயத்தில் முதலில் தமது பாதுகாப்பினை அல்லாஹ் உறுதிப்படுத்துவான் என்ற அதீத நம்பிக்கையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது பிரார்த்தனையினை செய்து கொண்டு இருப்பார் என்ற நம்பிக்கை எமக்குண்டு,அடுத்தது அவரது குடும்பம்,அவருக்கு வாக்களித்த மக்கள்,அவர் மூலம் நன்மையடையும் மக்கள்,இதற்கு அப்பால் அவரால் உருவாக்கப்பட்ட அகில இலங்கை இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்ற பட்டியல் தான் நீண்டு செல்லும் இது தான் இயற்கையின் நியதி கோடாகும்.அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,மீன்பிடி,கடற்றொழில்,மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி அமீர் அலி அவர்கள் தலைமையில் கட்சியின் செயலாளர் சுபைர்தீன்,அரசியல் விவகார பணிப்பாளர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்,மேல் மாகாண சபை உறுப்பினர் முஹம்மத் பாயில் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனின் கொலை முயுற்சி தொடர்பில் பொலீஸ் தலைமையகத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்கள்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவித்துள்னர்.

இந்த விடயம் தொடர்பில் பொலீஸ் திணைக்களம் முன்னெடுக்கும் சட்ட ரீதியான ஆவணப்படுத்தலை நீதிமன்றில் சமர்ப்பிக்கும் போது பல விடயங்கள் வெளிப்படலாம்,அதே வேளை தமது பாதுாப்பு தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் என பாதுாப்புக்கு பொறுப்பான அமைச்சர் ரன்ஞித் மத்தும பண்டாரவுக்கு நேரடியாக தமது கோறிக்கை கடிதத்தினை கடந்த 11 ஆம் திகதி சமர்ப்பித்து இன்றுடன் 13 நாட்கள் கழிந்துள்ள நிலையில் இன்னும் இது தொடர்பில் ஏதும் நடந்ததா? என்று பார்த்தால் அதும் பார்வைக்கு தென்படவில்லை.

இதற்கும் அப்பால் தமது கட்சி செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போதைய தமது நிலை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்ட போதும் இது தொடர்பில் எவ்வித அறிக்கையும் வெளிவரவில்லை என்பதினால் தவிசாளர் அமீர் அலி தலைமையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இருந்த போதும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கொலை தொடர்பிலான தகவல் வெளியானதும்,அவரது பாதுகாப்பு தொடர்பில் மாற்றுக்கட்சி அரசியல் வாதியொருவர் இரகசிய பொலீஸில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளதாக முகப் புத்தகத்தில் வெளியான செய்தியின் விபரங்களை அறிய முற்பட்ட போதும் அதனை பெற்றுக்கொள்ள முடியவில்லை ?.

இந்த நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கொலை முயற்சி தொடர்பில் தற்போதைய நிலை தொடர்பில் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் போராளிகள் மௌனமாக இருக்க முடியாது,மௌனம் கலைந்து அமைச்சரின் பாதுகாப்புக்காக தங்களால் எடுக்கப்பட கூடிய முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது.அது மட்டுமல்லாமல் அமைச்சரின் பங்குபற்றுதலுடன் இடம் பெறும் நிகழ்வுகளில் கண்ணுக்குள் எண்ணெய்யினை ஊற்றிக் கொண்டு அவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்த என்ன செய்யலாம் என்பதை சிந்திக்க வேண்டியதுடன்,கட்சியில் மத்திய குழு மிகவும் மும்முராக சில ஏற்பாடுகளை செய்வு தொடர்பில் கலந்துரையாட வேண்டியுள்ளது என்பதை சிந்தணைக்கு விதைத்து,ஓரு மனிதன் ஒரு சிறு உதவியினை தமக்கு செய்தாலும் அதனை பெரிதாக நிணைத்து அவருக்காக பிரார்த்திப்பது தான் மனிதன் மனிதனுக்கு செய்யும் நன்றியாகும்.

Web Design by The Design Lanka