இறுதிக் கட்ட முடிவுகளும் ,இலங்கை முஸ்லிம்களும் » Sri Lanka Muslim

இறுதிக் கட்ட முடிவுகளும் ,இலங்கை முஸ்லிம்களும்

download (1)

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

MUFIZAL ABOOBUCKER
முபிஸால் அபூபக்கர்
Mufizal77@gmail.com


Politics is a Struggle for power, என்பர் அதாவது அதிகாரத்திற்கான போராட்டம், என்பதே அதன் அர்த்தம் அந்த வகையில் இலங்கையில் இடம் பெற்றிருக்கும் அதிகாரக் காய் நகர்த்தல்களில் முஸ்லிம்கள் முட்டுக்கட்டையாக உள்ளனரா?? என்ற ஒரு பரவலான கோசம் இன்று முன் வைக்கப்பட்டுள்ள தருணத்தில் , தீர்மானம் மேற்கொள்வது வெறும் அரசியல் கட்சிகளின் பங்கு மட்டுமல்ல, மாறாக சமூகத்தின் அனைவரும் இது பற்றிய கருத்துக்களைப் பலமாக முன்வைக்க வேண்டிய தருணத்தில் உள்ளனர்..

பொறுப்புணர்வு,

முஸ்லிம் அரசியல் பலவீனம்,
அரசியலில் வெறும் அரசியல்வாதிகள் மட்டும் சமூகம் தொடர்பான முடிவுகள் மேற்கொள்வதற்கு சமூகத்தில் உள்ளோர் இடமளிப்பதும், பின்னர் பிழைகள் ஏற்படும்போது மட்டும் விமர்சிப்பதையும் விட ,தீர்மானங்களை மேற்கொள்ளும் முன்னரே தமது அபிப்பிராயங்களை முன் வைப்பது, புத்தி ஜீவிகளினதும்,அமைப்புக்களினதும், சமூகத்தலைவர்களினதும் கடமையாகும.

முஸ்லிம் பிரச்சினைகள்,…

இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் “#தனிநாடு” என்பதல்ல, தனிநாட்டுக் கோரிக்கையை எப்போதும் முஸ்லிம்கள் ஆதரிக்கவுமில்லை மாறாக அனைவருக்குமான சுதந்திரமும், ,அபிவிருத்தியும்,, சமய,கலாசார,சமூக,மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான மேலதிக, சுதந்திரமுமாகும், இந்நிலை ,இலங்கையை ஒரு சுதந்திர தாய் நாடாக ஏற்றுக் கொண்டபிரஜைகள் அனைவருக்குமான பொதுவான பிரச்சினையே ஆகும்,

ஆனாலும் அண்மைக்கால அரசியல் நகர்வுகளில் இனவாதம் காணப்பட்டமையும், சர்வதேச தலையீடுகளும் இலங்கை முஸ்லிம்களுக்கான சவால்களாக மாறி உள்ளன, இந்நிலையில் இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கும் “பதவிப் போராட்டத்தில்” ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டிய நிலையில் முஸ்லிம் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன, ..

கடந்த கால அனுபவம் ,

மஹிந்தவின் கால இனவாத செயற்பாடுகள் மைத்திரி தலைமையிலான அரசை ஆதரிக்க முஸ்லிம் வாக்காளர்களைத் தூண்டியது, ஆனால் அதன்பின்னரான நல்லட்சியும்,அதில் ரணிலின் பிரவேசங்களும், குறித்த சமூகத்தின் முழு ஆதரவைப் பெற்ற நடவடிக்கைகளாக அமைய வில்லை, இன்னும், அஷ்ரஃப் அவர்களில் ,”ரணில் சாரதியாக இருக்கும் வாகனத்தில் ஏறமாட்டேன் “என்ற கருத்து,மக்கள் மனதில் பிரதிபலித்துக் கொண்டே இருந்தது

இனவாத செற்பாடுகள்

ரணிலின் நல்லாட்சியிலும் இனவாத வன்முறைகள் இடம்பெற்றன, மட்டுமல்ல, அவை மஹிந்தவின் ஆட்சியை விட சேதங்கள் அதிகமானவையாகவும், திட்டமிடப்பட்டவையாகவும் இருந்தன.

உலக முஸ்லிம் உறவுகள்,

மஹிந்தவின் காலத்திலும், மைத்திரியின் அணுகு முறைகளிலும், முஸ்லிம். நாடுகளுடனான உறவு நிலை அதிகமானது, ஆனால் ரணில் அரசு அதிகம் மேலைத்தேய, மற்றும் இஸ்ரேல் நலன்சார் அரசாக செயற்பட்டு வந்திருக்கின்றது,… பலஸ்தீனத்தின் நீண்டகால நண்பராக ராஜபக்‌ஷ் இருப்பது இன்றும் நிலைக்கின்றது

தீர்மானிக்க வேண்டியவை,

ராஜபக்சவின் அரசின் மீதான திருப்தியின்மையின் காரணமாக கொண்டுவரப்பட்ட மைத்திரி அரசு, ரணிலின் உள்ளீர்ப்பு காரணமாக தம்மால் கூற்யவற்றை இன்று செய்ய முடியாது, போய் உள்ளதாக, இன்று ஜனாதிபதி மைத்திரி ஏற்றுக்கொண்டுள்ளதுடன், பொருளாதார வீழ்ச்சி, தனது உயிருக்கான, அச்சுறுத்தலினாலேயே, அரசியல் ஆதரவை ரணிலுக்கு விலக்கிக்கொண்டதாக ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்,.

சிந்திக்க வேண்டியது,

இந்த நிலையில் மைத்திரி, இன்னும் ஒன்றரை வருடங்கள் ஆட்சி செய்யக்கூடியவராகவும் உள்ளார்,..ராஜபக்‌ஷவின் காலத்தில் குறித்த சில அபிவிருத்திகள் முஸ்லிம்களுக்கீக இடம்பெற்றதையும் மறக்க முடியாது,
உ+மாக,..

1), வடக்கு மக்களுக்கான வில்பத்து காணிப் பகிர்வு,

2). மட்டக்களப்பில் பல நூறு ஏக்கரில் கட்டப்பட்டுள்ள பல்கலைக்கழகம், ,

3), அளுத்கம கலவரம், உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டமை, மற்றும் நட்ட ஈடுகள்

4). பயங்கரவாத யுத்த முடிவின் மூலம், முஸ்லிம்களின் அச்சம் நீக்கப்பட்டமை, இன்னும் பல..

#ராஜபக்‌ஷ மன்னிக்க முடியாதவரா???

ராஜ பக்ச தான் முன்னர் செய்த பிழைகளில் இருந்து பாடம் கற்றவராகவே, இன்று மீண்டும் வந்துள்ளார், மட்டுமல்ல சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள , அவரது எதிர்கால ஆட்சி நம்பிக்கைகளுக்காக அவர் சிறப்பாகச் செயற்படவும் வேண்டி உள்ளது,மட்டுமல்ல, இன்று ராரபக்‌ஷக்களே நாட்டு நலனுக்குத் தேவை என பெரும்பாலானோர் ஏற்கின்றனர்,

இன்னும் ராஜபக்‌ஷ முஸ்லிம்களால் அறவே மன்னிக்க முடியாத குற்றத்தை செய்யவில்லை, ,அதே பழி ரணில் அரசுக்கும் பல மடங்கு உண்டு,எனவேதான் ஒப்பீட்டு அளவில் ராஜபக்‌ஷவின் முஸ்லிம் அணுகு முறை பாராட்டுக்குரியது, ஆனாலும் வெளிநாட்டு, #Diaspora தலையீடுகள் ராஜபக்‌ஷவை “#முஸ்லிம்களின் #நிரந்தர #எதிரியாக்க” முனைகின்றனர்…இதனை நாம் நன்றாகச் சிந்திக்க வேண்டும், அதிலிருந்து மீள இது நல்ல சந்தர்ப்பம்

செய்ய வேண்டியது,…..

எனவேதான், எதிர்வரும் அரசியல் நகர்வுகளில் அதிக முஸ்லிம்களின் தெரிவினால் வந்த மைத்திரிக்கும்,தனது செயல்களில் படிப்பினை பெற்றிருக்கும் மஹிந்தவுக்கும், இன்னுமொரு வாய்ப்பினை நாம் வழங்குவதன் மூலம், முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயங்களையும், நீக்கி, இலங்கை முஸ்லிம்களின் பல்வேறு பட்ட தமது தேவைகளுக்கான தீர்வுகளையும், எதிர்காலத்தில் அடைந்து கொள்ள முடியும், இதுவே பெரும்பாலான முஸ்லிம்களின் நிலைப்பாடாகவும் அமைகின்றது,

மாறாக, தலைவர்கள் தமது சொந்த நலன் கருதி மேற்கொள்ளும் தீர்மானங்கள் அப்பாவி முஸ்லிம் மக்களின் அன்றாட வாழ்வில் செல்வாக்கு செலுத்தும் என்பதை நாம் அனைவரும் மறக்கக் கூடாது,….அதனை எதிர்கொள்ளக்கூடிய பலமான சக்திகளும் முஸ்லிம்களிடம் இல்லாமையையே அண்மைக்கால சம்பவஙகளும் உணர்த்தி. நிற்கின்றன..

Web Design by The Design Lanka