அகார இது தாய் ஊர் » Sri Lanka Muslim

அகார இது தாய் ஊர்

Agara

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அறிமுகம்
குருநாகல் மாவட்டத்திலுள்ள 14 தேர்தல் தொகுதி களுள் கட்டுகம்பளை தேர்தல் தொகுதியும் ஒன்றா கும். இத்தொகுயின் ஆரம்பத்திலிருந்து கல்கமுவ தேர்தல் தொகுதி வரையிலாக தூரம் சுமார் 75 கி.மீ. ஆகும்.
இத்தொகுதியின் தலைநகராக பன்னல நகரம் காணப்படுவதோடு, இது பன்னல பிரதேச செயல கப் பிரிவையும் உள்ளடக்கியுள்ளது.

2012ம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் பன்னல பிரதேச செயலகம் கொண்டுள்ள 123,551 மொத்த சனத்தொகையில் 114,921பேர் பெரும்பான்மை சிங்களவர்களும், 7,165 முஸ்லிம் களும், 1,400 தமிழர்களும், 65 ஏனையோர்களும் வாழ்கின்றனர்.

அமைவிடம்

பன்னலயிலிருந்து குளியாப்பிட்டிய செல்லும் பிரதான பாதையில் பம்மன செல்லும் சந்தியை அடைந்து, அச்சந்தியிலிருந்து பம்மன நோக்கி சுமார் 3 கி.மீ. தூரம் பயணம் செய்து களணியமுல்லை, போப்பிட் டிய வீதியினூடாக ஒரு கி.மீ. செல்லும் போது வலது புரமாக உள்நோக்கி அகார எனும் முஸ்லிம் களின் தாய்க்கிராமம் அமைந்துள்ளது.

குறுகலான பாதையின் ஒரு புறம் குடியிருப்புக் களையும் மறுபுரம் சிறு வயல் நிலங்களையும் பற்றைகளையும், நீரோடையையும், தூரத்தில் ஓங்கி உயர்ந்த தென்னை மரங்களையும் இக்கிராமம் கொண்டுள்ளது.

அகாரை கிராமம் பிரதான போக்குவரத்துப் பாதையிலிருந்து விலகி தொலைவில் அமைந் துள்ளதனால் இன்று இக்கிராமம் அறியப்படாமல் உள்ளது. ஆனால் புராத இலங்கையில் பன்னல பிரதேசத்தின் முஸ்லிம் பூர்வீகக் கிராமங்களுள் இது தாய்க் கிராமமாக பிரபல்யம் மிக்க ஒன்றாக காணப் பட்டது.

புராதன இலங்கையில் அகார பிரதேசம் குருநாகல், குளியாப்பிட்டி, பன்னல போன்ற பிரதேசங்களுக்கு போக்குவரத்துக்களை மேற் கொள்வதற்கான பிரதான மாட்டுவண்டிப் பாதை யும், இப்பாதையுடன் இணைந்த சிற்றாறுகளும் மக்கள் போக்குவரத்துக்கு இலகுவானதாக இருந்து வந்துள்ளன.

எல்லைகள்

சூழ பெரும்பான்மை சிங்கள கிராமங்களை எல்லைகளாகக் கொண்டதாக அகார முஸ்லிம் கிராமம் காணப்படுகின்றது.
இது கதிரப்பொல, மாயின்கம, சிங்கள அகார, கொட்டுவல்ல, நாரங்கொட ஆகிய கிராமங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

இப்பிரதேசத்து முஸ்லிம்களின் தாய்க்கிராம மாகத் திகழ்ந்த போதிலும் இன்று இக்கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை வேதனைக்குரிய தாகும். சுமார் 65 குடும்பங்களைக் கொண்டுள்ள இக்கிராமம் மாயின்கம கிராம சேவகர் பிரிவினுள் காணப்படுகின்றது.

தொன்மையும் வரலாறு

இலங்கையை ஆட்சி செய்த ஒரேயொரு முஸ்லிம் அரசனான கலேபண்டார குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்லாது இப்னு பதூதா இலங்கைக்கு விஜயம் செய்தபோது இப் பிரதேசத்திற்கும் வருகை தந்திருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

அகார எனும் முஸ்லிம் கிராமம் தம்பதெனிய இலங்கையின் தலைநகராக மாற்றம் பெற்ற காலத் தில் (1280-1450) தோற்றம் பெற்ற ஒரு கிராம மாகும்.

புராதன இலங்கையில் உள்நாட்டுக் குழப்பங் களினாலும், படையெடுப்புக்களினாலும் இராட்சி யங்களை மன்னர்கள் இடமாற்றிக் கொண்ட வரலா றுகள் ஏறாளம் இருக்கின்றன.

ம்பதெனிய இராட்சியத்தின் வட பகுதியே அகார கிராமம் காணப்படுகின்றது. இப்பிரதேசம் நீர் தேங்கி, சதுப்பு நிலத்தை கொண்ட ஒரு பிரதேசமாகும். வடக்கியிலிருந்து அந்நியப் படை யெடுப்புக்கள் தனது இராச்சியத்தை தாக்கி விடும் என்ற அச்சத்தில் மன்னனால் மக்கள் இப்பிரதேசத் தில் குடியமர்த்தப்பட் டனர்.

மன்னனின் விசுவாசமுள்ள சிங்கள, முஸ்லிம் மக்களே இப்பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டார் கள். இவர்கள் அரச படைவீரர்களும், இந்திய முஸ்லிம்களும் என கருதப்படுகின்றது.

இப்பிரதேசத்தில் நீர் தேங்கிக் காணப்பட்டதன்
காரணத்தால் இப்பிரதேசம் சிங்களத்தில் அகார என அழைக்கப்படுகின்றது. அகார சிங்கள-முஸ்லிம் என இரு வெவ்வேறு கிராமங்கள் உள்ளன. மருதமும், குறிஞ்சியும் சார்ந்த பகுதியான இங்கு தம்பி தெய்யோ என அழைக்கப்படும் தொன்மை வாய்ந்த சியாரம் ஒன்றும் காணப்படுகின்றது.

இக்கிராமத்தின் பாரம்பரியமாக அப்துல் சமது, சம்சுதீன் மாமா, சுலைமான் மாமா, அப்துல் லத்தீப், அப்துல் றஹ்மான், ஹம்மாது மாமா, அப்துல் காதர், கபூர் மஹ்தூம், லெப்பை குடும்பம் ஆகிய குடும்பங்களைச் சோர்ந்த பரம்பரம்பரையினர் வாழ்ந்து வருகின்றனர்.

காலப்போக்கில் இக்கிராம மக்கள் பம்மன, எலபடகம, பூஜ்ஜம்பொல, பாந்துறாவ போன்ற பிரதேசங்களுக்கு குடிபெயர்ந்து சென்றனர்.

இங்கு காணப்படும் சியாரம் சுற்றிவர பாதுகாப்பாக கட்டப் பட்டு அதன் அடிப்பகுதி நிலத்திலிருந்து உயர்த்தப் பட்டுள்ளது. இக்கட்டுமானத்திற்காக பயன்படுத் தப்பட்டுள்ள கற்கள் பல நூறு வருடங்கள் தொன்மை வாய்நதவையாகும்.

இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள இறைநேசர் நபிகளின் பரம்பரை வந்த தபஹ்தாபிஈன்களைத் தொடர்ந்து வந்தவர்கள் என கருதப்படுகின்ற அதே வேளை இவர்கள் எமன் தேசத்திலிருந்து இஸ்லாத்தைப் போதிப்பதற்காக இலங்கை வந்த 11 பேர் அடங்கிய குழுவினரில் ஒருவரான செய்யது இஸ்மாயில் வலியுள்ளாஹ்வாகும்.

சுமார் 300 வருடங்களாக இங்கு மௌலூதுடன் கொடியேற்றப்பட்டு, துஆப் பிரார்த்தனையுடன் கந்தூரி வழங்கும் நடைமுறை இருந்து வருந்துள் ளது.
இந்நிகழ்வுகளில் இப்பிரதேசத்து வாழ் முஸ்லிம் கள் மாத்திரமல்லாமல் சிங்கள சகோதர்களும் அன்பளிப்புக்களை வழங்குவதோடு கந்தூரி நிகழ்வு களிலும் பங்குகொள்வர்.

செய்யது இஸ்மாயில் வலியுள்ளாஹ் தமது வாழ்வில் இடம்பெறும் பல்வேறு பிரச்சினை களுக்கு தீர்வுகளையும், பிராயத்தனங்களையும் கூறிச் சென்றதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந் தனர்.

இங்கு வருகைதரும் பெரும்பான்மை சிங்கள சகோதரர்கள் இச்சியாரத்தை தம்பி தெய்யோ என அழைத்து இன ஒற்றுமையை வளர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல்கள்

அகார முஸ்லிம்களின் தாய் கிராமம் என்பதற்கு சான்றாக இங்கு காணப்படும் உம்மார் ஜூம்ஆப் பள்ளிவாசல் இருந்து வருகின்றது.

அக்காலத்தில் நாராவில, மாணிங்கம, பம்மன, தும்போதர, பாந்துராவ, பூஜ்ஜம்பொல, எலபடகம போன்ற பிரதேசங்களில் குடியேறிய முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகைக்காக அகார பள்ளிவாசலுக்கே வருகை தந்துள்ளனர்.
தூர இடங்களிலிருந்து கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும் ஜூம்ஆவுக்கு வரும் மக்கள் இரவிலலும், அதிகாலையிலும் தீப்பந்தங்களை ஏந்தியவாறு தமது பயணங்களை மேற்கொண்ட னர்.

இவ்வாறாக ஜூம்ஆவுக்கு ஓன்றுகூடும் மக்களுக்கு பகல் உணவு வழங்கி மகிழும் பழங்கம் அகார முஸ்லிம்களிடத்தில் இருந்து வந்துள்ளது. அகார முஸ்லிம்களின் இந்நடைமுறை சகோதரத் துவத்தை வளர்க்கும் ஒரு முன்மாதியாக பார்க்கப் படவேண்டிய ஒன்றாகும்.

1920 வரையான காலப்பகுதியில் அகார முஸ்லிம் கிராமம் இதுபோன்ற முன்மாதிரிகளை செயற்படுத்திக் கொண்டிருந்தது. காலப்போக்கில் பிரதேச ரீதியான சனப்பெருக்கம் ஒவ்வொரு ஊர் களிலும் பள்ளிவாசல்களின் தேவையை உணர்த்தி யது.
ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளிவாசல் உருவாக்கப்பட்ட பின்னர் அகார ஜூம்ஆ பள்ளி வாசல் இக்கிராம மக்களின் ஆண்மீக செயற்பாடு களில் மாத்திரமே பங்காற்றி வருகின்றது.

தொழில்கள்

இங்கு குடியேறிய மக்கள் காடுகளை வெட்டி சேனைப் பயிர்செய்கையில் ஈடுபட்டதோடு, விவசாயமும் செய்து வந்தனர்.

பின்னர் வியாபாரத்திலும், நகைக் கடைகள், ஹொட்டல், சிறுகடைகளையும் நிருவி தமது பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டனர்.

குறிப்பிட்ட சிலர் வெற்றிலை வியாபாரம் மற்றும் கூலித் தொழில்களும் புரிந்து வருகின்றார் கள்.

பாடசாலைக் கல்வி

சிறுதொகையான முஸ்லிகiளைக் கொண்ட தாக இக்கிராமம் காணப்பட்ட போதும் இங்குள்ள அகார முஸ்லிம் வித்தியாலயம் இக்கிராமத்தின் மிகப் பெரிய அடையாளமாகும்.

1977ல் சில மாணவர்களைக் கொண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. தரம் 1 – 5 வரையான வகுப்புக்களைக் கொண்டுள்ள இப்பாட சாலையில் இன்று மொத்தம் 35 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

தரம் 05இல் சித்தியடையும் மாணவர்கள் பம்மன, எலபடகம போன்ற பிரதேசத்து பாடசா லைகளுக்குச் செல்கின்றனர்.

இதேபோல் அகார முஸ்லிம் இக்கிராமத்தின் ஆரம்ப கல்வி ஊக்கத்திற்கான முக்கிய திருப்பமாக 2006இல் ஆரம்பிக்கப்பட்ட இக்றா பாலர் பாடசாலை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இவ்விரு கல்வி நிறுவனங்களும் மேலும் வளர்ச் சி பெற்று இக்கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு தமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என்பது எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.

இன நல்லுறவு

அகார எனும் பெயர் கொண்டு சிங்கள கிராம மும், முஸ்லிம் கிராமமும் வெவ்வேறாக காணப்படு கின்றது. இவ்விரு கிராமத்து மக்களும் காலாகால மாக மரபுரீதியான உறவுகளைப் பேணிவருகின்ற னர்.

நாட்டில் அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதக் குழுக்களினால் பற்றவைக்கப் படும் இனவாதத் தீ அகாரைப் பிரதேசத்தில் ஒரு போதும் பற்றிக் கொண்டதாக தெரியவில்லை.

இதுவரையில் நிலவிவரும் சிங்கள – முஸ்லிம் இன நல்லுறவானது எதிர்காலத்திலும் நிலைத் திருக்க வேண்டும் என இங்குள்ள மக்கள் பிரார்த் தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சியாரம் உடைப்பு

இப்பிரதேசத்தில் இயக்கவாதிகள் எதுவித வரலாற்றும் தெளிவில்லாமல் தமது கொள்கை வெறிக்காக பல நூற்றாண்டு காலம் தொன்மை யான செய்யது இஸ்மாயில் வலியுள்ளாஹ் சியாரத்தை உடைத்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.

வரலாறு என்பது ஒரு சமூகத்தின் இருப்புத் தொடர்பானது. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை தேடி அது தொடர்பான வரலாறு களைத் திரட்டும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் சியாரங்களிலிருந்து ஆரம்பிப்பதாக நிறுவுகின்ற னர்.

இவ்வாறான நிலையில் எம் முஸ்லிம் சமூகம் கண்மூடித்தனமாக நடந்து கொள்வது அனைவரா லும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பாரதூரம்

இலங்கையின் அடுத்த ஒரு இனக்கலவரம்

இடம்பெறுமானால் அது குருநாகல் மாவட்டத் தில் இடம்பெறலாம் என்ற அச்சம் சூழ்ந்துள்ள வேளையில் இப்பிரதேசத்தில் இயங்கும் சமூகப் பொறுப்பற்ற சமயவாத இயக்கவாதிகள் இவ்வா றான செயல்களில் ஈடுபட்டிருப்பது குறித்த பிரதேசத்தில் மட்டுமல்ல முழு முஸ்லிம்களுக்கும் எதிராக செய்யப்பட்ட வரலாற்றுத் துரோகமா கவே பார்க்க வேண்டியுள்ளது.

கண்டனம்

குறித்த சியாரத்தையும் அதன் அடையாளத் தையும் உடைத்தெறிந்தவர்கள் இந்நாட்டின் மரபுரிமைக்கும், பொதுக் கலாச்சாரத்திற்கும் குந்தகம் விளைவித்தவர்களாகவே கருத வேண்டும் மட்டுமல்லாது இவர்கள் எதிர்கால முஸ்லிம் இருப் புக்கான அச்சுறுத்தலை விடுக்கும் இயக்கமாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
இவ்வாறானவர்களின் வன்முறைக் குணமும், தீவிரப் போக்கும் சாதாரண முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குறியாக்குவதோடு முழுச் சமூ கத்தினதும் இருப்பையும் கேள்விக்குறியாக்கி விடுவதாக கருதப்படுகின்றது.

செய்ய வேண்டியது

குறித்த சியாரமும் நாட்டிலுள்ள ஏனைய சியாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாய நிலைக்க முஸ்லிம் சமூகம் உள்ளாக்கப்பட்டுள்ளது.

எனவேதான் இவ்விடயத்தில் முஸ்லிம் சமூக அமைப்புக்களும், பள்ளிவாசல் நிருவாகங்களும் தத்தமது பிரதேசங்களில் காணப்படும் சியாரங்கள், தொன்மையான அடையாளச் சிங்கள் போன்ற வற்றை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படல் வேண்டும்.

இன்றேல் ஏற்கனவே தமது இருப்புத் தொடர் பாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக் கும் முஸ்லிம்கள் பூர்வீகமற்ற சமூகமாக இலவாக ஒதுக்கப்பட்டுவிடுவர்.

இக்கிராமம் தொடர்பான மேலதிக தகவல்கள் உள்ளவர்கள் barakathmmc@gmail.com எனும் எனது மின்னல் முகவரி மற்றும் Athambawa Mohamed Barakathullah எனும் முகநூலுடன் தொடர்பு கொள்ளவும்.

ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்
கல்முனை

Web Design by The Design Lanka