சட்டவிரோத ஆலய கட்டுமானமும், கேள்விக்குறியாகும் கல்முனையின் எதிர்காலமும் » Sri Lanka Muslim

சட்டவிரோத ஆலய கட்டுமானமும், கேள்விக்குறியாகும் கல்முனையின் எதிர்காலமும்

kalmunai

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கல்முனை மூவினமும் வாழும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொண்ட வரலாற்று முக்கியத்துவம்மிக்க ஒரு புராதன பட்டினம் ஆகும்.

நூற்றாண்டுகால வரலாறும் பாரம்பரியமும் கொண்ட இலங்கையின் பிரதான வர்த்தக நகரங்களில் ஒன்றான எமது கல்முனையில் அண்மைக்காலமாக அதன் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் சம்பவங்கள் நடந்தேறிவருகின்றன.

1986.08.10 முதல் கல்முனையில் பயங்கரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஆயுத வன்முறையால் கல்முனைப்பட்டினத்தின் இதயமாகிய“டவுண்” ஆறு தடவைகள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது. அன்றைய தினம் நமது மீன்பிடி கேந்திரமான “முனை”யையும் இழந்து அதனால் ஊரின் 50% வருமானத்தையும், படகுகள் கட்டும் இடத்தையும் இழந்து பரிதவிக்கின்றோம்.

அதேபோல 1987 முதல் கல்முனை நகரை கூறுபோட்டு அதன் பொலிவை இல்லாமலாக்குவதன் மூலம் தென்கிழக்கின் முகவெத்திலையாக கல்முனை அமையக்கூடாது எனும் காழ்ப்புணர்ச்சியில் தமிழ் இனவாதிகளும், பயங்கரவாதிகளும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கல்முனையில் நாட்டின் சட்ட ஒழுங்கு கோட்பாடுகளை மீறி கல்முனை பிரதேச செயலகத்தை இனரீதியாக பிரிக்கும் கைங்கரியத்தில் இறங்கலானார்கள். அதன் முதற்கட்டமாக 1987 முதல் “எங்கள் மண், எங்கள் மண்” என்ற கோசத்துடன் பாதையில் இறங்கி ஊர்வலம் வந்து அரச அதிகாரிகளிடம் மகஜர்களை சமர்ப்பிக்கலானார்கள் . அது வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டு இந்திய படையின் கட்டுப்பாட்டில் இருந்த காலம்.

1989.04.12ம் திகதி ஆயுததாரிகளும், தமிழ் பொதுமக்களும் சேர்ந்து ‘ENDLF கலா’வின் தலைமையில் AGA காரியாலயத்துக்குள் அத்துமீறி புகுந்து உதவி அரசாங்க அதிபராக கடமைபுரிந்த சகோதரர் முயினுதீன் அவர்களை துப்பாக்கி முனையில் எச்சரித்து 30 தமிழ் அரசஅதிகாரிகளை தனிமைப்படுத்தி உதவி அரசாங்க அதிபர் தமிழ் பிரிவு என சட்டவிரோதமாக செயற்படலானார்கள். அதற்கு இந்தியப்படையும், வடகிழக்கு மாகாண சபையும் ஆதரவு வழங்கியது. இது தான் கல்முனையின் இருப்புக்கு விழுந்த பாரிய இடி.

1992ல் AGA நிர்வாக முறை மாறி D.S. நிர்வாகமுறை அறிமுகமான போது சட்டப்படி எந்தவித எல்லையும் வகுக்காது பிரதேச செயலகம் – கல்முனை தமிழ் பிரிவு என இயங்கலானார்கள். இச்சட்டவிரோத செயலகத்தை முளையிலேயே கிள்ளியெறியாமல் விட்டது நமது அரசியல் தலைமைகள் செய்த வரலாற்றுத் தவறாகும். அதனால் இன்று தமிழ் இனவாதிகள் நமது இதயமாக இருக்கின்ற ‘டவுண்’ உடன் சேர்த்து கடற்கரைப்பள்ளிவாசல் வீதி வரை எல்லை கேட்டு போராட்டமும், சதியும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே.

இன்று அச்சட்டவிரோத செயலகத்துள் ஒரு சட்டவிரோத ஆலயத்தினை சிறுபிள்ளை பணியாரம் தின்பதுபோல திரைமறைவில் சிறிது சிறிதாக எந்தவித சட்ட அனுமதியுமின்றி கட்டிமுடித்து அடாத்தாக திறந்தும் வைத்துள்ளார்கள். இச்சட்டவிரோத ஆலயத்திற்கான அனுமதி கல்முனை பிரதேச செயலாளர் அவர்களினாலோ, கல்முனை மாநகரசபையின் நிர்வாகத்தினரலோ மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையினாலோ வழங்கப்படவில்லை.
குறித்த சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக மாநகரசபைக்கு பலமுறைப்பாடுகள் கொடுக்கப்பட்டன. எமது போரத்தினால் 2018.03.05ம் திகதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2018 மார்ச் மாதம் குறித்த கட்டுமானத்தை அகற்றுதல் தொடர்பான எழுத்து மூல உத்தரவு மாநகர சபையினால் வழங்கப்பட்டிருந்த போதும் வேலைகள் தொடர்ந்த வண்ணமேயிருந்தன. ஈற்றில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி எமது தொடர்ந்தேர்ச்சியான அழுத்தங்கள் காரணமாகவும், சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நிலையிலுள்ள மாநகர சபை முதல்வரின் அதிகாரத்தாலும் மாநகர சபையினால் கல்முனை நீதவான் நீதிமன்றத்திலே குறித்த கட்டுமானத்தை அகற்றுமாறு கோரி வழக்குத்தாக்குதல் செய்யப்பட்டது.

கல்முனையின் இருப்பை பாதுகாக்க முன்னின்ற கெளரவ மாநகர சபை முதல்வரை கல்முனை மண் வாழ்த்தியே ஆக வேண்டும்.
அண்மையில் ‘தூசன விரோதி பலகாய’ இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார பொலிஸுக்குக்கு வழங்கிய வாக்குமூலத்தில் முஸ்லிம் – தமிழ் மக்களிடையே இனக்கலவரத்தை துண்டுவதற்காக தமிழ் டயஸ்போரா தனக்கு நிதியுதவிகள் வழங்குவதாக குறிப்பிட்டது ஊடகங்கள் வாயிலாக நாம் யாவரும் அறிந்ததே! ஒரு அரச காணியில் எந்தவித அனுமதியும் பெறாமல் அவசர அவசரமாக சட்ட விரோத ஆலயத்தை தைரியமாக கட்டியதோடு, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கத்தக்கதாக அடாத்தாக திறந்துவைத்ததன் மூலம் இதன் பின்னனியில் டயஸ்போரா தொடர்புபடுவதாகும் ஐயம் எழுகிறது.
குறித்த கட்டுமானமானது வீதி எல்லைக் கோட்டிற்குள் இருப்பதாலும், முறைப்படி எந்தவித அனுமதியும் பெறப்படாத சட்டவிரோத கட்டடம் என்பதாலும், இந்த வழக்கில் வெற்றிபெறுவது கடினம் என்பதாலும், கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கவேண்டிய உப பிரதேச செயலகத்தின் நிருவாக முறைகேடுகள் வெளிச்சமாகி அதன் இருப்புக்கே சவாலாகும் என்பதாலும் இந்த வழக்கை வாபஸ் வாங்க வைக்க கல்முனை மாநகர சபை மேயருக்கு பல்வேறு அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டுவருகின்றன.

நீதிமன்ற தீர்ப்பு பாதகமாக வெளிவரின் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட வேண்டியேற்படும் என்பதால் வழக்கைத் தாக்கல் செய்தவர்களே அதை வாபஸ் பெறவேண்டும். அதற்காக தமிழ் அரசியல்வாதிகள், பாரளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை நாடுவதை ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது.

கல்முனையின் தேசிய அடையாளங்களில் ஒன்றான கடற்கரைப்பள்ளிவீதி வரவேற்பு கோபுரத்தை அகற்ற நீதி மன்றத்தை நாடி அகற்றியது, நூறு வீதம் முஸ்லிம்கள் மட்டும் வாழும் கடற்கரைபள்ளிவீதியின் பெயரை வர்த்தமானி பிரகடனம் செய்ய தடையாக இருப்பது, கல்முனையையே உருவாக்கிய எம். எஸ். காரியப்பரின் பெயரை ஒரு வீதிக்கு பெயரிட்ட போது பட்டப்பகலிலே அடாவடித்தனம் மூலம் உடைத்தெறிந்தது.

வடக்கு ஆதார வைத்தியசாலையிலுள்ள பல வருடங்கள் பழமை வாய்ந்த பள்ளிவாசலில் பெயின்ட் பூசுவற்கு கூட அனுமதிதராது மறுப்பது போன்ற விடயங்களை 75% முஸ்லிம்கள் வாழும் கல்முனை பட்டினத்தில் தடுத்து கல்முனைக்குடிக்குள் நம்மை சுருக்கி வளர்ச்சி குன்றிய ஒரு கூனிக்குறுகிய நிர்வாகத்தை உருவாக்கி நமது கல்முனை டவுணை அன்று ஆயுத பயங்கரவாதத்தால் அழிக்கமுடியாததால் இன்று தப்பான சட்டவிரோத அணுகுமுறை மூலம் அடாவடித்தனமம் மூலமாகவும் நம்மை அடிமைப்படுத்தமுனையும் தமிழ் இனவாதஅரசியல்வாதிகளின் இழி செயலுக்கு நமது முஸ்லிம் அரசியல் வாதிகள் சோரம் போவது ஒரு வரலாற்று துரோகமாகும்.

எனவே முஸ்லிம் கட்சி தலைமைகளே! பாராளுமன்ற உறுப்பினர்களே! மாநகரசபை உறுப்பினர்களே! அன்பின் கல்முனை வாழ் பொதுமக்களே!
திரைமறைவில் இந்த வழக்கை மீளப்பெறசெய்வதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகள் பற்றியும் விழிப்பாக இருப்பதோடு கட்சி பேதங்கள் மறந்து பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி இந்தப் பிரச்சினையை தன்னந்தனியே நின்று எதிர்கொள்ளும் கெளரவ கல்முனை மாநகர சபை மேயர்ஏ. எம் ரகீப் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது எமது தார்மீக கடமையாகும்.

கல்முனையன்ஸ் போரம்.

Web Design by The Design Lanka